யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுணாவில் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை வீதியில் வாகனம் ஒன்றினை முந்தி செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டி , எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.இதன் cctv காட்சிகள் வெளியாகிய நிலையில் அவை நெஞ்சை பதற வைக்கும் வகையில் உள்ளன.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டி படுகாயமடைந்த நிலையில் , சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அவசரத்துக்கு பிறந்தவர்கள் இவ்வாறு இறப்பது அவர்கள் விதி,உலகம் அவர்களை ஒரே நாளல் மறந்துவிடும். தெரிந்தோ தெரியாமலோ,குடும்பத்துக்காகவோ இல்லை வெட்டியாகவோ… வேகத்தை தவிர்ப்பதே விவேகம்..மெதுவாக செலகிறவன்தான் வெற்றி பெறுகிறான் வாழ்வில்..இங்கு எதுவும் ஒரே நாளில் நடப்பதில்லை.. அப்படி இருக்க இந்த சின்ன ஒரு ரகசியம் விளங்காமல் எதுக்கு இந்த ஓட்டம்..?