Read More

spot_img

சனி கர்மா – ஆயுள் தோசம் : ஆயுளை அதிகமாக்க இவற்றை செய்யுங்கள்!

சனி கர்மா – ஆயுள் தோஷம் –

ஒரு வேலையின் ஆரம்பம் மற்றும் முடிவு இவற்றுக்கு இடையிலான காலத்தை விரிவுபடுத்தும் பண்பே சனி கிரகத்தின் காரகத்துவமாகும். ஒரு மனிதனின் பிறப்பு மற்றும் இறப்பு இவற்றுக்கு இடையேயான காலத்தை அவனது “வாழ்க்கை” எனலாம்.

இந்த பிறப்பு மற்றும் இறப்பிற்கு இடையே நடக்கும் வாழ்க்கை எனும் செயலை Extend –ஆக வைத்திருப்பதே சனியின் வேலை எனில் ஒரு மனிதன் மிக நீண்ட ஆயுளுடன் வாழவேண்டுமானால் அவனது வம்சத்தில் (DNA-வில்) சனியின் கர்மவினைகள் இருக்க வேண்டும். அல்லது புனர்பூசம், சுவாதி, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் மற்றும் கன்னி லக்கினத்தில் அதிகமான நபர்கள் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும்.

மேற்கூறிய நட்சத்திரங்கள் இயற்கையாகவே நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கான சக்தியைக் கொடுக்கிறது. ஆனால் சில கட்டுப்பாடுகளையும் சேர்த்தே விதிக்கிறது. மிகக்கடுமையாக உழைக்க வேண்டும். தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை உடல் உழைப்பிற்காக செலவழிக்க வேண்டும். இந்த விதியை ஏற்றால் ஆயுள் 100 நிச்சயம். ஆனால் இவற்றை பின்பற்றும் நபர்கள் தங்களின் தவறான போக்கு மற்றும் Non Ethical Activities –மூலமாக தங்களுக்கு இருக்கும் ஆயுள் யோகத்தை ஆயுள் தோஷமாக மாற்றிக்கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, பிறர் உழைப்பைச் சுரண்டுதல், மனிதர்களை கொத்தடிமைகளாக பயன்படுத்துல், பில்லி-சூனியம் வைத்தல் போன்ற கொடுஞ்செயல்கள் புரிவதால் ஆயுள்தோஷம் ஏற்பட்டுவிடுகிறது.

உடல் ஊனமாக பிறத்தலும் ஆயுள் தோஷத்தின் எதிர்வினையே. உலகின் மிகக் கடிமான உழைப்பாளிகளான தேனீக்கள் மற்றும் எறும்புகள் இவைகள் கட்டும் கூடுகளையோ, புற்றுக்களையோ மேற்கூறிய நட்சத்திரக்காரர்கள் கலைக்கக் கூடாது. குறிப்பாக சுவாதி நட்சத்திரம் என்பது நேரடியாகவே தேன்கூட்டைக் குறிப்பதால் இவர்கள் தேன் அருந்துவதையே தவிர்த்தல் நலம். ஆயுள் தோஷம் கொண்டவர்களது வீட்டில் உள்ள மரங்களில் தேனீக்கள் கூடு கட்டுவது யோகம் தரும். ஊர்களில் உள்ள ஆறுகள், ஏரி, குளங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறும் போது தாமாக முன்வந்து ஊதியம் பெறாமல் உடல் உழைப்பை அர்ப்பணித்தல் மற்றும் பள்ளிக்கூடங்கள், கோயில்கள், பொதுச்சொத்துக்கள் கட்டுமான வேலைகளில் சென்று உழைப்பது இவைகள் மிகச்சிறந்த பரிகாரமாகும்.

சாலையில் பேருந்து ஒன்று Start –ஆகாமல் நின்று சிரமம்படும் வேலையில் சில நபர்கள் மட்டும் கீழே இறங்கி அதை தள்ளுவதைப் பார்த்திருப்போம். அவ்வாறு தள்ளுவது கூட மிகச் சிறிய அளவில் ஆயுளை அதிகரிப்பதற்கான பரிகாரமாகும். வளர்வதற்கு மிக நீண்ட (6 மாத) காலம் எடுத்துக்கொள்ளும் “சம்பா” வகைப் பயிர்கள் மற்றும் மூங்கில் அரிசி ஆயுளை அதிகரிக்கும். தேங்காய்களை சில வாரங்கள் வெயிலில் நன்கு காயவைத்து மரச்செக்கில் (Cold Pressing Method) மிகவும் பொறுமையாக சூடேறாமல் சக்கையாக பிழிந்து எடுக்கப்பட்ட எண்ணெய் ஆயுளுக்கு நல்லது. அதை விடுத்து சிலர் தேங்காய் பாலை அடுப்பிலேற்றி காய்ச்சி எண்ணெய் எடுக்கின்றர். இம்முறையில் மிகவிரைவாக எடுக்கப்பட்ட எண்ணெய் சனி கர்மாவிற்கு எதிரானது. செய்து முடிப்பதற்கு மிகவும் காலதாமதமாகும் வேலைகளான தார்சாலைகள், இரயில் தண்டவாளங்கள் அமைத்தல் நிலக்கரி மற்றும் கனிமவளங்கள் வெட்டி எடுத்து பிரித்தல், கச்சா எண்ணெய் எடுத்தல், பெட்ரோல், டீசல் சம்மந்தப்பட்ட வேலைகள், மரச்செக்கு எண்ணெய், பழைய பொருட்களை Dismantling செய்து எடைக்கு போடுதல் போன்றவை சனி கர்மாவிற்கு உகந்த தொழில்கள் ஆகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img