யாழ்ப்பாணமும் வாழ்வெட்டு குழுக்களின் அடாவடித்தனமும்!
நேற்றைய தினம் இரவு 10:25 மணி அளவில் நானும் தங்கை கவுசல்யாவும் யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கின்ற ஒரு பிரபல்யமான உணவு சாலை ஒன்றிற்கு உணவருந்த சென்று உணவு ஓடர் செய்துவிட்டு காத்திருந்த வேளை தங்கை கவுசல்யா என்னிடம் சொன்னாள் எங்களை யாரோ வீடியோ எடுக்கிறார்கள் என்று.
சரி எடுத்துவிட்டுப் போகட்டும்.
வெளிநாட்டுக்காரர்களின் பணத்தில் உல்லாசமாக உணவு உண்கிறோம் என்று நான்கு போஸ்ட்களை போட்டுக் கொள்வார்கள் விடுங்கோ என்று சொல்லிவிட்டு நான் நிதானமாக அவளுடன் உரையாடிக் கொண்டிருந்த வேளை முதன்முதலாக நிமிர்ந்து பார்த்த போது தங்கம் என்றும் ஐ லவ் யூ என்றும் கத்தியபடி இருவர் எங்களை நோக்கி வருவதை அவதானித்தேன்.
எதுவும் அறியாதவாறு ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லிக் கொண்டது ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகின்றது என்று.
தலையை குனிந்த படி தொலைபேசியை பார்த்த வண்ணம் மீண்டும் அமைதியானோம். எலக்சன் நேரம் பிச்சை எடுப்பாய் இப்போது என்ன சீன் ஓட்டுகிறாய் என சொல்லிக் கொண்டது அந்தக் கருத்த தாடி கொண்ட உருவம். மீண்டும் தலையை குனிந்து கொண்டேன். என்ன நான் சொல்வது உனக்கு கேட்கவில்லையா என்று அதட்டி கேட்டார் அந்த பெரியவர். தலையை நிமிர்ந்து சொன்னேன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் தயவு செய்து குழப்ப வேண்டாம் சாப்பிட்டு முடிய கதைக்கின்றேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் அமைதியான போது அந்த இரண்டாவது வில்லன் என் பின்னால் வந்து என் தோளில் கை வைத்து அமத்தியபடி உனக்கு நாங்கள் கதைப்பது கேட்கவில்லை என்று கேட்டார்.
கௌசல்யா சற்று பதட்டத்துடன் அண்ணா நாங்கள் போவோம் என்றாள். இரு என கைகளை பற்றிய படி சொன்னேன்.
அதன்பிறகு எனது தொலைபேசியை எடுத்து அவர்கள் உரையாடுவதை வீடியோ பண்ணினேன். அப்போது பின்னால் இருந்தவர் என் முதுகில் குத்தி என்னுடைய போனை பறித்தார். மௌனமாக எழும்பி நின்றபடி தயவுசெய்து எனது போனை தரவும் என்று கேட்டேன்.
தர முடியாது என்று ஒருவர் சொல்ல மற்றையவர் அந்த போனை உடை மச்சான் என சொல்லிக் கொண்டார். வேண்டாம் என்று சொல்வதற்கு முன்னம் என்னுடைய போனை எடுத்து மேசையில் ஓங்கி அடித்தார். அதனை எடுத்துப் பார்த்தேன் எந்த உடைசலும் இருக்கவில்லை. மௌனமாக அதனை எடுத்து காற் சட்டை பைக்குள் வைத்தபடி ஓடர் பண்ணிய சாப்பாட்டை டேக் எவே பண்ணித் தருமாறு கேட்டேன். அதற்குள் பின்னால் இருந்தவர் மறுபடியும் என் முதுகில் குத்தி பின்னாலிருந்து என்னை தாக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் நடந்தவை சம்பவம்.
ஆம் ஒரு வைத்தியன் தான்.
ஒரு சாதாரண அரசியல்வாதி தான்.
ஆனால் இந்த இலங்கை நாட்டில் அனுர அரசாங்கத்தின் புது அரசியல் கலாச்சாரத்தின் படி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. பாராளுமன்ற நிலையியல் கட்டளையின்படி பாராளுமன்ற உறுப்பினருக்கு தற்போது காப்புக்காக ஒரு கை துவக்கும் அது தவிர ஒன்றோ அல்லது இரண்டோ பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.
புது அரசியல் கலாச்சாரத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் சாதாரண ஒரு மகனும் பாதுகாப்பில்லாமல் திரியலாம் என்பது அனுர அரசாங்கத்தின் கோட்பாடாகும். உண்மைதான். நாட்டில் நீதி நியாயம் போலீசார் எல்லாம் நியாயமாக செயல்படுவார்களாக இருந்தால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது எந்த ஒரு உயர்தர அதிகாரிக்கோ பாதுகாப்பு தேவையில்லை.
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை போதை குடி என்பது யாழ் மக்களின் தலைவிதியாக மாறிப் போயிருக்கிறது.
இதிலே இணைக்கப்பட்டுள்ள இரண்டாவது வீடியோவில் அவர்கள் மீண்டும் வன்னி மைந்தன் TIK TOK தளத்திற்கு சென்று அங்கே அவர்கள் குடித்து விட்டு தான் போய் மோதி கொண்டார்கள் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் அந்த முழு வீடியோவையும் நீங்கள் கேட்டுப் பார்க்கலாம்.
அதையும் தவிர சம்பந்தப்பட்ட முதலாவது நபரின் பெயர் அதாவது ஜெர்மனியில் இருந்து வந்திருக்கும் கருப்பு உடை அணிந்து கருப்பு தாடி உடை அணிந்தவரின் பெயர் இரத்தினம் ஸ்ரீஹரன். சம்பந்தப்பட்ட நபர் ஏற்கனவே லைக்கா நிறுவனத்தில் வேலை செய்து அங்கு திருட்டு ஈடுபட்டு வேலையை விட்டு விரட்டப்பட்டவர். இவர் ஒரு சுய புகழ்ச்சி பிரியர் என அவரிடம் பக்கத்தில் இருப்பவர்களே எமக்கு மெசஞ்சர் மூலம் உண்மைகளை அனுப்பி இருக்கிறார்கள். எமது தமிழினத்தின் தலைவிதிகளில் ஒன்று புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற ஒரு சில மீண்டும் தெளிவாக எழுதிக் கொள்கிறேன் ஒரு சில காவாலிகளின் பணம். அவருடைய மகளுக்கு படத்தையும் அமைத்திருக்கிறேன் பார்த்துக் கொள்ளுங்கள் தங்கை கௌசல்யாவின் வயது தான் இருக்கும். அவரே தான் முதலில் தங்கம் வென்று அழைத்துக் கொண்டு அவளை அணுகி அவளிடம் சேட்டை செய்ய ஆரம்பித்தது. அவருடைய மனைவியும் அவருடைய மகளும் அவருடைய கணவரின் செயலுக்கு நிச்சயம் கூனிக்குறுகி நிற்க வேண்டி இருக்கும். இரண்டாவது நபரை அடையாளம் காண்பதற்காக படத்தினை இத்தோடு இணைக்கிறேன். அவர் இப்போது யாழ்ப்பாணம் போதனை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். இருக்கட்டும். ஒரு வைத்தியனாக ஒரு உயிரை காப்பாற்றவும் முடியும் அதே நேரம் ஒரு சாதாரண ஜீவனாக எனது உயிரை எனக்கு காப்பாற்றவும் தெரியும் அது தவிரவும் என்னுடன் இருப்பவர்களின் உயிரை என்னுயிரை கொடுத்தும் காப்பாற்றவும் தெரியும்.
அங்கு நின்றவர்களுக்கு தெரியும் நான் அன்றொரு வைத்தியனாக நடந்து கொள்ளவில்லை. என் உயிரையும் என்னுடன் என்னை நம்பி நிற்பவர்களின் உயிரையும் யாராவது கேள்விக்குள்ளாக்க முற்படுவார்கள் ஆக இருந்தால் தற்பாதுகாப்பின் அடிப்படையில் என்னால் முடிந்ததை நான் செய்துவிட்டு தான் இறந்து போவேன்.
இலங்கையிலே ஒரு அரசியல்வாதியின் உயிர் இப்போது சாதாரணமாக இருக்கிறது.
ஒரு மக்களின் பிரதிநிதிக்கு போலீசார் பாதுகாப்பு கொடுப்பது அரசாங்கத்திற்கு தேவையற்ற செலவாக மாறி இருக்கிறது.
நான் பாராளுமன்றத்தில் கூட தெளிவாக சொல்லி இருக்கிறேன் அனுரா அரசாங்கம் என்னை ஒரு தலைடியியாகவே பார்க்கிறது.
அனுரா அரசாங்கத்தை பொருத்தவரையில் வடக்கிலே ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு தமிழரசு கட்சியோ அல்லது சைக்கிள் கட்சியோ ஒரு போட்டி அல்ல. ஆனால் நான் ஒரு தலையிடி. அனுரா அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் நான் ஒருபோதும் போகப்போவதில்லை. அவர்களுடன் நல்ல விடயத்திற்கு ஒத்துப் போகவே நினைக்கிறேன். அவர்கள் விடும் தவறுகளை மக்களுக்காக தட்டிக் கேட்கவும் தயாராக இருக்கிறேன். அதேவேளை சுத்துமாத்து அரசியல் செய்யும் எங்களுடைய தமிழ் அரசியல் கட்சிகளின் தோல்களையும் தெளிவாகவே உரித்து நிலத்தில் போட்டிருக்கிறேன். பயிற்சி விகாரையை சுற்றி 10க்கும் குறைவானவர்கள் மட்டுமே கூவலிட்டு கொண்டிருக்கிறார்கள்.
இப்போது அவர்களுக்கு நான் ஏதாவது ஒரு வகையில் அகற்றப்பட்டால் அது ஒரு பயங்கர வெற்றியேதான். நான் அனுரா அரசின் கைக்கூலி என்று கூறிக் கொள்பவர்கள் ஒரு புறம் நான் தமிழ் தேசியத்தின் கோடாலி காம்பு என்று சொல்லிக் கொள்பவர்கள் மற்றொரு விதம்.
உண்மையில் இந்த இரண்டு தரப்புகளும் நான் ஒரு தலையிடியாகவே இருக்கிறேன்.
அரசியல் மட்டுமல்ல வைத்தியத்துறையிலும் மக்களுக்காக போராடியவன் நான்.
எது எப்படியோ இதுவரை எடுத்த காலை பின் வைத்த வரலாறு இல்லை.
வாழ்களை கொண்டு வெட்டினாலும் மக்களுக்காக இறப்பேனே தவிர பயந்து ஓடி ஒளியும் சாதாரண அரசியல்வாதியோ அரசியலுக்கு வந்த சண்டியர்களோ நான் அல்ல.
மருத்துவத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறேன்.