Modal title

Copyright © Newspaper Theme.

Read More

நியூயோர்க்கில் வென்ற தமிழரும் யாழ்ப்பாண சமூகமும்!

தனது திறமையால் நியூயோர்க் மக்களை திரும்பி பார்க்க வைத்த யாழ்ப்பாண தமிழர்!

18 ஆண்டுகளாக நியூயோர்க் நகர மக்களின் கவனத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் ஈர்த்துள்ளார்.நியூயோர்க்கில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழரின் தோசைக்கடை அந்நாட்டு மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருடாந்த போட்டியில் விருது

- Advertisement -

இலங்கை தமிழரான திருக்குமார் கந்தசாமியின் தோசைக்கடையே இவ்வாறு பிரபல்யமடைந்துள்ளது.அதுமட்டுமன்றி 2007ஆம் ஆண்டில், சிறந்த தெரு உணவு விற்பனையாளருக்கான நியூயோர்க்கின் வருடாந்த போட்டியின் வெண்டி விருதை திருக்குமார் கந்தசாமி வென்றுள்ளார்.மேலும் திருக்குமார் கந்தசாமியின் தோசைக்கடை குறித்த விபரங்கள் 42 புத்தகங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோசையின் சிறப்பம்சம

நியூயோர்க் இரட்டைக் கோபுரம் அருகே கிறிஸ்டோபர் தெருவில் திருக்குமார் கந்தசாமியின் தோசை கடை காணப்படுவதாகவும் இவரின் கடையில் விதம் விதமான தோசைகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோசையுடன் சாப்பிடுவதற்கு தேவையான சட்னி, சாம்பார், இட்லி பொடி என அனைத்தையும் வீட்டில் இவரே தயாரித்து எடுத்துவருவதால் சுவையும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமென்பதால் இவருக்கு எல்லா நாடுகளிலிருந்தும் பாராட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

திருக்குமார் கந்தசாமி, உலகின் பல நாட்டு மக்களும் வசிக்கும் நியூயோர்க்கில் அமெரிக்கன், மெக்ஸிகன், ஐரோப்பியன், ஆப்கன் ஸ்ட்ரீட் ஃபுட்களுக்கு மத்தியில் நம் ஊர் தோசையையும் போட்டிபோட வைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதே கந்தசாமி ஊரில் இந்த கடையை போட்டிருந்தால் எப்பவோ மூடிட்டு போக வேண்டிய நிலையே 90% வீதம் அவருக்கு ஏற்பட்டிருக்கும்..அவர் எங்கு இருந்தாலும் அதே தோசையைதான் போட்டிருப்பார்,ஊரில் அவ்வாறு ஒரு கடையை அவரால் போட்டிருக்க முடியாது,போட்டிருந்தாலும் தொடர்ந்து கொண்டு நடாத்தவும் முடியாது,ஆனால் அதே ஊர் இன்று நியூயோர்க்கில் புகழ் பெற்றதும் அவரை பாராட்டுகின்றது..

ஒருவருக்கு திறமை மட்டும் போதாது,அந்த திறமையை தொடர்ந்து வளர்த்து அதனை ஏற்று கொள்ளும் சமூக சூழலும் இருக்க வேண்டும்.சமூகமா தனி மனிதர்களா என்று பார்த்தால்,எவ்வளவு பலமான திறமையான தனி மனிதர்களையும் பலவீன சமூகம் வென்று விடுகின்றது.இவருக்கு இதுதான் நடந்திருக்கின்றது.இவர் தனது திறமையை ஏற்று கொள்ளுகிற இடத்தில் அதனை செய்து காட்டியிருக்கார்..திறமை ஏற்று கொள்ளப்படும் போது தனி மனிதர்களுக்கு கிடைக்கும் உந்தம்,மிக பெரிய சாதனைகளை செய்ய அவர்களை தூண்டும்.

மாறாக பலவீனமான சமூகம் திறமைகளை ஏற்று கொள்ளாமல் தனி மனிதர்களின் திறமைகளை மழுங்கடித்து தன்னையும் அழித்து கொள்ளும்.திறமையான தனி மனிதர்கள் தம் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் இடங்களுக்கு சென்று வெற்றியை பெற்றால்,அந்த வெற்றியை தனது சமூக வெற்றியாக கொண்டாடி கொள்ளும்.குறித்த தமிழர் தனி நபராக வெற்றி பெற்றிருக்கின்றார்,அவரை பெற்றி பெற வைத்தது நியூயோர்க் மற்றும் அங்கு வரும் சமூகம் மட்டுமே..

இதில் தமிழ் சமூகமாக கொண்டாட ஒன்றுமேயில்லை..

We noticed you're visiting from France. We've updated our prices to Euro for your shopping convenience. Use United States (US) dollar instead. Dismiss