யாழ்பாணம் சங்குப்பிட்டியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்தில் முழுமையான உடற்கூறாய்வு வெளிவந்திருக்கிறது.
அவர் தலையில் அடிக்கப்பட்டும், எரியக்கூடிய திரவத்தால் முகத்தில் ஊற்றப்பட்டும் கடலுக்குள் தூக்கி வீசப்படிருக்கிறார். அதன் பின் இறந்திருக்கிறார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என வைத்திய அறிக்கை கூறுகிறது.
இந்நிலமையில் சட்டப்படி விசாரணைகள் அறிக்கைகள் வர முன் அவசரப்பட்டு சமூக ஊடகங்களில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார் என தவறான போலி செய்திகளை பரப்பியமை பாரதூரமான விடயமாகும். அந்த குடும்பத்திற்கு இழுக்கை அபகீர்த்தியை ஏற்படுத்தும் விடயமாகும்.
யார் இவர்களுக்கு அவ்வாறான சுதந்திரத்தை வழங்கியது. இப்படிதான் கடந்த மாதங்களில் ஒரு இளைஞன் பஸ்ஸில் நித்திரை கொண்ட பின் நடுச்சாமம் வேறொறு இடத்தில் இறங்கிய போது கள்ளன் என பிடித்து அடித்து அதை சமூக ஊடகங்களில் திருடன் என பரப்பி விட்டார்கள். பின் உண்மை தெரிந்து என்ன பலன்! உண்மையை விட பொய் தான் தீயாக பரவும். பின் அந்த இளைஞன் இந்த கேடு கெட்ட சமூகத்தில் வாழ பிடிப்பின்றி தற்கொலை புரிந்துகொண்டான். இதுவும் இந்த மண்ணில் தான் நடந்தது.
சட்டப்படி ஓர் முழு விசாரணை அறிக்கை வராது கண்ட மேனிக்கு கதை பரப்பாதீர்கள்.
அதைவிட சங்குப்பிட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் பல பவுண் நகைகளை அணிந்து சென்றாராம். ஆனால் அவரது சடலத்தில் எந்த நகையும் இல்லாமல் இருந்ததாம்!!
இன்றைய வடக்கு மாகாணம் விகாரமடைதுவிட்டது உறவுகளே பெண்களே! அவதானம் இப்போது திருடர்கள் பசிக்காக திருடவில்லை! போதைக்காக திருடுகிறார்கள்! பலர் உள்ளூரிலும் சரி சிலர் இந்தியா போல வட மாநிலங்களில் வந்து தமிழ்நாட்டில் ஒளிந்து கொலை கொள்ளை புரிவது போல( கார்த்தியின் ஓர் சினிமா படத்தில் காட்டப்பட்டது) வேறு மாவட்டங்களில் இருந்து கூட ஆளரவமற்ற இடங்களில் நின்று இப்படியான குற்றங்களில் ஈடுபடலாம்!
பெண்கள் அவதானம்!
உங்கள் பெறுமதியான நகைகளை அணிந்து செல்ல முடியா காலத்தில் வாழும் ஓர் சூழல் நிலவுகிறது. அதைவிட உங்கள் ஒரிஜினல் நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை கூட பல அணிந்து செல்வது கூட ஆபத்தானது! ஏனென்றால் கொள்ளை அடிக்க வருபவன் அதை உண்மை என்று கூட நம்பக்கூடும்!!!
மிக அவதானம் பெண்களே!!!
தூர இடங்களுக்கு போகும் போது தனியாக போவதை இயன்றவரை குறையுங்கள்! தூர பயணம் போக வேண்டி இருந்தால் உறவினர்களுடன் பயணியுங்கள், அப்படி இல்லையாயின் பல உறவினர்களுடம் தெரிவித்து விட்டு போங்கள்!
ஆளரவமற்ற்ந் வீதி பயணங்களை தவிருங்கள்.
போர்காலங்களில் கூட இப்படியான நிகழ்வுகள் அரிதாக தான் நிகழ்ந்தன| போர் நிகழ்ந்த மண் திட்டமிட்டு சீரழிக்கப்படும் என்பது இன்று கண்முன் தெரிகிறது|
மதுசுதன்
13.10.2025

