குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம்வியாழக்கிழமை அதிகாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்
வேனில் பயணித்த முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
சாரதியின் நித்திரை தூக்கத்தால் அந்த விபத்து நேர்ந்திருப்பதற்கான சூழ்நிலைகள் அதிகம் உள்ளதாக சம்பவஇடத்தில் இருந்தவர்கள் City tamils செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் தலவா பொலிஸார்விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழர்கள் அதிகமாக இந்த மாதிரி விபத்துக்களில் சிக்கி உயிரை விட்டு வருகின்றனர்… கடைசி நேர அவசரபயணங்கள்,நேர சிக்கனம்,பண சிக்கனம் என மண்டைவீங்கி தனமான செயற்பாடுகளால் உயிரை விடும்சம்பவங்கள் அதிகம்,ஆனாலும் திருந்தமாட்டாம் என்று திமிர் தொடர்ந்து இவ்வாறு பலியெடுத்து வருகின்றது.