மனித இனம் உலகில் நிலைபெற அதன் உடல்,மன பாதுகாப்பு நிலைபெறுதல் போன்ற கேள்விகளுக்கான பதிலாக வீட்டை உருவாக்கி கொண்டது.சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப அவற்றில் இருக்கின்றன பொருட்களை பயன்படுத்தி, தாமாக தமக்கு ஏற்ற வீடுகளை உருவாக்கி கொண்டனர்.
மனித இனம் பெருக பெருக உலகத்துடனான தொடர்புகள் பெருக,வியாபாரம் பெருக… இவற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.ஆரம்ப காலங்களில் மனிதன் அறியாமலேயே சூழலில் இருந்த,கிடைத்த பொருட்களை வைத்தே வீட்டை உருவாக்கி கொண்டான்.இது சூழலுக்கு உகந்ததாக இருந்தது.ஆனாலும் பின்னராக உலக வரலாற்று,சமூக மாற்றங்களினால் சிறை வைக்கப்பட்ட மனித மனத்தை பயம் ஆட்கொண்டது.
அடிப்படை தேவையான வீடு பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்,அப்படி மனித மனங்கள் நினைப்பதில் தவறில்லை.ஆனால் அவை மனிதர்களை அவர்களே சிறை வைக்குமளவுக்கு அவர்களுக்கு எதிராகவே பயன்படகூடாது.இதற்கு உண்மையில் பாதுகாப்பு என்றால் என்ன என்று தெரிய வேண்டும்..? சூழலை அழித்து,மாற்றங்களை உண்டு செய்தி சமநிலையை குழப்பும் வகையில் நாம் வீட்டு கட்டுவது ஒருநாளும் நமக்கு பாதுகாப்பாக அமையாது.
எங்கே நாம் பிழை விடுகிறோம்? நாம் கட்டும் வீடு நிறைய காலம் இருக்க வேண்டும் என்று நினைப்பதுவே முதல் பிழை! உதாரணமாக வீடு நிறைய காலம் இருக்க வேண்டுமென்று நினைத்து நாம் பாவிக்கும் சூழலுக்கு ஒவ்வாத சிமெந்து கலவைகள் மற்றும் இதர நவீன கட்டிட நிர்மாண பொருட்கள் ஒவ்வொன்றுமே சூழல் சமனிலையை குழப்பி விடுகின்றன.அவை வீட்டின் ஆயுள் காலத்தை சற்று அதிகரிக்கலாம்.
ஆனால் மனிதர்களின் ஆயுட்காலத்தை குறைத்துவிடும்,சூழலை எம்மால் தனியாக அழிக்க முடியாது ஆனால் நாம் ஒவ்வொருவரும் தனிதனியாக சூழல் சமனிலையை குழப்பும் போது அது எல்லாம் ஒன்று சேர்ந்து மிகபெரிய ஒரு சமனிலை குழப்பத்தை சூழலுக்கு/இயற்கைக்கு ஏற்படுத்தும்.அந்த குழப்பத்தை மீண்டும் சூழல் சமனிலைபடுத்தும் போது உருவாகும் விளைவுகள் மனித இனத்துக்கு தீங்காக தெரிகின்றன.ஆனால் அவை சூழலுக்கு/இயற்கைக்கு நல்லவை.
உலகம் ஒரு அற்புதமான பஞ்சபூத கலவை,நிலம் நீர் காற்று ஆகாயம், நெருப்பு என அதன் விஞ்ஞானம் மனித இனத்தால்,அறிவியலால் முழுமையாக புரிந்து கொள்ளப்படகூடியது அல்லது.ஆனால் இயற்கையுடன் நாம் ஒன்றிணைந்து வாழும் போது நமக்கு அவை புரிந்துகொள்ளப்பட்ட வேண்டிய தேவை ஏற்படாது.இயற்கையை விட்டு விலகும் போதே நமக்கு அவற்றை புரிந்து கொள்ளவேண்டிய தேவை ஏற்படுகின்றது,காரணம் இயற்கையை பார்த்து அதிலிருந்து பிரதியெடுத்து தற்காலிகமாக செயற்கையை உருவாக்கி கொள்கிறோம்.அதனை நாம் நமது ego மொத்த வெளிபாடாக மனித இனம் பார்க்கின்றது.இயற்கையை தாண்டி எம்மாலும் செய்ய முடியும் என்று சவால்விடுகின்றது.
இதிலும் இயற்கையே தன்னை குறிப்பிட்ட காலத்தின்/யுகங்களின் பின்னர் மனித இனத்துக்கு வெளிப்படுத்தி செயற்கையை படைக்க மனிதனுக்கு உதவுகின்றது.காரணம் இருக்கலாம் அது தன்னை புதுபிக்க/(அழித்தல் மூலம்) மனித இனத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பயன்படுத்தலாம்.ஆனாலும் மனிதர்களை வேர்களை/அடிப்படைகளை இயற்கை எப்போது தனது காலுக்கடியிலேயே வைத்து கொண்டுள்ளது.நாம் இயற்கை என்பது பொன் முட்டை இடும் வாத்து என்றால் சில முட்டை கள் வந்ததும் வாத்தை கைவிடுவது புத்திசாலிதனம் இல்லை.
பிரபஞ்சத்தில் எங்கு எப்படி உருவானோம்,எங்கோ போய்கொண்டிருக்கிறோம்,பூமி பந்தில் தனித்து விடப்பட்டுள்ளோமா என்று எத்தனையை ஏக்கங்களை வைத்து கொண்டே நவீன அறிவியல் தட்டுதடுமாறி பயணிக்கின்றது.அறிவியல் தட்டுதடுமாற காரணம் அது முழுமையானது இல்லை என்பதே,அதனாலேயே அது மாறிகொண்டே இருக்கின்றது.ஆனால் முழுமையான இயற்கை மாறாமல் அமைதியாக இயங்கி கொண்டுள்ளது. அறிவியல் இரைச்சல்களில் சிக்கி சீரழியாமல் இயற்கையின் அமைதியை உணர்வதே இருக்கும் ஒரே வழி! இரைச்சல்களை கேட்டு பழகிய மனித இனத்திற்கு அமைதியை கேட்க முடியாது உணர மட்டுமே முடியும் என்ற உண்மை புரியவே இன்னும் சில வருடங்கள் தேவைப்படலாம்.