Read More

spot_img

கடத்தப்பட்ட அர்ச்சுனா எம்பியின் சகோதரர்! நடந்தது என்ன ?

வணக்கம் நண்பர்களே இவர்களால் சிறு வயதில் பண்டத்தரிப்பில் வைத்து கடத்ப்பட்டு பின் அசோகா கொட்டலில் தடுத்து வைக்கப்பட்டவன் பண்டத்தரிப்பு வதைமுகாமில் சிறுவர்கள் எனவும் பார்காமல் 11 வயதில் பொல்லுகளாலும் பனைமட்டைகளாலும் மிருகத்தனமாக தாக்கப்படவர்கள் நாங்கள் அண்ணாவின் நெத்திப் பகுதி வெடித்து இரத்தம் ஒழுகிய போதும் இவர்களது வெறித்தனம் அடங்கவில்லை வெள்ளை என ழைக்கப்படுபவரே முதன்மையானவராக இருந்தார்
அசோகா கொட்டலில் தடுத்து வைக்கப்பட்ட போது சதீஸ் என்ற அந்த அண்ணாவின் அன்பு மட்டும் இன்றுவரை நினைவில் உள்ளது முகம் மறந்து விட்டது அவர் இன்று உயிருடன் இருந்தால் நன்றியுள்ளவனாக இருப்பேன்

அண்ணாவையும் என்னையும் சுட்டு எரித்துவிட்டதாகவே என் தாயாரிடம் கூறப்பட்டு பல மாதங்களாக நாம் இல்லை என கூறிவிட்டார்கள்
என் தந்தை தேசத்துக்காகவும் தேசியத்துக்காகவும் இழந்தவை அதிகம்
த மிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பண்டத்திரிப்பு கோட்டப் பொறுப்பாளராக இருந்து இன்றும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிவா அண்ணா என் தந்தையின் வரலாற்றுப் பதிவுகளுக்கு நேரடிச் சான்று
நாம் கடத்ப்பட்டது இவர்களது மிருகத்தனமான மனிதாபிமானமற்ற செயல்

இந்த அயோக்கியன் எனது தந்தையாரை தேடி அவரை சுட்டுக் கொலை செய்ய முடியாமல் போனபோது இவனது ஒட்டுக்குழு 1987 ஆம் ஆண்டு எனது இரண்டு மூத்த சகோதரர்களை இவனது கேம்ப் ஒன்றில் பண்டதரிப்பில் ஒன்பது மாதங்களாக பணய கைதிகளாக அடைத்து வைத்திருந்த கதையை அம்மா சாகும் வரை சொல்லிக் கொண்டே இருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட எனது தந்தை 1987 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து இலங்கை வந்து தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டது மட்டுமல்லாமல் தான் அதுவரை சேர்த்த சொத்துக்களை எல்லாம் விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்காக விட்டுச் சென்ற போது எனது தந்தையாரை சுடுவதற்காக இந்த அசிங்கப்பட்ட பிறப்பு பெரியவிளான் சந்திக்கு இழுத்துச் சென்றதும் அங்கே எனது தந்தையாரை சுட ஆயத்தம் செய்த போது எனது தந்தையாரின் அக்காவின் கணவர் மற்றும் சித்தப்பா ஆகியோர் திரண்டு வந்து இவர்களை அடித்து துவக்குகளை பறித்து திரத்திய போது அதே நேரம் எனது பாட்டனார் அவருக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட துவக்கு ஒன்றினை இவர்கள் மீது இயக்கிய போது இவர்கள் அன்று உயிர் தப்பி ஓடியவர்கள் அதன் பின்னர் தந்தையைத் தேடி தினம் தினம் வீட்டிற்கு வந்து அவரை கைது செய்ய முடியாமல் போகவே அதன் பின்னர் எனது மூத்த சகோதரர்கள் இருவரையும் பண்டத் தரிப்பிற்கு பிடித்து சென்று மாதக்கணக்காக அப்பா வந்து சரணடையும் வரை அம்மாவிடம் எனது மூத்த சகோதரர்களை காட்டாமல் என் அம்மா மனம் பேதலித்து ஏறி இறங்காத வேளாங்கன்னி மாதா கோயில் இல்லை.

எனக்கு மிகத் தெளிவாக ஞாபகம் இருக்கிறது அப்போது எனக்கு இரண்டு வருடங்கள் அல்லது மூன்று வருடங்கள் வயது இருக்கும்.. வேலணையில் உள்ள
சாட்டி வேளாங்கண்ணி மாதா கோயில் தொடக்கம் சகல வேளாங்கண்ணி மாதா கோயில்கள் அனைத்திற்கும் எனது மூத்த சகோதரர்களை உயிரோடு மீட்டுத் தரும்படி எனது அம்மா தினம் தினம் மாதா சொரூபத்தின் முன்னர் அழுத வண்ணம் என்னை மடியில் வைத்திருப்பார்.

பிறப்பிலும் வளர்ப்பிலும் இந்துவாக இருந்த போதிலும் பிற மதங்களை எம்மதமாக ஏற்றுக்கொள்ள சொல்லித் தந்தவள் என் அம்மா.

காலம் வரும்வரை காத்திருக்கிறேன். இந்த
அயோக்கியனின் அரசியல் முடிவு என் கைகளால் மாத்திரம் தான் இருக்கும்.

ஒன்று இரண்டல்ல மண்டையன் குழு என்ற பெயரில் எத்தனை தமிழ் இளைஞர்களை வெட்டியும் சுட்டும் கொன்றும் எரித்தும் விளான் மற்றும் பண்டத்ரிப்பு பகுதிகளில் இவர்கள் கொத்துக்கொத்தாக கொன்றார்கள்.

இந்த அயோக்கியன் இப்போது அரசியல் கதைக்கிறான்.
ஆனால் இவன் வரலாறுகள் எமது நடமாடும் சகோதரர்களாக இப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.

முடிந்தால் தான் அவை எல்லாவற்றையும் செய்யவில்லை என்று இந்த அயோக்கியன் ஒரு வழக்கு போட்டுக் கொள்ளட்டும்.

அந்த வழக்கிலே உண்மையை ஒப்பவித்து வருடக்கணக்காக சிறையில் இந்த அயோக்கியனை என்னால் தள்ள முடியும்.

இவனுடைய முதலாவது செவ்வி தொடக்கம் இன்று வரை நான் அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

இந்த குற்றச்சாட்டுகள் போய்க் குற்றச்சாட்டுகள் அல்ல.
எந்த அவதூறுகளும் இதில் இல்லை.
ஒரு தாயின் கண்ணீர் அந்த கண்ணீரை நேரே கண்ட ஒரு குழந்தையின் எழுத்துதான் இது.

முடிந்தால் இந்த அயோக்கியனை சொல்லுங்கள் ஒரு வழக்கினை போடச் சொல்லி.
அரசியலில் அவன் கடைசி அத்தியாயம் அன்று அவன் நினைக்கவில்லை ஆனால் அவன் யாரை சுடத்திருந்தானோ அவன் பிள்ளையாலே எழுதப்படும்.

இது என் தந்தையின் மீதும் என் தாய் மீதும் என் சகோதரர்கள் மீதும் இராமநாதன் அர்ச்சுனா எழுதும் சபதம்.

🙏❤️🔥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img