Saturday, May 2, 2026
No menu items!
Home Blog Page 116

சொன்னாலும் வெட்கமடா ! சொல்லாவிட்டால் துக்கமடா !

0

காமம், கலவி இந்த சொற்களை நாம் பயன்படுத்துவதற்கே  நிறையவே யோசிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அது தவறான விடயம் அல்லவா? ஆம் என்றுதான் பலரும் கூறுவார்கள். ஏனடா  அப்படி? என்று வினவினால். சிலர் இது வெளியில் பேசுவதற்கான ஒன்றில்லை, அது ஒரு தவறான விடயம் என்று பேசி கேள்விப்பட்டுள்ளேன். காமம் தவறான விடயமென்றால் பூமியிலுள்ள அனைத்துமே தவறான ஒன்றாகவே போய்விடும். ஏன் கண்கண்ட தெய்வங்கள் என்று சொல்லும் பெற்றோரும் உட்பட.

காமம் என்பது புதிதாக எங்கோ இருந்து குதித்து நம்முள் திணிக்கப்பட்ட ஒன்று அல்ல. அனைவரிடமும் ஒன்றிணைக்கப்பட்டு காணப்படும் ஒரு வகையான உணர்வுதான். நமக்கு கோபம், மகிழ்ச்சி, துக்கம், வியப்பு என்பவை எவ்வாறு உருவாகின்றதோ அதே போன்ற  உணர்வு தான் காமமும்.  இது நம்மில் பலருக்கு தெரிவதில்லையோ ஒருவேளை  தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றனறோ எனக்கு தெரியவில்லை. 

பொதுவாக காமம் பற்றி வெளியில் பேசினால் நீ எல்லாம் என்ன மனிதர்? என்றும், அதுவும்  பெண்கள் பேசினால் நீ எல்லாம் ஒரு பெண்ணா? பெண்ணாக இருந்துவிட்டு இப்படி கதைக்கின்றாயே? என்ற கேள்விகள் தான் எழுப்பப்படுகின்றன.

சில நாட்களுக்கு முன் எனது அம்மாவிடம் நான் ஒரு புத்தகம் வாங்க போகின்றேன். அது முழுவதும் காமம், கலவி பற்றிய ஒரு விழிப்புணர்வூட்டும் புத்தகம் என கூறியபோது, எனது அம்மா என்னை ஒரு விசித்திரமான கண்ணோட்டத்தில்  பார்த்துவிட்டு  இப்போது உனக்கு இவையெல்லாம் தேவைதானா? என்று கேட்டார். ஏன் நீங்கள் கூட உங்கள்  வீட்டில் உள்ளவர்களிடம் காமம் என்ற ஒரு சொல் காதில் படும்படி கேட்டு பாருங்களேன் புரியும்? இதன் பின் உங்கள் வீட்டில் சோறு தரமாட்டார்கள் என்றால் நான் பொறுப்பல்ல.  

இதிலிருந்து தான்  விளங்கியது  எல்லாமே தொன்று தொட்டு மூடி மறைக்கப்பட்டு வருவதாலேயே நாம் அதைப்பற்றி கதைப்பதற்கு தயங்குகின்றோம். ஆனால் ஒன்று எனது அம்மாவின் பதில் தான் என்னவோ எப்படியாவது வாங்கி படிக்கத்தான் வேண்டும் என்ற ஆர்வத்தை  தூண்டியது என்று  சொல்லலாம். ஒரு விடயத்தை செய்யாதே என்றால் அதை செய்து பார்ப்பதில் நான் கெட்டிக்காரி. இப்படி சமீபத்தில் அம்மாவிடமும் திட்டு  வாங்கி வாசித்த புத்தகம் தான் லதாவினுடைய கழிவறை இருக்கை. உண்மையில் சொல்லப்போனால் காமம், கலவி என்பது பற்றிய விழிப்புணர்வு ஊட்டிய பதிப்பு என்றே சொல்லலாம்.

ஒரு பொருளை நாம் காலம் காலமாக ஒரு துணியால் கட்டி வைத்தோமானால் அதற்குள் என்ன உள்ளது என்ற ஆவல் எல்லோருக்கும் உடையதாகத்தான் இருக்கும், அதோடு சேர்ந்து அது வெளியில் சொல்லமுடியாத ஒன்று என்றும் மனத்திற்குள் பதிந்ததொன்றாக இருக்கும் . அப்படியாக இந்த சமூகத்தில் பார்க்கப்படும் காமத்தை லதா அவர்கள் எழுத்துருவம் கொடுத்தது சிறப்பாக காணப்படுகின்றது. 

ஒரு மனிதனது அடிப்படை தேவைகள் எதுவென வினவினால் உணவு , உடை , உறையுள் என்று கூறுவதே வழக்கம். அதோடு சேர்ந்து ஆதி காலத்திலிருந்தே ஒரு மனிதனுக்கு காமம் என்பது மிக முக்கியமான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. இதை இல்லை என்று ஒருவரால் கூட  கூறவியலாது.

சமூகத்தில் காமம் பற்றிய ஒரு விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் தான் பலவாறான பாலியல் குற்றங்கள் நடைபெறுகின்றன. இவற்றையெல்லாம் பார்த்து ஒருவர் வெளியில் வெளிப்படையாக பேசினால் அவரை இழிவாக கூறுவது என்று எமது சமூகம் காணப்படுகின்றது.

இக்காலத்தில் குடும்ப வாழ்கை என்று வரும் போது புதிதாக திருமணமானவர்கள் விவாகரத்து என்று நிற்பதற்கு கூடுதலாக இந்த காமம் என்பதன் விளக்கமின்மையே  காரணமாக இருக்கின்றது. இங்கு அனைவருக்குமே முறையான பாலியல் கல்வி என்பது கிடைப்பதே இல்லை. அதை கற்பிப்பதால் சமூகம் சீர்குலைந்து விடுமென்று எண்ணுகிறார்களோ தெரியவில்லை. இப்போது சீர்குலைந்திருக்கும் சமூகம் போல இருந்திருக்காது கற்பித்திருந்தால் என்று நான் நினைக்கின்றேன். பாலியல் கல்வியை முறையாக கற்றுக்கொள்ளவோ  கற்பிக்கவோ யாரும் முனைவதில்லை. ஒரு புத்தகம் தான் அதை சிறப்புற விளக்கினாலும்  அதை வாங்கி அறிவதற்கும் முனைவதில்லை.

இப்படி நிலவும் செயல்களாலேயே  காமம் என்றால்  இதில் என்னடா அப்படி  இருக்கின்றது? என்ற ஆர்வம்  இதனாலேயே  உருவாகியிருக்க கூடும். இதுவே முறையாகக் கற்பிக்கப்பட்டிருந்தால்  அட இதில் இவ்வளவுதானா  என்றுவிட்டு காமம், கலவி என்பவற்றை பெரிதாக எண்ண வேண்டிய தேவை இருந்திருக்காதோ என்னவோ!

நாம் அனைவருமே சமுகதோடு ஒன்றிணைக்கப்பட்டு காணப்படுகின்றோம்.  ஆணோ பெண்ணோ எவராயினும் ஏதோ ஒரு வகையில் பாலியல் தொல்லைக்கு உட்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.  இதற்கெல்லாம் காரணம் யாரென்று  யோசியுங்கள்? சிறு பிள்ளைக்கு கூட காமம் பற்றிய புரிதலை உண்டாக்குங்கள். அனைவரும் இதை பற்றி முழுமையாக அறிந்திருக்க லதா அவர்களின் கழிவறை இருக்கை கண்டிப்பாக உதவக்கூடிய  ஒரு புத்தகமாக காணப்படுகின்றது. 

ஒரு மனிதனுக்கு அடிப்படை ஒரு குடும்பம். குடும்ப வாழ்க்கை சந்தோஷம்  மிக்கதாகயிருப்பதத்திற்கு என்ன தேவை, காமம் பற்றிய அறிவின்மையால்  எவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றோமென்றும், ஒரு ஆண் பெண் இருவரினதும் உணர்வுகள் எவ்வாறு காணப்படுகின்றன என்றும் தெளிவான முறையில் லதா எடுத்துரைத்துள்ளார். அவரது கேள்விகள், சிந்தனைகள் என்பன கருத்துடைய  ஒன்றாகவே அமைந்துள்ளது.

உலகத்திலுள்ள அனைத்து உயிரினத்திற்கும்  முக்கியமான ஒன்றை பற்றி பேசுவதற்கு பெற்றோரோ சரி பெரியவர்களோ சரி தயங்கி நிற்க வேண்டாம். தயங்கியபடியால் தான் நமது சமூகம் இக்கட்டான நிலமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. இதன் பிறகும் காமம் பற்றி விழிப்புணர்வூட்ட தயங்குபவர் என்றால் நாட்டில் நடக்கும் பாலியல்  குற்றங்களை விமர்சித்து எந்த ஒரு பயனுமே இல்லை என்றே சொல்லுவேன்.

நன்றி.

உலகின் மூன்று வகை மனிதர்கள்! நீங்கள் எந்த வகை?

0

உலகில் மனிதர்கள் மூன்று வகையினர்..முதல் வகையினர் உள்ளுணர்வுக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துகொள்பவர்கள்,பெரும்பாலும் பண்டைய நாகரீக தொடர்ச்சியை பேணும் மக்கள்,உள்ளுணர்வை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து கட்டமைத்து கொள்ளும் சமூகங்கள்,ஆழ் மன உள்ளுணர்வு இவர்களுக்கு வழிகாட்டுதலில் வாழ்வார்கள் இவர்கள் அதிகம் சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படுவதில்லை,இதனால் அதிகமாக பயப்பிடவும் மாட்டார்கள்!

இயற்கை இவர்களின் அன்றாட அடிப்படை தேவைகளை சொந்தமாக நிறைவேற்றி கொள்ளும் ஒரு வாழ்க்கை முறையினை வாழ்ந்து கொள்வார்கள். உணவு,இருப்பிடம்,நீர் என எல்லாவ்வற்றையும் இவர்கள் சொந்தமாக இயற்கையில் இருந்து நேரிடையாக பெற்று கொள்வார்கள்.இவர்கள் சின்ன சின்ன ஆசைகளில் பேரின்பத்தை கண்டு கண்டு இயற்கையாக வாழ்ந்து கொள்வார்கள்!

மழை வந்தால் ரசிப்பார்கள், ஆட்டு குட்டிகள்,மரங்கள் இலைகள் ஆடுதல்,மின்னல்,ஆற்று நீர் என்று இவர்களின் ரசனைகள் இருக்கும். கூட்டு குடும்ப முறையில் இயற்கையான பொருட்களை வைத்து இயற்கை இருப்பிடங்களை சொந்த நிலத்தில் அவர்களாக அமைத்து கொள்வார்கள்! உணவுக்கு விவசாயம்,கால்நடைகள்,நீர் விநியோகம்,சமைத்தல் என மிகவும் இலகுவான முறையில் இவர்களின் உழைப்பு இருக்கும்! ஆழ்ந்த அமைதியுடன் வாழ்வார்கள்! எல்லாரையும் அரவணைத்து பகிர்ந்து உண்பார்கள்!

இங்கு எல்லாரும் ஒன்றுக்குள் ஒன்று,இயற்கையின் ஒருங்கிணைந்த eco system என்ற சமத்துவம் இங்கிருக்கும்,போர் பட்டினி, துன்பம் நோய்களுக்கு இங்கு இடமில்லை,சந்தேகம்,வீண் சண்டை,பொறாமை போன்ற பழக்கங்கள் இவர்களிடம் இருக்காது! இவர்களின் வாழ்விடம் இவர்களின் கால் நடை தூரத்தில் இருக்கும்.அங்குமிங்கும் ஓடி அலையமாட்டார்கள்! நிலையாக ஓரிடத்தில் வாழ்ந்து கொள்வார்கள்!

வெறும் மண்ணில் நிலா வெளிச்சத்தில் சந்தோசமாக படுத்து நிம்மதியாக தூங்க கூடியவர்கள்! மெதுவாக நடப்பார்கள்,கண்களால் சிரிப்பார்கள்! அமாவாசை இருளில் ஆயிரம் பில்லியன் நட்சத்திங்களின் கீழ் உறங்குவார்கள்! இங்கு பிரிவுகளோ மாறுபட்ட கருத்துக்களோ அதிகம் இருக்காது! சுகதேவியாக வாழ்ந்து தம்மை வாழ வைத்த இயற்கைக்கு தமது நன்றியுணர்வை கொடுத்து அதனை கடவுளாக மதித்து மகிழ்வான நினைவுகளோடு சாவை வரவேற்று அதனை கொண்டாடி இறப்பார்கள்!

அடுத்து இரண்டாம் வகையினர்: இவர்கள் கற்றறிந்த மக்கள் கூட்டமாக இருப்பார்கள்! பண்ணைய நாகரீக தொடர்ச்சியை தவறவிட்ட அல்லது கலப்பாக தோன்றி சமூக கூட்டங்களாக இருப்பார்கள்! மேல் மனதின் அலையும் போக்கில் இவர்கள் வாழ்க்கையும் வரலாறும் இருக்கும்! கண் போன போக்கில் கால் போக ஆசைப்படும் சமூகம் இவர்கள்!

உள்ளுணர்வை இயற்கையை நம்ப மாட்டார்கள்,அதிகமாக சிந்திப்பார்கள்,இயற்கையை அழித்து அதிலிருந்து விலகி வாழ நினைப்பார்கள்! இயற்கையை வெறுப்பார்கள்,எல்லாம் செயற்கையாக உருவாக்க கொள்வதே சிறப்பு என்று அதற்கான கட்டமைப்பை உருவாக்கி கொள்வார்கள்,எல்லாமே படிப்பு,பின்னர் பணம் என்ற அடிப்படையில் உருவான நகரத்து சமூகத்தை தோற்றுவிப்பார்கள்.

நகரங்களின் பின்னர் அரசுகளையும் தோற்றுவிப்பார்கள்! அடிப்படை வசதிகளை தாண்டி ஆடம்பர,அதிகார ஆசைகளுக்காக அதிகம் வாழ நினைப்பவர்கள்,வானுக்கும் மண்ணுக்கு தாவ பேராசைபடுவார்கள்! இவர்களின் அதிகபட்ச உழைப்பே பணத்தையும் தங்கள் கீழ் வாழும் மக்கள் கூட்டத்தையும் அவர்களுக்காக வேலை செய்ய வைப்பதாக இருக்கும்.

ஆழ்ந்த அமைதி மகிழ்வான வாழ்க்கை என்பது இவர்களுக்கு எட்டாகனி,போட்டி பொறாமை,பயம் போன்றவற்றை சமூகத்தில் விதைத்து அதனை வட்டியோடு அறுவடை செய்து கொள்வர்கள்!
இவர்களின் வாழ்விடம் ஒரிடத்தில் நிலையாக இருக்காது.ஊர் விட்டு ஊர்,கண்டம் விட்டு கண்டம்,கோள் விட்டு கோள் கூட தாண்டுவார்கள்! மனித இனத்தை முன்னேற்ற போவதாக கூறி கொண்டே இருப்பார்கள்!

விரைவில் விடியல்,துன்பங்கள் எல்லாம் தீரும் என்பார்கள்! ஆனால்
எல்லாவற்றையும் அடிமைப்படுத்தி,ஆள்வதற்கே ஆசைப்படுவர்கள்! சமூகத்தை ஒரு பிரமிட் கட்டமைப்புக்குள் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி ஒன்றை ஒன்று தாழ்த்தி கொள்வதாகவும் எல்லாவற்றின் மேல் முடியில் தாம் இருப்பது போன்று உருவாக்கி கொள்வார்கள்! இவர்களின் உலகில் பசி பட்டினி போர் துன்பம் நோய் என்பன எப்போது தாண்டவமாடி கொண்டிருக்கும்.

இங்கு எல்லாவற்றிலும் பிரிவுகள் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும், உலகில் பிரச்சினைகள் அதற்கு தீர்வுகள் பின்னர் அதிலிருந்து இன்னொரு பிரச்சினைகள்,அதற்கு தீர்வுகள் என்று மனித ஈகோ வளர்ந்து கொண்டே செல்லும்,
Ego system) வாழ்வை வரலாறை தொலைத்துவிட்டு ஆசைகளுடன் அவலமாக சாவுக்கு பயந்து ஓடி ஓடியே இறப்பார்கள்!

முதல் இரண்டு வகையினரும் எண்ணிக்கையில் சொற்பமாக இருப்பார்கள் . முதல் வகையினர் மிக சொற்பமாக அவர்கள் இருப்பதே உலகிற்கு தெரியாத நிலையில் இருப்பார்கள், இரண்டாம் வகையினர் அதிகாரத்தில் அதிகமாக இருப்பார்கள்! மூன்றாவது வகையினரே எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள்.இவர்கள் இரண்டு வகைக்கும் இடைப்பட்டு காணப்பட்டாலும் இரண்டாவது நகரத்து சமூக வாழ்வியலால் அதிகமாக ஈர்க்கப்பட்டு கொண்டுள்ளவர்களாக இருப்பார்கள்! இந்த மூன்றாவது வகையினரே அதிகமாக நகர,அரச சமூகத்தை இயக்கும் சக்தியாக இருப்பார்கள்!

இவர்களை பொறுத்தவரை பிறப்பது ஏற்கனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ள கல்வி திட்டத்தில் இருப்பதில் பிடித்ததை படித்து விட்டு வேலைக்கு சென்று இரண்டாவது வகையினர் உருவாக்கி இயக்கி கொண்டிருக்கும் Ego systemக்கு தோள் கொடுப்பார்கள்,இவர்களுக்கு படித்த கல்வி பட்டத்தை சமூக அந்தஸ்து போதையாக்கி மாதாந்த சம்பளத்தை லஞ்சமாக கொடுத்து அடிமைப்படுத்தி இவர்கள் தாம் அடிமைகள் என்று உணராத வகையில் வைத்திருப்பார்கள்! மாத சம்பளம் பெறுவதை உலகின் மிக பாதுகாப்பான ஒன்றாக உணர்வார்கள்!

விழுந்து விழுந்து வேலை செய்வார்கள்! அப்படி வாழ்வதை பெருமையாக நினைத்து கொள்வர்கள்! இவர்களுக்கு பொழுதுபோக்கும் சிற்றின்பமுமே அதிக நாட்டமாக இருப்பார்கள்,ஆண்டு விடுமுறையில் பெரும் பணம் செலவழித்து விடுமுறை சுற்றுலா சென்று முதலாம் வகையினர் ஆயுள் முழுதும் வாழும் வாழ்க்கையே நான்கு நாட்கள் வாழ்ந்து சந்தோசப்படுவார்கள்,அழுது கொண்டே விடுமுறை முடித்து வெறும் கையோடு வேலைக்கு திரும்புவார்கள்.ஆனாலும் முதலாம் வகை வாழும் வாழ்க்கைக்கு முழுமையாக திரும்ப இவர்களுக்கு விருப்பம் இருக்காது! நகர சிறையில் நோகாமல் மாத பணத்தில் வாழ்வது போதுமென நினைப்பார்கள்,இவர்களை பய உணர்வை ஆட்டுவிக்கும்.

இவர்களிடம் சொத்து என்று குறிப்பிடதக்க பேப்பர் பண தாள்கள் மட்டுமே இருக்கும்,அந்த பணதாள்களும் இவர்கள் கையில் இல்லாமல் இரண்டாம் வகையினர் உரிமையுள்ள வங்கிகளில் இருக்கும், குடியிருக்க நிலமில்லாத அடுக்குமாடி வீடுகளில் சிறை போன்ற ஆனால் அலங்கரிக்கப்பட்ட கூடுகளில் நகர மத்தியில் அதை அந்தஸ்து என்று பெரும் விலை கொடுத்து அல்லது மாதம் மாதம் பணம் செலுத்தி வாழ்வார்கள்! கார்கள் விமானங்கள் என்று போக்குவரத்து,ஆடம்பர பொருட்கள் வாங்க,பொழுது போக்கு என்று இவர்களை அடிமைபடுத்தி வைத்திருக்க நரக சிறைகள் நகரங்கள் என்ற பெயரில் இயங்கும்,இவர்களும் தலைமுறைகளும் அங்கு நிரந்தர கைதிகள்!

போர் அழிவுகள்,பஞ்சம் பட்டினி,இயற்கை அழிவுகள்,நோய் என்று அதிகமாக பாதிக்கப்படுவர்கள் இவர்களாகதான் இருப்பார்கள்! தமக்குள் ஒரு வட்டத்தை வரைந்து அதற்கு அடிமை வாழ்வை வாழ்ந்து ஏன் வாழ்கிறோம் எதற்கு என்று தெரியாமல் ஓட்டமும் நடையுமாக திரிந்தே இறந்து போவார்கள்!

வாழும் உலகின் தலைவிதியை இந்த மூன்றாவது வகையினரே தீர்மானிப்பார்கள் ஆனால் இவர்களிடம் சொந்த வழி எதுவும் இருக்காது! இவர்கள் வெறும் பின்தொடர்பவர்களாகவே இருப்பார்கள்,தங்களுக்கு சாதி மதம் இனம் என பிரிந்து கிடப்பார்கள்,இவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது!
முதலாவது வகையினரிடம் இயற்கையான ஒரு வழி இருக்கும்,இரண்டாவது வகையினரிடம் செயற்கையான ஒரு வழி இருக்கும்,ஆனால் மூன்றாம் வகையினரிடம் சொந்தமாக ஒரு வழி இல்லாமல் தம்மை அதிகமாக கட்டுபடுத்துகின்றன ஆளுகின்ற இரண்டாம் வகையினரின் பின்னால் செல்வார்கள்…சென்று கொண்டுள்ளனர்….

ஆனால் இவர்களில் இருந்துதான் அவர்கள் பிறப்பார்கள்….

இந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவரா? தந்தை கவனம்!

0

சிம்ம லக்னம் —————————— ஒவ்வொரு ராசிக்கட்டத்தின் சின்னத்திற்கும் அதற்குள் இருக்கும் ஒரு நட்சத்திரமே காரணமாக இருக்கும். உதாரணத்துக்கு மீன ராசிக்கு ரேவதி, கும்ப ராசிக்கு சதயம், தனுசு ராசிக்கு மூலம், விருச்சிக ராசிக்கு கேட்டை என சொல்லிக் கொண்டே போகலாம். இந்த ராசிகள் எல்லாம் அந்த ராசிக்குள் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தினுடைய பண்புகளின் அடிப்படையிலேயே தனது பெயர் மற்றும் சின்னத்தை பெற்றுள்ளன.

இந்த வரிசையில் சிம்ம ராசிக்குள் இருக்கும் மிக முக்கியமான நட்சத்திரம் “மகம்” ஆகும். மகம் என்றால் பிரம்மாண்டம் என்று பொருள். ஒரு சிறிய விசயத்தை மிகப் பெரிதாக காட்டக் கூடிய தன்மை என்றும் பொருள்படும். அதன் சின்னமான “அரச மரம்” தன்னோடு ஒரே நிலத்தில் சேர்ந்து வளரக்கூடிய அத்துனை மரம் செடி கொடிகளையும் மட்டையாக்கி விட்டு தன்னை மட்டும் பிரம்மாண்டமாக காட்டிக் கொண்டு வளரும் தன்மையுடையது.

இதை ஒரு வகையில் ஈகோ என்றும் கூறலாம். குறிப்பாக இதனை சிங்கத்தின் குணத்துடன் ஒப்பிடலாம். சிங்கம் தனக்கு மேல் உள்ள தலைமையை (தந்தையை) போட்டுத் தள்ளிவிட்டு அந்த இடத்தை பிடிக்க எண்ணும் குணமுடையது. அதனால்தான் அந்த வீட்டிற்கே சிம்மம் எனப் பெயர் வந்தது. இதை நிரூபிக்க ஒரு வழி உள்ளது. சிம்ம லக்கினத்தில் பிறந்தவரின் ஜாதகத்தில் லக்கின அதிபதி சூரியன் தந்தையைக் குறிக்கும் 9-ஆம் இடத்தில் உச்சம் அடைந்து தனது தந்தையை Address இல்லாமல் Dummy ஆக்குகிறார்.

இதனை “காரகோ பாவநாஸ்தி” என்றும் அழைக்கலாம். அதே சிம்ம லக்னத்திற்கு மாமனாரைக் குறிக்கும் 3-ஆம் இடத்தில் (துலாம்) சூரியன் நீச்சமாகிறார். அப்போது சிங்கத்தின் இந்த Character மாமனாரிடம் எடுபடாது. மாமனாரின் தொழில், அதிகார நிலை வலிமையாக இருக்கும். ஜாதகருக்கும் மாமனாருக்குமான உறவு மிக நன்றாக இருக்கும். சிம்ம லக்கின ஜாதகர் சூரியனின் கர்மவினையை வாங்கினால் மேற்கூறிய விதிகள் 100 சதவிதம் பொருந்தி வரும்.

சொல்றதுக்கு ஒன்றுமில்லை : பகுதி I

0

நிறுத்துங்கள்! சற்று சிந்தியுங்கள். நாம் அனைவரும் ஒன்றுதானா என்று. ஆழமாகபோனால் ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒன்றில் வேறுபட்ட  ஒன்றாக தான் உள்ளது. இப்பொழுது சொல்வீர்கள் எல்லாமே வேறு வேறு தானே  என்ன சொல்ல வருகிறாள் இவள் என்று. எல்லோருமே ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டது என்று கூறிவிட்டு ஏன் தொழில், கல்வி என்று வரும்போது பொதுவாக எல்லோருமே ஆண் என்றால் பொறியியலாளர் பெண் என்றால் மருத்துவர். இந்த இரண்டு வேலையை தவிர உலகத்தில் ஒன்றும் இல்லை என்பது போல திட்டமிட்டு சொல்கின்றனர்.

அனைவருக்கும் தெரியும் எல்லோரும் ஓர் வேறுபட்ட உயிரினம் தான் என்று ஒவ்வொரு உயிருக்கும் ஏதோ ஒரு வகையில் ஒரு திறன் இன்னொருவரை காட்டிலும் சிறப்பாகவே இருக்கும். அனைவருமே ஒரே வகையான வேலையைத்தான் செய்ய வேண்டுமென்றால் மற்றைய வேலைகளை செய்ய நாம் புதிதாக ஒன்றை  உருவாக்கத்தான் வேண்டும்  இல்லையானால் அனைவருமே எல்லாம் அறிந்தவராய் தான் இருக்க முடியும். இங்கு அனைத்தும் அறிந்தவர் என்று யாரும் இல்லை. ஏனோ நாம் அதை பொருட்படுத்தாமல் அனைவரும் செல்லும் பாதையில் செல்ல வேண்டும்?

சற்று நாட்களுக்கு முன் என் நண்பனின் உரையாடல் என்னை சற்று யோசிக்க வைத்ததென்றே சொல்லலாம். “ஏன் அனைவரும் யாரோ ஒருவனின் திறனால் ஒழுங்கமைத்து உருவாக்கப்பட்ட ஒரு தொழிலை நோக்கியே  சென்றுகொண்டு இருக்கின்றோம்” என்ற கேள்வியே. அவரின் கேள்வி, கேட்கும்போது விநோதமாக இருந்தாலும் ஆழமாக  பார்க்கும்போது சிந்திக்கவேண்டிய ஒன்றாகத்தான் இருக்கின்றது.

உதாரணமாக வைத்தியர் தொழிலையோ பொறியியலாளர் தொழிலையோ பார்த்தோமானால் … என்னடா இது இரண்டும்தான் இவளுக்கு தொழில் போல் தோன்றுகின்றது என்று எண்ணாதீர்கள். நான் கேட்டு அறிந்ததில் அதிகப்படியாக 90 சதவீதமானோர்  கூறுவது இதைத்தான் அதனால்தான் இதை உதாரணம் காட்டுகின்றேன். சரி நமது கருத்திற்குள் செல்வோம் . வைத்தியர் தொழிலோ பொறியியல் தொழிலோ எந்த தொழிலோ ஆழமாக சென்றால் அது யாரோ ஒருவரின் உருவாக்கமும் திட்டமிடலுமாகத்தான் உள்ளது . நாம் தானே  சொல்கின்றோம் இப்பிரபஞ்சத்தில் இருக்கும் அனைவரும் மறுபட்ட வேறுபட்டவர்கள் என்று ஏன் நம்மில் உள்ள ஒரு திறனை கொண்டு நாமே புதியதாக உருவாக்க முடியாதா?

அப்படி பார்த்தோமானால் பூமியிலுள்ள அத்தனை உயிரிடமிருந்தும் புதியதாக எத்தனை பொருள் உருவாகியிருக்கும்.சற்று சிந்தியுங்கள். இங்கு ஒருவர் உருவாக்கியதைத்தான் தூக்கிக்கொண்டு  உலகமும் நாமும் செல்வதாலேயோ என்னவோ  மனிதமூளை  பயன்படுத்தவேண்டிய அளவிலும்  குறைவாகவே பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றோம் . இங்கு பல பேரிற்கு  தன்னை பற்றி சிந்திக்கவே இக்கால கட்டத்தில் நேரம் இல்லையென்றபோது எப்படி நமக்குள் இருக்கும் திறனை வெளிக்கொணர்வது? என்ற எனது கேள்வி முடடாள் தனமாகத்தான் உள்ளது.

பிரபஞ்சத்தில் அனைவரும் ஏதோ ஒன்றின் கீழ் அடிமைப்பட்டுதான் காணப்படுகின்றோம் . ஒருவர் மட்டும் சிந்தித்து எந்த பயனுமில்லை மாறவேண்டியது மனித இனத்தில் நிறையவே உள்ளது .நமது முந்தய சந்ததி எழுதி நிறுவி வைத்தது ஒன்றை வழிகாட்டியாக பயன்படுத்தலாம். அதனையே எடுத்துகொண்டு  சிறு மாற்றமும் செய்து விட்டு திட்டமிட்டு  செயற்ப்படுத்துகின்றோம் என்றால் ஏதோ ஒன்றின் கீழ்தான் நாம் இருக்கின்றோம் என்பதை அறிய வேண்டும். நாமாக எதனை செய்தோம் என்றால் கேள்விக்குறிதான்.

இதை பார்த்துவிட்டு மாறுபவர்களும்  தேவைதான் மாறாமல்  இருப்பவர்களும் தேவைதான் எல்லோரும் ஒன்றை ஒரேடியாக விட்டு வந்தாலும் சமநிலையும் குழம்பிவிடும் அல்லவா? குழப்புகின்றாள் என்றாலும் பரவாயில்லை குழம்பி தெளியுங்கள்.  நான்  சொல்வது நல்ல திறமை நல்ல சிந்தனை இருப்பவர் கூட அதை பயன்படுத்த தெரியாமல் ஏதோ ஒன்றின் பின் செல்வதுதான் முட்டாள்தனமாக உள்ளது. எனது சிந்தனையில் தோன்றியதை உங்கள் முன்வைத்துள்ளேன் இனி மாறுவதும் மாற்றுவதும் தத்தமது கைகளில் தான் உள்ளது.

தொடரும்…

உணவு – உலக இயங்கியல் : பகுதி I

0

மனிதர்கள் இரு வகையான உணவுகளை உண்பார்கள்…உலகில் பெரும்பாலான  மக்கள் 90% சைவ-அசைவ உணவுகளை உண்பவர்களாக இருக்கிறார்கள்.. வெறும் 10% அல்லது அதற்கும் குறைந்த மக்களே சைவ உணவுகளை உண்கிறார்கள்.இந்த இரு வகை உணவுகளுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால்.. சூரிய ஒளியில் இருந்து நேரடியாக உணவை தயாரித்து வாழும் தாவரங்கள் சார் உணவுகளை உட்கொள்வதாகும்… அசைவ உணவுகள் என்பன விலங்குகள் அவற்றின் இறைச்சிகளை உண்ணுவதாகும்.. 

இங்கு உண்மையில் உணவுகள் எவற்றால் வித்தியாசப்படுகின்றன என்று பார்த்தால்..சூரிய ஒளியை முதலில் உறிஞ்சி கொள்ளும் தாவரங்கள்,பின்னர் தாவரங்களை உண்ணும் விலங்குகள்,விலங்குகளை உண்ணும் விலங்குகள் என இந்த சங்கிலி இருக்கின்றது.இங்கு மனிதர்கள் அதிகமாக தாவரங்களையும் விலங்குகளையும் உண்கிறார்கள்.

சரி இந்த 10% சைவ உண்ணும் மக்களும் 90% மாமிச உண்ணும் மக்களும் எவ்வாறு வேறுபடுகின்றனர் என பார்த்தால்,சைவ உணவுகளை உண்பவர்கள் தாவரத்தின் , சூரிய இயல்புகளை அதிகம் பெறுகின்றனர்.அதாவது  

Stilness இயல்புடையவர்களாக அதிகம் இருப்பார்கள்.. இவர்கள் அதிர்ந்து பேசமாட்டார்கள்,உடல் உழைப்பு மிக குறைவாக செய்வார்கள்..மனம் கட்டுக்குள் இருக்கும்,அலைபாயும் எண்ணங்களை இலகுவாக அடக்க கூடியவர்களாக இருப்பார்கள்,சிறு முதலாளிகள் தொடக்கம் உலகை ஆளும் இயக்கும் பெரும் தொழில்களில் ஈடுபடுவார்கள்,கல்வி கற்றல் கற்று கொடுத்தல்,திட்டங்கள், ராஜதந்திரங்கள் வகுத்தல் நாடுகளை ஆளுதல் போன்ற ஒட்டு மொத்த ஆளும் வர்க்கத்துக்குரிய இயல்புகளை கொண்டிருப்பார்கள்.

இதற்கு காரணம் இவர்களின் மன – உடல் இயல்பு சூரியனின் இயல்பை அதிகமாக உள்வாங்கி கொண்டிருப்பதுதான்.தவிர  Stillness இயல்பு மூலம் இவர்கள் இத்தகைய தகுதிகளை பெற்று கொள்கிறார்கள்.இவர்கள் அசையமாட்டார்கள்,இருந்த இடத்தில் இருந்து உலகை,மக்களை அசைத்து கொள்ளும் சக்தி படைத்தவர்கள்,சூரியனின் , ஒளியின் வேலை இதுதான்.

உடல் உழைப்பு இவர்களுக்கு தேவையில்லை என்பதால் மெல்லிய தோற்றமுள்ளவர்களாகவே அதிகமாக இருப்பார்கள்..உடல் அதிகமாக இல்லாமல் இருப்பதால் இவர்கள் மூளை அதிகமாக வேலை செய்யும்.. 

[உலகின் புத்திசாலிகள்,அறிவாளிகள் பெரும்பாலும் மெல்லிய உயரமானவர்களாக இருப்பார்கள் என்கின்றது உளவியல் ஆய்வு.. ]

இவர்கள் தனிமை விரும்பிகள்,இது சூரியனின் ஒரு குண இயல்பு என்று கூட சொல்லலாம்..சமூகத்தை விட்டு ஒதுங்கியே வாழ்வார்கள்,உலகிலேயே மொத்தம் 10% தான் சைவம் உண்பவர்கள்,இவர்கள் அநேகம் உலகத்தோடு தொடர்பே இல்லாமல் வாழ்பவர்கள்தான்.

இத்தகைய இயல்புகளால் இவர்கள் இருந்த இடத்தில் இருந்தே சமூக உலக மனிதர்களின் இயல்புகளை அறிந்து கொள்கிறார்கள்,கொள்கைகள் திட்டங்களை வகுத்து அவற்றை செயற்படுத்துகின்றனர்.உலகை இணைத்தல்,பெரிய வியாபாரங்கள்,சமூக அரசியல்கள் என்று எல்லாவற்றையும் இவர்களே தீர்மானிக்கும் சக்திகளாக விளங்குவதற்கு இதுவே காரணமாகும்.

அடுத்து மாமிச உணவு உண்பவர்களை பார்க்கலாம்,இவர்கள் நிலையற்ற தன்மை உடையவர்களாக இருப்பார்கள்,சமூகமாக சார்ந்து இயங்குவார்கள்..இவர்கள் இயக்கப்பட்டு கொண்டே இருப்பார்கள்..நிலையாமை இவர்களின் அடிப்படை குணம்..இவர்கள் உடலும் மனமும் தொடர்ந்து அலைந்து கொண்டே இருக்கும்.கூட்டமாக வாழ்வார்கள்… உடல் உழைப்பு அதிகமாக இருக்கும்..இவர்கள் உலகில் 90% ஆக இருந்தாலும் ஆளப்படுகிற கூட்டமாக இருப்பார்கள் [கடைசி இரண்டாயிரம் வரலாறு படி] கல்வியறிவு சார் விடயங்களில் ஒரு எல்லையை தாண்டி இவர்களால் சிந்திக்க முடியாமல் இருக்கும்.அதனால் நாடு சமூக விதிகளை கடைப்பிடித்து வாழ வேண்டிய நிர்பந்தமும் அதனால் ஏற்படும் மன அழுத்ததங்களினுள்ளும் வாழ்வார்கள்.

சரி இந்த 90% ஆளப்படும் மக்களை ஆளும் 10% இவர்கள் இருவரும் எவ்வாறு ஒரே உலகை இயக்குகிறார்கள் என்றால்,அதற்கு இவர்களின் 10% சைவ சூரிய இயல்பை கொண்ட நிலைத்த தன்மையும்,90% அசைவ மக்களின் நிலையாத தன்மையும் ஒன்று சேரும் போதே நடக்கின்றது. உதாரணமாக சொன்னால் எவ்வாறு ஒரு கார் அச்சு அசையாமல் இருந்தால்தான் அதை சுற்றி காரின் சில்லு அசைந்து காரை இயக்கும்..

அதே போல 10% சைவ இயல்பு மக்கள் Stillness அவர்களின் நிலைதன்மையை அதாவது காரின் அச்சு போன்றது.. அதனை சுற்றி நிலையில்லாத 90% மக்கள் கூட்டமாக சில்லு போன்று சுற்றுகின்றது..உலகம் இப்படிதான் இயக்கப்படுகின்றது..சிறிதாக நிலையாக இருக்கும் அச்சு தேய்ந்து அழிந்து போவதில்லை.. அதன் இயல்பால் இது வலிமையாக இருக்கின்றது.ஆனால் சுற்றி சுழலும் சில்லு பெரிதாக இருந்தாலும் தேய்ந்து அழிவடைந்து கொண்டே இருக்கும்,அடிக்கடி சில்லுகள் மாற்றப்பட்டு கார் அதாவது உலகமும் தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கும்.

இங்கு சில்லு , அச்சு தனிதனியாக இருந்தால் பலன் ஏற்படாது தமது இயல்புகளை இணைக்கும் போதே இயங்கியல் சாத்தியமாகின்றது.உலகமும் இயங்க இந்த இரண்டும் தேவை..அதுவும் 90:10 என்ற விகிதம் போதுமான சமனிலையை ஏற்படுத்துகின்றது என்று நாம் எடுத்து கொள்ளலாம்..அதாவது உலகின் 10% கூட்டம்தான் 90% மக்கள் கூட்டத்தை இயக்குகின்றது என்று எடுத்து கொள்ளலாம்…

தொடரும்…

The Greatest Secret Chapter – One : Spoiler Review.

0

கோடிக்கணக்கானோர் இருக்கின்ற இந்த உலகில் ஒரு சிலரே பேருண்மையை கண்டுபிடித்துள்ளனர் அவர்கள் தங்களுடைய துன்பங்கள் மற்றும் வாழ்க்கையின் எதிர்மறைகளில் இருந்து முற்றிலுமாக விடுதலை பெற்று நிரந்தர மகிழ்ச்சி மற்றும் அமைதியில் திளைத்து கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் இங்கு முற்றிலும் விடுதலை என்பதும் நிரந்தர மகிழ்ச்சி என்பதும் எவ்வாறு வருகின்றது என்றால் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு வருவதாலோ அல்லது  ஒன்றை விட்டு விட்டு விலகுவதால் வருவதில்லை, இரண்டுக்கும் இடையே ஏற்படுகின்ற சமநிலைத் தன்மை தான் இந்த முற்றிலும் விடுதலை மற்றும் நிரந்தரமான மகிழ்ச்சியை மக்களுக்கு கொண்டு வருகின்றது.

மீதி மக்களும் இதைத்தான் ஒவ்வொரு நாளும் தேடுகின்றனர். இந்த சமநிலை தன்மையைத்தான் மக்கள் தேடி வருகின்றனர். வரலாறு நெடுகிலும் விஞ்ஞானிகள் தீர்க்கதரிசிகள் மதத் தலைவர்கள் ஆகியோர் இந்த ரகசியத்தை தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுதி வைத்துள்ள போதிலும் நம்மில் பெரும்பாலானோர் இந்த மாபெரும் கண்டுபிடிப்பு குறித்து ஏதும் அறியாதவர்களாக இருக்கின்றோம் என்று சொல்ல முடியாது.நாம் எல்லோருமே அதனை நோக்கியே பயணப்பட்டு கொண்டுள்ளோம்.ஆனால் அந்த உண்மையான சமனிலை தன்மையில் இருந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு தூரத்தில் இருக்கின்றோம்.

உதாரணமாக ஒருவர் பயணத்தில் உண்மை சமனிலை தன்மைக்கு அருகில் இருப்பதால் பின்னால் வரும் மற்றவர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை என்று சொல்லமுடியாது,அதே போல் பயணத்தில் மற்றவர்கள் பின்னால் இருப்பதால் முன்னாள் இருப்பவர்தான் எல்லாமும் என்று பின்னால் வருபவர்களும் நினைக்க கூடாது.முன்னால் இருப்பவர் பின்னால் இருப்பவர் புரிந்து கொண்டவர்கள்,புரியாதவர்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் நாம் தேடி பயணப்பட்டு கொண்டிருக்கும் உண்மை சமனிலைதன்மை.

சில மதங்களில் இந்த பேருண்மை பிற மதங்களில் கூறப்பட்டுள்ளது போல் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூறப்படவில்லை என்றாலும் அனைத்து மதங்களின் அடிநாதமாக விளங்குவது இந்த உண்மை தான் மாபெரும் உண்மை. நம் எல்லோரின் பார்வையும் படும்படியாக தான் வைக்கப்பட்டுள்ளது நம் சுவாசத்தை விட மிக அருகிலேயே அது நமக்கு இருக்கின்றது ஆனால் நாம் அதை தவறவிட்டு விடுகிறோம் என்று நினைப்பதே தவறான விடயம்

 நாம் அதை பார்க்கும் அதை உணர்ந்து கொள்ளும் தூரத்தில் இன்னும் எமது பயணம் எமது அதன் அருகில் வரவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் தொடர்ந்து பயணப்பட்டு கொண்டுதான் இருக்கின்றோம். அந்த இரகசியத்தை அந்த சமநிலைத் தன்மையை நோக்கி ஆனால் நாம் அவற்றைப் புரிந்துகொள்ளும் படியோ அல்லது அந்த உண்மைக்கு அருகில் வர வேண்டிய தூரம் இன்னும் வரவில்லை. ஆனால் அதை நோக்கி தொடர்ந்து பயணப்பட்டு கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மையாகும் அதைத்தான் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இங்கு எதுவுமே இரகசியம் அல்ல ஒரு ரகசியத்தை ஒளித்து வைக்க சிறந்த இடம் அதை எல்லோர் பார்வையிலும் படும்படியாக ஓர் இடத்தில் வைக்க வேண்டும் என்று புராதான பாரம்பரியம் அறிந்து வைத்திருக்கின்றனர் என்று சொல்வது தவறு இங்கு எதுவுமே ரகசியம் இல்லை இங்கு எல்லோருக்கும் படும்படியாக எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் அது இருக்கின்றது. அது குறித்த ஆழமான விழிப்புணர்வும் எல்லோருக்கும் இங்கு உண்டு. ஆனால் அவர்கள் அதற்கு பயணப்படும் பயண தூரத்தை வைத்துக் கொண்டு அந்த ரகசியம் தொடர்பான அறிவு இல்லை என நம்மால் முடிவெடுக்க முடியாது.

எல்லோருமே அந்த ரகசியத்தை நோக்கியும் அந்த உண்மையை நோக்கிய பயணப்பட்டு கொண்டிருக்கிறோம்.இங்கு அந்த பயணம் மட்டுமே நடைபெற்று கொண்டுள்ளது.

நாம் இந்த உண்மையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தவறவிட்டு வந்திருக்கிறோம் என்று நினைப்பது தவறு நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த உண்மையை நெருங்கி வந்திருக்கின்றோம். 

நம்முடைய பிரச்சனைகளால் நம்முடைய வாழ்க்கை எனும் நாடகத்தின் காட்சிகளால் உலக நடப்புகளால் ஏற்படும் கவன சிதறல்களால் நம் பயணம் தடைப்படவில்லை.இங்கு  எந்த வாய்ப்பையும் நாம் தவறவிடவில்லை.அவரவருக்குரிய வாய்ப்புக்கள் பயணத்தில் அவரவருக்கு கிடைத்து கொண்டுள்ளது.

எந்த ஒரு ரகசியங்களும் உங்கள் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போடப் போவதில்லை.எந்த  ஒரு கண்டுபிடிப்பும் நம்மை துன்பங்களில் இருந்து விடுவித்து நிறைந்த மகிழ்ச்சியுடன் வைத்திருக்கப் போவதில்லை. ஆனால் இங்கு எதுவுமே நம்மை புரட்டிப் போடப் போவதில்லை. ஒவ்வொரு மாற்றங்களுமே மாறாத ஒன்றை சுற்றித் தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.அந்த மாறாத ஒன்றை நோக்கிதான்  நாம் பயணப்பட்டு கொண்டுள்ளோம்.

எங்கள் மாற்றங்களிடையே ஒரு மாறாத தன்மை இருக்கின்றது என்ற விழிப்புணர்வு கிடைக்கும் வரை நம் பயணம் தொடரும்.

எதிர்மறை சிந்தனைகள்,மனதளர்ச்சி,கவலை,மனகாயம்,துன்பங்கள் என உங்களை தடுத்து நிறுத்துவதாக நீங்கள் நினைத்து கொண்டிருக்கும் எல்லாமே இரகசிய பயணத்தில் உங்களின் எரிபொருட்கள்.அவற்றை எரித்து அதன் சக்தியை கொண்டு நாம் தொடர்ந்து பயணப்பட்டு கொண்டுள்ளோம்.எமது நீண்ட பயணத்தில் நாம் கடந்து வரும் எல்லாமே நமக்கான எரிபொருட்கள்தான்.

நம்முடைய துன்பங்களுக்கான அடிப்படை காரணமாக நம்முடைய உண்மையான இயல்பு குறித்து அறியாமை என்று சொன்னால் தவறு 

அந்த அறியாமையால் ஏற்படும் துன்பங்களை எரிபொருளாக கொண்ட அந்த இயல்பை அறியும் பொருட்டு  நாம் தொடர்ந்து பயணப்பட்டு கொண்டிருக்கின்றோம் என்றே எடுத்து கொள்ள வேண்டும்.

நம்மை குறித்து நாம் நம்பிக் கொண்டு இருக்கின்ற ஒன்று உண்மை அற்றதாக இருப்பதால்தான் நாம் துன்புறுகிறோமா?  

உண்மையற்று இருப்பதுதான் தான் மாற்றத்துக்கு உள்ளாகும் மாற்றத்தின் மூலமே எமது பயணம் தொடர்ந்து கொண்டுள்ளது என்ற உண்மையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இங்கு நமது வாழ்க்கையில் வருகின்ற விஷயங்கள் குறித்த எந்தவிதமான கட்டுப்பாடுகளும் எங்களுக்கு இருக்கா இல்லையா என்பதை இங்கு முக்கியமே 

இல்லை ஏனென்றால் நாங்கள் எல்லோருமே ஒரு பயணத்தில் ஒவ்வொரு தூரத்தில் பயணப்பட்டு கொண்டுள்ளோம். அது எம்மை எங்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ அங்கு 

கொண்டு சேர்த்துக் கொள்ளும். ஒவ்வொருவரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தூரத்தில் இயங்கிக் கொண்டு இருக்கின்றோம். நாம் இங்கு எதுவுமே செய்ய தேவை இல்லை அந்தப் பயணம் காலத்தை தாண்டி நிறைவு பெறும் நாம் எதுவுமே செய்ய வேண்டியதில்லை.மாறி கொண்டிருக்கும் உலகியல் காரணிகள் உங்கள் வாழ்வில் குறைய குறைய நீங்கள் மாறாத ஒன்றை உங்கள் பயணத்தில் நெருங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

நம்முடைய உண்மையான இயல்பை புரிந்து கொள்வது என்றால்? எது என்னுடைய உண்மை இயல்பு? அந்த உண்மையை எது , யார் புரிந்து கொள்ள வேண்டும்?  நாம்தான் உண்மை இயல்பாக இருக்கும் போது எதற்கு நாம் அதனை புரிந்து கொள்ளவேண்டும்? அந்த புரிந்துணர்வு எம்மிடம்தானே எப்போதும் உண்டு.நாமே மருந்தாக இருக்கின்ற போது எமக்கு எதற்கு மருந்து? 

நம்முடைய வாழ்வில் நாம் அனுபவிக்கின்ற மகிழ்ச்சியின்மை,அதிருப்தி,இன்னல்கள் அனைத்தும் நாம் யார் என்ற அறியாமை அல்லது தெளிவின்மை காரணமாக விளைபவை அல்ல..நாம் யார் என்ற அறியாமை குறித்த தெளிவை உண்டாக்க உதவுபவை.நாம் இங்கு எவற்றிலிருந்தும் விடுபட தேவையில்லை.எல்லாமுமாக நாமே இருக்கின்றோம்.

நீங்கள் துன்பங்கள் என நினைத்து கொண்டிருப்பவையில் இருந்து தற்காலிகமாக விடுபடுபட்டு விலகி வந்திருப்பது மகிழ்ச்சி இல்லை.ஆனால் அதிகமாக அதுவே மகிழ்ச்சியாக தோன்றும்.இன்பம் துன்பம் இரண்டையும் ஒன்றாக பார்க்கும் தெளிவு உங்கள் பயணத்தில் அடையும் போதே உங்களுக்குள் ஆழ்ந்த அமைதி பிறக்கும்.அந்த அமைதியே பேரானந்தம்.இன்பமும் துன்பமும் எமது பயணத்தில் இரு கரைகள்.கரைகள் தொடரும் வரை பயணம் தொடரும்.இலக்கை அடைந்த பிறகே கரைகள் காணாமல் போகும்.இங்கு பயணமும் நீங்கள்தான்,கரைகளும் நீங்கள்தான்,இலக்கும் நீங்கள்தான்.

பெளதீக பொருட்கள் மூலம் மகிழ்ச்சி நீடித்திருக்காது என்பது தவறு.பொருட்கள் அழிவதால் மகிழ்ச்சியும் மறைந்து போகவில்லை.எம்மிடம் மகிழ்ச்சி மாறாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.அந்த மாறாத மகிழ்ச்சியை மாறி கொண்டிருக்கின்ற ( அழிந்து கொண்டுள்ள ) பெளதீக பொருட்கள் மூலம் நிரப்பி கொள்கிறோம்.அல்லது நிலையற்ற அழியும் தன்மையுடைய பெளதீக பொருட்கள் ஒவ்வொன்றாக தம்மை அழித்து நமக்கு தம்மால் ஆன மகிழ்ச்சியை கொடுத்து கொண்டிருக்கின்ற என்று எடுத்து கொள்ளலாம்.

உண்மையான சுயத்தை நோக்கி உலகம் பயணப்பட்டு கொண்டுள்ளது. உண்மையான சுயத்திலேயே மகிழ்ச்சி உள்ளது.உலகம் உண்மையான சுய மகிழ்வாக உள்ளது.எந்த பக்கம் போனாலும் அதற்கு அது கிடைக்கதான் போகின்றது.பிறகு என்ன கவலை?

நாம் நம்முடைய உண்மையான இயல்பிலேயே இருக்கின்றோம்.எல்லையற்ற எம் இயல்பை எல்லையுடைய உலகத்தால் தடுக்க முடியாது.நாம் யார் என்ற நிலையான சுயவிழிப்புணர்வில்தான் நாம் இருக்கின்றோம்.அது நமக்கு போதும்.அழிய போகும் மாறி கொண்டிருக்கின்ற உடல்,மனத்திற்கு அது தேவையில்லை.உடல் மனதிற்கு அந்த விழிப்புணர்வு கிடைக்காது,தவிர அவை எம்மை அதை அடைவதில் இருந்து தடுத்து கொண்டும் இல்லை.அவற்றால் தடுக்கவும் முடியாது.ஏனென்றால் நாம் ஏற்கனவே நாமாக சுய விழிப்புணர்வில்தான் இருக்கின்றோம்.

எல்லோருமே அதை அனுபவித்து கொண்டுதான் இருக்கிறார்கள். உலகில் உள்ள எல்லா பயங்களுக்கும் மூல பயமான மரண பயத்தில் இருந்து ஒருவர் விடுபடும் போதே நீங்கள் யார் என்று முழுமையை உணர்ந்து கொள்ளுவதற்கான முதல் படியாகும்.

ஏனென்றால் உடல்,மனதால் உண்டாகும் விம்பம் நீங்கள் இல்லை.ஆனால் தொடர்ந்து மாற்றத்துக்குள்ளாகி அழிய போகும்,அழிந்து கொண்டுள்ள இயல்பை கொண்ட உடலும் மனமும் உங்களின் உண்மை இயல்பில் இருந்து உங்களை விலக்கி வைக்க முடியாது.உங்களை உங்கள் இயல்பில் இருந்து விலக்கி வைக்க முயல்வதால்/தடுப்பதால்தான் அவை அழிகின்றன.

நீங்கள் முழுமையானவர் என்ற உண்மை இயல்பை நீங்கள் பயங்களுக்கு எல்லாம் மூல பயமான மரண பயத்தில் இருந்து விடுதலை அடைவதன் மூலமே அடையமுடியும்.அதன் பிறகு உங்களுக்கு எதுவுமே தேவைப்படாது.

நீங்கள் உண்மையை உணர்ந்து கொள்ளவில்லை,உணர வேண்டும் என நினைப்பது தவறு.உண்மை உங்களிடத்தில்தான் உண்டு.உங்களை நோக்கி நீங்கள்தான் பயணப்பட்டு கொண்டுள்ளீர்கள்.முழுமை தொடர்பான உணர்வு உங்கள் எல்லோருக்கும் இருப்பதால்தான் நாம் எல்லோரும் அதனை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம். 

உங்களை எதுவும் பிடித்து இழுத்து கொண்டும் இல்லை,நீங்கள் எதையும் ஈர்த்து கொண்டும் இல்லை.உங்களிடத்தில் எல்லாம் உண்டு.இங்கு மாறாத மகிழ்வை நோக்கிய பயணம் என்பது கூட மாறி கொண்டிருக்கின்றவைகளில் இருந்து வரும் இன்ப துன்பங்களின் விம்பம்தான் அவைதான் மாறாத முழுமையான மகிழ்ச்சியான நம்மில் இருந்து மாறி மாறி மறைந்து கொண்டிருக்கின்றன.

நன்றி.

நான் ஒரு முட்டாளுங்க! இந்த புத்தகத்தை படிக்க முதல்ல…

0

ஆம் நான்தான் நானே தான். என்னடா இவள் கூட எதையோ எழுத தொடங்கி விட்டாள்  என்று நினைக்க தோன்றும் என்று நம்புகின்றேன். என் பேனையை எடுத்து வெள்ளைக்காகிதத்தில் இதை எழுதத்தொடங்கும் போதே என் தங்கை இவளிற்கு  ஏதோ நடந்துவிட்டது புத்தகமும் பேனையுமாக இருக்கின்றாள் என்று சிரித்து என்னை விமர்சித்துக்கொண்டு இருந்தாள்.

அதென்னவோ தெரியவில்லை ஒரே ஒரு புத்தகம்தான் எல்லாவற்றிக்கும் காரணம். என்ன செய்வது கா/பொ/த உயர்தர பரீட்சைக்கு பின்பு பெரிதாக எழுதுவதும் இல்லை என்னிடம் உடைமையாக  ஒரு பேனை கூட இல்லை.

தரம் 5 படிக்கும் எனது குட்டி தங்கையிடம் பேனை கடன் கேட்டுத்தான் இதை எழுதவே ஆரம்பிக்கின்றேன். அவள் அந்த நீல நிற பேனையை தரும்போது ஏதோ ஒன்றரைகோடி பணம் கடன் வாங்கி இருக்கின்றாய்  என்ற ஒரு முக தோற்றத்துடன் என்னை பார்த்து விட்டு கவனமாக கையாளு  என்று சற்று விறுமாப்புடன் தந்தாள். இருப்பினும் அந்த பேனை என் வாழ்க்கை போல எழுதுவதற்கு சற்று சோம்பேறித்தனமாக காணப்பட்டது. இதை மீண்டும் மாற்றிவிட்டு வந்து மிகுதியை தொடரலாம் என தோன்றுகின்றது. மீண்டும் என் அன்பு தங்கையிடம் சென்று ஒரு கருப்பு நிற பேனாவை கடன் வாங்கி வந்து எழுத ஆரம்பிக்கின்றேன்.

முன்பு  சொன்னது போலவே ஒரே ஒரு புத்தகம் தான் இப்பொழுது நான்  இங்கு கிறுக்கிய வண்ணம் இருப்பதற்கு காரணம். புத்தக வாசிப்பு அனைவரது வாழ்க்கையிலும் ஒரு முக்க்கியமான ஒன்றுதான். நினைவு தெரிந்த நாளில் இருந்தே நாம் அனைவரும் பாலர் பாடசாலை தொடக்கம் ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்த வண்ணமே காணப்படுகின்றோம் . அப்போது தெரியவில்லை நாம் பேசுவதற்கும் எழுதுவதற்க்கும்  வாசித்த புத்தகங்கள் பெரும் துணையாக நிற்கின்றன  என்று. “வசிப்பதனால் மனிதன் பூரணமடைகின்றான்” என்று சும்மாவா சொன்னார்கள். எப்பொழுதும் தொலைபேசியும் கையுமாக இருந்த என்னை இப்படி பேனையும் காகிதமுமாக மாற்றியதை எண்ணி அந்த அற்புத புத்தகம் கொஞ்சம் கர்வம் கொள்ளத்தான் செய்கின்றது. ஏனெனில் எனது அம்மா சொல்லியே திருந்தாத என்னை  ஒரு செம்மஞ்சள் நிற புத்தகம் மாற்றி விட்டது.

என்னடா புத்தகம் புத்தகம் என்கின்றாளே  அதைப்பற்றி கூறுகிறாள் இல்லை என்று சற்று சினமுடன் இருந்திருப்பீர்கள். என்ன செய்வது என்னுடைய கிறுக்கல் சற்று பெரிய இடத்தை பெற வேண்டும் என்பதற்காக புத்தகம் பற்றிய விமர்சனம் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். இப்பொழுதும்  சொல்லவில்லை எனில் என் வீடு தேடி வந்து நீங்கள் என்னை அடிக்ககூடும். சரி சொல்கின்றேன். அந்த அற்புதபுத்தகம்  நான் சென்ற வேலைத்தளத்தில் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றே கூறலாம். ஆம் ஒரு பிரசித்தி பெற்ற கனேடிய எழுத்தாளர் , தலைமை பேச்சாளர் மற்றும்  வழக்கறிஞர் ரொபின் சர்மாவால் எழுதப்பட்டது. அவரை எல்லோரும் அறிந்து இருப்பீர்கள். அவருடைய ஒரு அற்புத களஞ்சியம் என்றே சொல்லலாம் “தனது பொக்கிஷத்தை விற்ற துறவி”  என்ற புத்தகம். ஆனால்  ஒன்று இந்த புத்தகத்தை வாசித்தவரிடம் ஏதோ ஒரு வகையில் ஒரு சிறு மாற்றம் கூட வராமல் இருந்திருக்காது. அப்படியொரு அருமையான கற்பனைக்காட்சி நிறைந்த புத்தகம்.

மனித வாழ்க்கை என்றால் என்ன? எதை நோக்கி நம் வாழ்க்கை  சென்று கொண்டு இருக்கின்றது? எதை நோக்கி செல்ல வேண்டும் என்று கற்பனைகளால் உலக உண்மையை உணர்த்திய ஒரு புத்தகம். வாழ்க்கையை எவ்வாறு நாம் கொண்டு செல்ல வேண்டும் நமது வாழ்க்கைக்கு எது மிகமுக்கியமானது என்பது பற்றிய  ஒரு சிறப்பானபுத்தகம்  இது. இப்புத்தகத்தை படிக்கும் போது நாம் வேறு ஒரு உலகத்திற்கு  செல்வது போன்ற ஒரு பரவச நிலையை அடைய முடிகிறது. இரு மனிதர்களின் உரையாடல் தொடர்பு மூலம் இக்கதையை கொண்டு சென்றது சிறப்பாக காணப்படுகின்றது.ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சுவாரஸ்யம் நிறைந்த வாழ்க்கை தத்துவங்களால் நிறைந்த ஒரு சிறப்பு மிக்க கற்பனை கதையாக காணப்படுகின்றது . இதில் மேலைத்தேய கலாசாரம், கீழத்தேய கலாசாரம், அவர்களின் வாழ்க்கை சூழல்கள் என எப்படி ஒருவரது வாழ்க்கை சிக்கல் மிக்கதாக இருந்து  சந்தோஷம்  நிறைந்த ஒன்றாக மாறுபடுகின்றது என்பது பற்றிய ஒரு சிறப்பான   திருப்புமுனையை கொண்ட படைப்பம்சமாக காணப்படுகின்றது. நாம் அனைவரும் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் இயந்திரமயமான சூழலிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட  ஒரு வெளியுலக உணர்வை தருவதாக இப்புத்தகம் அமைந்துள்ளது சிறப்பான ஒன்றாகும்.

இப்புத்தகத்தை படிப்பதற்க்கு முதல் என் வாழ்க்கை வேறானது. படித்து முடிந்த பிறகு எனது வாழ்க்கை முற்றிலும் மாறுபட்ட  ஒன்றாக காணப்படுகின்றது. முன் எல்லாம் ஒரு ஒழுங்குமுறையற்ற வாழ்க்கையுடன் காணப்பட்டேன் என்றே கூறலாம் . என்ன செய்வது? என்ற குழப்பம் தினமும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு குழப்பமான மனநிலை இப்புத்தகத்தை வாசித்த பின்பு ஒரு ஒழுக்கமான பயிற்சி, ஒரு நாளை எவ்வளவு பயன்மிக்கதாய் மாற்றியமைக்கலாம் என்ற திட்டமிடல் என்று ஒரு நாளில் நான் செய்யும் வேலைத்திட்டம், நேர முகாமைத்துவம் என எனக்குள் பெரும் மாற்றமே ஏற்பட்டது. எனது வாழ்க்கையில் நான்  சரியான கோபக்காரி ஏனோ நான் புத்தக வாசிப்பை தொடர்ந்ததாலோ என்னவோ எனது கோபம் எங்கே சென்று விட்டது என்று எனக்கே தெரியவில்லை. இப்படி என் வாழ்க்கை ஒரு புத்தகத்தால் மாற்றப்பட்ட ஒன்றாக காணப்படுகின்றது. இப்பொழுது முதல் இருந்ததை காட்டிலும் மிகவும் சந்தோஷமாக  உள்ளேன்.

எனது தந்தை எப்போதும் சொல்லுவார் நிறைய புத்தகங்களை வாசி என்று . அப்பொழுது  புரியவில்லை  இப்பொழுது  புரிகின்றது அதன் தாக்கம் என்னை பெரிதும் மாற்றி உள்ளதை. நான் எவ்வளவு முட்டாளாக இருந்துள்ளேன் என்று சிந்திக்க வைக்கின்றது . முன்பு எனது அப்பா கூறும்போது பொருட்ப்படுத்தாமல் விட்டுவிட்டு  இப்பொழுது ஆச்சரியப்பட்டு நிற்கின்றேன். தத்தமது வாழ்க்கையில் மகிழ்ச்சியை விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம். மகிழ்ச்சியை விரும்பாதவர் எவரும் இப்பிரபஞ்சத்தில் இல்லை என்று நம்புகின்றேன்.என்னுடைய புத்தக தாகத்தை  தூண்டுவதற்க்கும்  முக்கியமான ஒன்றாக இப்புத்தகம் எனக்கு பெரிதும் பங்காற்றியிருக்கின்றது.

நன்றி.

தனி மனித ஒழுக்கமும் விழிப்புணர்வும்

0

ஒரு சமூகம்,சரி தனிநபர்கள் சரி இந்த இயற்கை சரி,சூரிய மண்டலம் சரி எல்லாமே இங்கு ஒரு ஒழுங்கில்தான் இயங்கிகொண்டுள்ளது.அந்த ஒழுங்குதான் ஒழுக்கம்.. நாம் ஒழுக்கமாக இயங்கி கொண்டிருக்கிறம் அல்லது இல்லை இத்த இரண்டில் எதுவாக இயங்கி கொண்டுள்ளோம் என நாம் நினைத்தாலும் நாம் உண்மையில் ஒரு ஒழுங்கில்தான் இருக்கிறோம்.

அந்த ஒழுங்கு சிலவேளை எமக்கு சாதகமற்ற,எமக்கு பிடிக்காத ஒன்றாக இருக்கலாம்.ஆனாலும் இங்கு சரிகள் தவறுகள் தாண்டி நாம் ஒரு ஒழுங்கில்தான் இயங்கி கொண்டுள்ளோம்.நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விசயம் இதுதான்.

ஒழுங்காக படிக்கவில்லை என ஒரு பெற்றோர் தமது பிள்ளைக்கு சொல்லலாம்.ஆனால் அந்த பிள்ளை ஒழுங்காக டீவி பார்த்து கொண்டிருக்கலாம் அல்லது படிப்பு தவிர்ந்த ஏதோ ஒன்றின் ஒழுங்கில்தான் இயங்கி கொண்டிருக்கும்..அங்கு ஒரு ஒழுங்கு / ஒழுக்கம் இருக்கின்றது.

இந்த இயங்கியல் அடிப்படையை நாம் விளங்கி கொள்ளும் போது இலகுவாக எமது ஒழுங்கு ஒழுக்கம் சார் பிரச்சினைகளை இலகுவாக எதிர்கொள்ள முடியும்.நாம் எப்படியும் ஒரு ஒழுங்கில்தான் இயங்குகிறோம் அதில் எமக்கு பிடித்ததை கொண்டு வருவது என்பது இலகு..ஆனால் ஒழுங்கில் இயங்குவது தெரியாமல் நமக்கு சாதகமற்றவைகளை செய்து கொண்டு நாம் ஒழுங்கில்லாமல் ஒழுக்கத்தை தவற விட்டுகொண்டு இருக்கிறோம் என நினைப்பது தவறு,

நமது உண்மை இயல்பை அறிந்து கொள்ளும் போதே எமக்கு எம்மை பற்றிய விழிப்புணர்வுகளை நாம் அதிகமாக பெற்று கொள்ள முடியும்.நாம் ஏற்கனவே இயங்கி கொண்டுள்ள ஒழுங்கை முதலில் கண்டறிய வேண்டும்..அதில் எமக்கு சாதகமற்றவகைகளை சாதகமானவைகளை கொண்டு ஒவ்வொன்றாக பிரதியிட்டு கொள்ளவேண்டும்.இதன் மூலம் எமது ஒழுங்கு ஒழுக்கத்தை சரியாக பேண முடியும்..

எமது வாழ்வில் ஒழுங்கை ஒழுக்கத்தை பேண சில விதிமுறைகள்..

1.முடிந்தவரை சகல வழிகளிலும் இயற்கையுடன் இணைந்து வாழ கற்று கொள்ளுங்கள்

2.உங்கள் வாழ்க்கையை எளிமையாக வடிவமைத்து கொள்ளுங்கள்

3.ஒவ்வொரு நாளும் போதுமானளவு நேரம் தனிமையில் செலவிடுங்கள்

4.பேச்சு,சிந்தனை,உணவு,தூக்கம் அளவாக வைத்திருங்கள்.

5.அதிகாலையில் துயில் எழுங்கள்

6.உடல் களைத்து வேலை செய்யுங்கள்

போதை காட்டும் பாதை : தமிழர்களின் இயங்கியல் இரகசியம்!

0

யாழ் உட்பட வட கிழக்கு பிரதேசங்களில் அண்மைகாலமாக போதை பழக்கங்களும் அதனால் வரும் விளைவுகளும் சில பல மரணங்களும் ஏற்பட ஆரம்பித்திருக்கின்றன. கல்வியலாளர்கள்,சமூக ஆர்வலர்கள் இது குறித்த தமது அச்சத்தையும் உடனடி தீர்வுகளையும் முன்வைத்து கொண்டுள்ளனர்.அந்த வகையில் எமக்கும் இருக்கும் சமூக பொறுப்புடைமையை கருத்தில் கொண்டு நாம் எமது கருத்துக்களை முன்வைக்கின்றோம்.

போதை போதை போதை… அப்படி என்றால் என்ன? சாதரணமாக எங்கோ இருந்து கடத்தி வரப்பட்டு விற்கப்படும் போதைபொருட்களுக்கு இங்குள்ள இளைஞர்கள் அடிமையாகிவிடுகின்றனர்,இதனால் சமூக குற்றங்கள் அதிகரிக்கின்றன என்பதே பரவலான குற்றசாட்டு! ஆனால் இதனை தாண்டி யாரும் பார்ப்பது இல்லை.நாம் பார்ப்போம்.

நவீன உளவியல் ஆய்வுகளின்படி போதைக்கு அடிமையாகிறது என்பது ஒரு Higher intelligence Sign, எமது பிரதேசங்களில் அதிகமாக அடிமையாகிறார்கள் என்றால் அவர்கள் Higher intelligence வகையை சேர்ந்தவர்களாகதான் இருக்க வேண்டும்… இனத்தின் மரபணுவில் இருக்கும் அந்த அதி உயர் நுண்ணறிவுக்கு ஏற்ற புற வாழ்க்கையை சமூகத்தில்/உலகத்தில் உருவாக்க முடியாத போதே அவர்கள் மனம் அந்த அதியுயர் நுண்ணறிவை சமப்படுத்த போதை பொருள் போன்றவற்றை நாடுகின்றது.

அக புற வாழ்க்கையில் ஏற்படும் சமனிலையற்ற தன்மையே (physical,emotional Instability) இத்தகைய போதை பழக்கங்கள்,வீண் சண்டைகள் போன்றவற்றுக்கு காரணம்.அதுவும் அதியுயர் நுண்ணறிவு கொண்ட இனத்தில் என்றால் இது இன்னும் அதியுயர்வாக இருக்கும்.

இந்த போதைபழக்கத்தை புனர்வாழ்வுக்கு அனுப்பியோ,பிடித்து உள்ளே வைத்தோ திருத்த முடியாது.ஏன் என்றால் இந்த இனத்தின் கூட்டு சக்தி (energy level) அதிகம்… ஒரு இனத்தை பலவீனபடுத்த இவை பயன்படுகின்றது என்று சிலர் பயப்பிடுகின்றனர்.இல்லை.. இனம்தான் இவர்களை பயன்படுத்தி கொள்கின்றது.எப்படி? சாதரணத்தை விட ஒரு இனத்தில் அதிகரித்த போதைபழக்க பாவனை,அந்த இனம் அதியுயர் நுண்ணறிவு தளத்தில் இயங்குகின்றது என்பதற்கு சான்று கொடுக்கின்றது.அவர்களது அதியுயர் நுண்ணறிவு மனதே இவற்றை இந்த இனத்தை நோக்கி கவர்ந்திழுத்துள்ளது.

இனத்தின் குறிப்பிட பகுதி வேகமாக அடிமையாகி தங்களை அழித்து கொள்ளும்,ஒரு பகுதி அழித்து கொள்ளுவதை வைத்து பாடங்களை கற்றுகொள்ளும் அதை வைத்து மீதி இனம் ஆக்கத்தை கொண்டு தளைக்கும் [Transformation].இது இயற்கை விதி, உலகின் பெரிய சாதனைகள்,செயல்பாடுகளை செய்யும் நோக்கில் பரந்து விரிந்திருக்கும் எமது இனத்தின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்களுக்காக இந்த தயார்படுத்தல்கள் இருக்கலாம்.

பல்லாயிர ஆண்டு வரலாற்றில் இதுதானே நடந்திருக்கின்றது.இனத்தில் ஒரு பகுதி அடிமையாகி உலகெங்கும் வேலைசெய்யும் இன்னொரு பகுதி இருந்த இடத்தில் இருந்து உலகத்தை ஆண்டுகொள்ளும்.இந்த இனத்தில் பலவீனர்களுக்கு இடமில்லை,உங்களால் முடிந்தால் அரியணை ஏறிகொள்ளலாம்,

சாதாரண சிறு வேலைகள் செய்து உலகில் வாழும் இனத்திற்கு இந்த மாதிரி பெரிய Transformation தேவைபடாது.அது அவர்களுக்கு கிடைக்காது,ஏன் என்றால் அந்த பாரத்தை மற்ற இனங்களால் தாங்க முடியாது. வரலாறில் பெரிய பெரிய சம்பவங்களை செய்த,செய்ய போகின்ற இனத்திற்கே இந்த மாதிரி பக்க விளைவுகள் இருக்கும்.அவையும் நல்லதுக்குதான்.

ஆக ஒரு பழமைவாய்ந்த ஆற்றல்வாய்ந்த இனம் தனது அதிக நுண்ணறிவுதன இயல்பால் கவரும் சில தீய காரணிகளை கொண்டு தனது சிறு பகுதியை அழித்து மீதி பகுதியை கூர்மையாக்கி கொள்ளும் இயற்கையான ஒரு செயற்பாடாக எடுத்து கொள்வதே சரியான ஒரு முறையாகும். போதைபழக்கத்தை திணித்து இனத்தை அழித்து அடக்கி விடலாம் என்று நினைப்பவர்களும்,போதையால் இனம் அழிந்துவிடும் என கண்ணீர்விடுபவர்களும் புரிந்து கொள்ள வேண்டியது..

போதைபழக்கத்தை இந்த இனத்தின் அதியுயர் நுண்ணறிவு அதற்கு உண்டான அக புற காரணிகளையும் சேர்த்து அதுவாக கவர்ந்து கொண்டது. அதற்கு தெரியும் அதை எப்படி எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று..அவ்வாறுதான் அது மிகசரியாக பயன்படுத்தி இயங்கி கொண்டுள்ளது.

யாரும் இறந்தகாலம்,எதிர்காலம் குறித்தும் கவலைப்பட வேண்டாம். பெரிதாக ஒன்றும் நடந்து கொண்டு இல்லை. ஆக இங்கு ஒரு இனம் இயங்கிகொண்டுள்ளது அவ்வளவுதான்