யூடியூபர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த யூடியூபரின் வழக்கு இன்று (23.04.2025) நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பிணைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவரது விளக்கமறியல் திகதிகள் நிறைவுற்ற நிலையில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் வழக்குநீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதும் அவருக்கு பிணை மறுக்கப்பட்டு தொடர் விளக்கமறியலில்வைக்கப்பட்டார்.
இவ்வாறான சூழ்நிலையில் இன்றையதினம் (23) விளக்கமறியல் திகதி நிறைவுற்றதையடுத்து மல்லாகம்நீதிமன்றத்தில் அவரை முற்படுத்தியவேளை ஆள் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந்த நிலையில் சமூகவலைதளங்களில் கிருஷ்ண ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களிடையே மிகபெரும் மீம்யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.. கிருஸ்ணா குடும்பத்தை தவறான வார்த்தைகளால் திட்டும்எதிர்ப்பாளர்களுடன் கிருஸ்ணா ஆதரவாளர்கள் உக்கிரமான சமூக வலைத்தள சண்டை நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடதக்கது..
ஒரு யூடிப்பர்,ஒரு அரசியல்வாதி,காட்டி கொடுத்த குடும்பத்தினர் என மூன்று எதிரிகளை குறிவைத்து மோசமாகவார்த்தை தாக்குதல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.