Read More

spot_img

The Secret | இரகசியம் | Book Review in Tamil

இரகசியம் – Book Roast 

பிரபஞ்சம் என்ற எல்லாவற்றையும் இணைத்து கொண்டு எல்லாத்தையும் கடந்த ஒன்றாகவும் இருக்கின்றஒன்றுக்கும் உங்களுக்குமான தொடர்புகளும்.. அவற்றுக்கிடையில் தொழிற்படும் கவர்ச்சி விசைகளால்அலைகழிக்கப்படும் மனிதர்கள் அவற்றை எவ்வாறு சாதகமாக பயன்படுத்தி பிரபஞ்ச ஒட்டத்துடன்ஒத்திசைவான அபரிமிதமான ஒரு சக்தியுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுதல் பற்றி இந்த புத்தகம்பேசுகின்றது.

முழுக்க முழுக்க அற்புதமான அதிசயமான அன்பான வாழ்க்கை ஒன்று இங்கு அனைவருக்குமே சாத்தியமானதுஎன்றும் உங்கள் உணர்வுகள்,எண்ணங்கள்,உடன்படிக்கைகள் , விழிப்புணர்வுகள் , விருப்பங்கள் என்பனஎவ்வாறு பிரபஞ்சத்துடன் உங்களை ஐக்கியப்படுத்தி கொள்கின்றது என இந்த புத்தகம் விளக்குகின்றது.

மகிழ்வான மனநிலையுடன் உணர்வுபூர்வமாக நீங்கள் நம்பி விரும்பும் விடயங்களை தொடர்ச்சியா உங்கள்மனகண்ணில் திரும்ப திரும்ப கண்டு வரும் போதும் கற்பனை செய்து வரும் போதும் அவை உண்மையில்உருவாகி உங்களுக்கு நிகழ் உலகில் கிடைக்கின்றன..

எப்போதுமே தொழிற்பட்டு கொண்டுள்ள ஈர்ப்பு சக்தி மூலம் பிரபஞ்சத்துக்கு உங்களின் ஆழ்மனவிருப்பங்களை அனுப்பும் போது அது உங்களுக்கு பதில் விடையளிக்கின்றது.இவை  தெரிந்தோ தெரியாமலோஉங்கள் வாழ்வில் நடைபெற்று கொண்டுள்ள ஒரு பிரபஞ்ச செயற்பாடுதான்.இது வரை நீங்கள் உங்கள்வாழ்வில் அடைந்த நல்லது கெட்டது எல்லாமே நீங்களாக மேற்கூறிய முறையில் பிரபஞ்சத்திடம் இருந்துதருவித்து கொண்டவைதான்.

பிரபஞ்சம் பற்றி நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ இருந்தாலும் அது உங்களுடன்இணைப்பில்தான் இருக்கின்றது.அந்த தொடர்புவெளிக்கு அப்பால் உங்களால் போக முடியாது.படைப்பின்மர்மம் அதுதான்.பிரபஞ்ச தாக்கத்துக்கு உட்பட்டே உங்கள் வாழ்வு இயங்குகின்றது அதன் விதிகள்தான்உங்கள் வாழ்வை ஆக்கி கொள்கின்றன,அழித்தும் கொள்கின்றன.

உங்களால் முடிந்தது எல்லாம் அவை தரும் அபரிதமான வாழ்வை பெற்று கொள்ளுவதுதன் மூலம் அதனைபுரிந்து கொண்டு ஏற்று கொள்வதுதான்.

இந்த உலகில் அற்புதங்கள் தினசரி நிகழ்வுகள்..ஒட்டு மொத்த அபரிமிதத்தால் இந்த உலகம் நிரம்பிவழிகின்றது.பிரபஞ்ச பேருணர்வோடு இணைந்து அதன் உள்ளிருக்கும் தங்குதடையற்ற போக்கோடு போவதும்அதனுள் இருக்கும் உலகில் உங்கள் ஆத்மாவை அடை காப்பதுமே உங்கள் வேலை.

இந்த புத்தகத்தை உங்கள் கையில் எடுத்து மனதுக்கு உங்கள் பிடித்த இடத்தில் ஆற அமர இருந்து படிப்பதன்மூலம் இதுவரை கடந்து போன உங்கள் வாழ்வில் நடந்து முக்கிய சம்பவங்கள் பற்றி தெளிவைஅடைவீர்கள்,அவை ஏன் எவ்வாறு எதற்காக நடந்தன என்ற உண்மையை உணர்வீர்கள்,இதனை வைத்துஉங்கள் நிகழ்கால வாழ்வை ஒழுங்கமைத்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தை நிச்சயமாக்கி கொள்வீர்கள்..

இந்த புத்தகம் உங்களை தாண்டிய சக்தி ஒன்று உள்ளது என்பதையும் அது உங்களுக்குள்ளும்உண்டு,அதனிடமிருந்து விலகி ஓடாமல்,

அதனுடன் உங்களை ஒரு அங்கமாக்கி கொள்வதன் மூலம் அபரிமிதத்தை தினம் தினம் அனுபவிக்க முடியும்என்பதை உங்களுக்கு கற்று தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img