Read More

spot_img

பாரிசில் யாழ் பல்கலைகழக பொன் விழா!

யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்ழா பரிஸ் நகரில், பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

எதிர்வரும் யூன் மாதம் 08ஆம் திகதி, பரிஸ்  இன் புற நகர் பகுதியான Villeneuve  Saint- Georges எனும் இடத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

1974 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், பல தமிழ் தலைவர்களதும், கல்விமான்களதும் அயராத முயற்சியினால், இரண்டு பீடங்களுடன் மட்டும் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப் பல்கலைக்கழகம், இப்போது 13 இற்கும் மேலான பீடங்களுடன், தனது 50 ஆவது ஆண்டு நிறைவை எட்டி உள்ளது.  

இந்த மகிழ்ச்சியான தருணத்தை உலகின் பலபாகங்களிலும் வசிக்கும் பழைய மாணவர்களும் தமிழ்மக்களும் கொண்டாடி வருகின்றனர். அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் தாயகத்திலும் இந்த பொன்விழா நிகழ்வுகள் வெகு விமரிசையாக நடந்து முடிந்த நிலையில் எமது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்ட்ட நிகழ்வு பாரிஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் பூர்த்தியாகி உள்ளன.

பிரான்சில் வாழும் பழைய மாணவர்கள் மட்டுமன்றி ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பழையமாணவர்கள் கலந்து கொள்ளவுள்ள இந்த நிகழ்வு எதிர்வரும் ஜீன் 8 ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற உள்ளது.

பாரம்பரிய மற்றும் கலாசார கலை நிகழ்ச்சிகளும் இரவு விருந்தும் ஒருசேர  எமது சமூகத்தின் உயர்நிலையில் உள்ள பலரும் கலந்து சிறப்பிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைய இருக்கிறது.

தமிழ் மக்களுக்கான உயர் கல்வி நெருக்கடிகளை சந்தித்த போதிலும் எமது இன அடையாளங்கள்  அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்த நிலையிலும்,  தமிழ் பல்கலைக்கழகம் ஒன்றின் தேவை உணரப்பட்டு, மிகப்பெரும் சவால்களுக்கு மத்தியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் எமது பிரதேசத்தில் நிறுவப்பட்டது என்பது வரலாறு.  அவ்வாறு எமக்கு கிடைத்த யாழ் பல்கலைக்கழம் தொடர்ந்தும் எமது மக்களுடன் அவர்களின்  வலிகளுடன் பயணித்து வந்தது என்பதும் தொடர்ந்து வருகிறது என்பதும் நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய ஒரு விடயம் என்பதில் ஐயமில்லை.

இந்த வகையில் பிரான்ஸ், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து உட்பட, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் வசித்து வருகிறார்கள் என்பது ஒரு தோராயமான கணக்கு. அவர்களை ஒன்றிணைத்து இந்த நிகழ்வை திறம்பட ஒழுங்கு செய்துள்ளார்கள் ஏற்பாட்டாளர்கள். எனவே  ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களிலும் பரந்து பட்டு வாழும் , பல பீடங்களையும் சார்ந்த பழைய மாணவர் ஒன்று கூடும் ஒரு வரலாற்று நிகழ்வாக, இந்த பொன் விழா இருக்கும் என, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தினதும், வடக்கு கிழக்கு பிரதேச வளர்ச்சிக்கும் பல முயற்சிகளை செய்து வரும் LIFT ஆய்வு அறக்கட்டளை அமைப்பின்  அனுசரணையுடன், பிரான்ஸ் இல் வாழும் யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்து உள்ளார்கள்.

தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் இசை, நடன நிகழ்ச்சிகள், இராமநாதன் நுண்கலை பீடத்தின் பழைய மாணவர்களால்  ஒழுங்குபடுத்தப்படுகின்றன. மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் யாழ் பல்கலைக்கழக பொன்விழா நிகழ்வு எல்லோர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img