பாரிஸ் பிராந்தியத்தில் “லஸ்ஸா” வைரஸ் (Lassa virus) தொற்றிய ஆண் ஒருவருக்கு வல் – து-மானில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இரத்தக் கசிவுக் காய்ச்சலை (viral hemorrhagic fever) ஏற்படுத்துகின்ற இந்த வைரஸ் மனிதர்களில் இருந்து மனிதர்களுக்குத் தொற்றக் கூடியது என்பதால் குறிப்பிட்ட நோயாளியுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்த ஏனையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள்
மேற்கு ஆபிரிக்காவின் சில நாடுகளில் பரவிக் காணப்படுகின்ற இந்த வைரஸ் காய்ச்சல் வட அரைக் கோள நாடுகளில் – குறிப்பாகப் பிரான்ஸில்- கண்டறியப்படுவது இதுவே முதல் முறை என்பதால் அதன் மீது தீவிர கவனம் திரும்பி உள்ளது.
வாந்தி, குமட்டல், வயிற்று வலி, தலைவலி பின்னர் இரத்தக் கசிவு போன்றவை தீவிர நிலையில் இந் நோயின் அறிகுறிகள் ஆகும்.
ஆரம்பத்தில் நோய் அறிகுறிகள் பெரிதும் வெளிப்படுவதில்லை. இதனால் சுமார் எண்பது வீதமான தொற்றுக்களை தொடக்கத்திலேயே கண்டறிய முடிவதில்லை என்று சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
- விபரீத முடிவு எடுத்த பாரிஸ் இளைஞர்! இப்படியா செய்றது!
- பிரான்ஸ்: வீடு வாங்க இப்படி ஒரு வழி! சில ஆயிரம் யூரோக்கள் மிச்சம்!
- பிரான்ஸ்: 6 வயதுக்கு உட்பட குழந்தைகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை!
- பாரிஸ் மெட்ரோ பயணம்! அபராதம் அதிகரிப்பு! கவனம் மக்களே!
- பாரிஸ் Pompidou மருத்துவமனை திருட்டு! 18,000 யூரோ! தமிழர்கள் உஷார்!