Monday, April 13, 2026
No menu items!
Home Blog

அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்

0

07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள் குடும்பத்தில் அன்றைய காலத்தில் ஒரு நடைமுறை இருந்தது யாரும் ஒன்றாக குடும்பமாக நித்திரை கொள்ளக்கூடாது என்று நடைமுறை இருந்தது.

ஏன்? என்றால் விழந்து கொண்டு இருக்கும் செல்களின் நடுவில் உயிர்கள் பிரிந்து கொண்டிருந்தவேளை தனித்து தனித்து படுப்பதன் மூலம் குடும்பத்தில் யாராவது ஒருவராவது உயிருடன் பிழைக்க வாய்ப்பு உண்டு அதன் காரணமாகதான் அவ்வாறு ஒரு நடைமுறை இருந்தது. நானும் அம்மாவும் எங்கள் கூடாரத்தை விட்டு சிறிது தொலைவில் உள்ள வேறு ஒருவருக்கு சொந்தமான பதுங்கு குழியுடன் கூடிய கூடாரத்தில் இரவு படுத்துவிட்டு பகல் எழும்பி இருந்தோம்.

அண்ணா எங்கள் கூடாரத்திலேயே படுத்து உறக்கிக்கொண்டு இருந்தான். நானும் விடிய எழும்பி விட்டேன் காலையில் ஆரம்பித்தது அந்த ஒரு செல் அடி ஓடி சென்று பதுங்கு குழிக்குள் குதித்தேன் குதிக்கும் வேளை மண்டையில் அடிபட்டுவிட்டது எனக்கு (அதே வேளை செல் குத்தி வெடித்தது எனது அண்ணாவின் தலையின்தான் பிஸ் அடி பட்டு இறந்து இருந்தான் அதே வேளை) சரியாக பயந்துவிட்டேன்.

அம்மா அண்ணாவை பாக்க போகின்றேன் என்று சென்றார்கள் சென்று சிறிது நேரத்தில் அம்மாவின் கதறல் குரல் கேட்டவண்ணம் இருந்தது யாரும் வெளியில் செல்ல துணியவில்லை. அங்கு நடந்த சம்பவத்தை Suren Karththikesu எழுதி இருப்பார் அந்த இடத்திற்கு நான் செல்லவில்லை பல மணி நேரங்களுக்கு பின் என்னை அழைத்து செல்ல இருவர் வந்தனர் உண்மையில் எனக்கு அவர்கள் யார்? என்பது மறந்து விட்டது.

மரண பயத்தில் இருந்தநேரம் அது சுற்றி தூரத்தில் செல் குத்தி குத்தி வெடிக்க அவர்கள் கூட்டிக்கொண்டு செல்வதும் நான் போகும் வழி எங்கும் பங்கரை நோக்கி ஓடுவதுமாக இருந்தேன் அது தூரத்திலடா வாடா என்று அவர்கள் அழைத்து சென்றனர் புதுவை இரத்தினதுரை அப்பா என்று ஒரு குறுகிய அளவில் கூட்டம் எனது அக்கா புலிகளின் இராணுவ சீருடையில் வந்து இருந்தாள் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் அவர்கள் அகவணக்கம் செலுத்திக்கொண்டு இருந்தார்.

அவருக்கும் கண்டிப்பாக மனம் நொந்து இருப்பார் ஏன் ?என்றால் அண்ணா அதிகமாக அவரின் வீட்டில்தான் நிப்பான் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மகனும் அண்ணாவும் நல்ல நண்பர்கள் அதனால் நாள்கணக்கில் அவர்கள் வீட்டில் தங்கி இருந்துவிட்டு கூட வருவான் அண்ணா அவருக்கு பிடித்த ஒருவனாகவே இருந்தான் அப்படி இருக்கையில் அவருக்கும் அது மனவேதனையை கொடுத்து இருக்கும் நடேசன் அண்ணையின் மகனின் game boy -யை விளையாட வீட்டுக்கு எடுத்து வந்திருந்தான்.

அண்ணா அதை நான்தான் அதிகமாக விளையாடுவது அது இறுதியாக என்னிடமே இருந்தது. மேசையில் அவனை துணியால் சுற்றி வைக்கப்பட்டு இருந்த காட்சி இப்போதும் கண்ணுக்குள் சில நினைவுகள் சுட்டுப்போட்டாலும் மறக்காது என்பார்கள் அவ்வாறுதான் அவன்கிடந்த அந்த காட்சி மனதைவிட்டு அகன்று செல்லாது. இறுதியாக அருகில் இருந்த சுடுகாட்டில் அவனை எங்கள் கைகளால் மண் அள்ளிப்போட்டு இறுதியில் புதைத்துவிட்டுவந்தோம்.

(குழிகளை தொண்டியதில் இருந்து அங்கு நின்று பல உதவிகள் செய்தது Suren அண்ணாதான்) எங்களுக்கு ஒத்தாசையாக பல உதவிகளை எமது கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களும் மேற்கொண்டார். அந்த நேரங்களில்.. அடிக்கடி சண்டைபோட அவன் ஒருத்தன்தான் இருந்தான் அண்ணா என்று இருந்தான் நான் வீட்டில் இல்லாத நேரங்களில் அம்மாவிடம் கேப்பானாம் கேதன் எங்க போய்ட்டான் அவனுடன் சண்டைபோடாமல் தனகாமல் இருக்க முடியவில்லை என்று இன்று நான் இருக்கின்றேன் என்னுடன் தனக சண்டைபோட அவன் இல்லை…

லா சப்பலில் கண்ணாமூச்சி! நடுதெருவுக்கு வந்த ஈழத்தமிழர் ஒருவரின் நன்றிக்கடன்!

0

2002 ல் அதிகாலையில் , நான் வேலை செய்யும் கடைக்கு அருகில் ஏஜென்சி ஒருவன் எம்மவர் ஒருவரை இதுதான் பிரான்ஸ் எனது கடமை முடிந்து விட்டது என்று சொல்லி அம்போபென்று விட்டு விட்டு போய்விட்டான்… என்னைக் கண்டதும் ஓடோடி வந்து விஷயத்தைச் சொல்லிக் கண்ணீர் மல்கினார்… உடனே உள்ளே அழைத்து café அடித்துக் கொடுத்து pain chocolat உண்ணக் கொடுத்து 8h30 க்கு 46 பேருந்தில் ஏற்றி இது எங்கே போய் முடிகிறதோ அங்கே இறங்கிச் சுற்றிப் பாருங்கள் ,

எம்மவர் நிறையப் பேரைக் காணலாம் உதவி கேளுங்கள் என்று Gare de l’est போகும் பஸ்ஸில் ஏற்றி விட்டேன்… சில நாட்கள் கழித்து அதே 46 பஸ்ஸில் வந்து சில தமிழர்களின் உதவியுடன் சோசியல் மேடத்தின் உதவியுடன் ஒரு இருப்பிடம் கிடைத்து விட்டது என்று சொல்லி மகிழ்ந்தார்…இடையிடையே நான் வேலை முடியும் நேரம் வருவார் , குடும்ப விஷயங்களை சொல்லுவார்..

அப்படி வரும்போது மெட்ரோ டிக்கட்கள் ஒரு கட்டு, கொஞ்சம் பணம், சில பிஸ்கட்கள் கொடுத்து அனுப்புவேன்…2003 கடைசியில் விசா கிடைத்து விட்டது என்று சொல்லி விட்டுப் போனார்… பிறகு வரவில்லை…சில நாட்கள் கழித்து பாரிஸ் La chappe ல் கண்டேன்…என்னைக் கண்டதும் கொஞ்சம் திடுக்கிட்டு வீதியின் மறு பக்கம் போய் கடந்து சென்றுவிட்டார் ( 100 வீதம் நடந்த கதை ) – திலீபன் ராஜா நன்றி

எமது விளக்கம் – புலம்பெயர் வாழ்வில் பலரும் சந்தித்த, மனதைச் சற்று ரணமாக்கும் ஒரு நிஜமான நிகழ்வு இது. எவ்வித ஆதரவுமின்றி நடுத்தெருவில் நின்ற ஒருவருக்கு, அடைக்கலமும் அன்பும் கொடுத்துக் கரைசேர்த்த பின், அவர் ஏன் இப்படி நடந்துகொண்டார் என்பதற்கான மனித உளவியலையும், அதன் பிறகு அவர் வாழ்வில் என்ன நடந்திருக்கும் என்பதையும் இப்படி விரித்துப் பார்க்கலாம்:

அவர் உங்களை ஏன் தவிர்த்துச் சென்றார்? (பின்னணி உளவியல்)

1. கடந்த காலத்தின் மீதான கூச்சம்:

அந்த நபர் உங்களைக் கண்டதும் திடுக்கிட்டு விலகிச் சென்றதற்கு ஈகோ மட்டும் காரணமாக இருக்காது; ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையும் (Inferiority Complex) காரணமாக இருக்கலாம். அவர் பாரிஸ் வீதியில் ஆதரவற்று நின்றபோது, அவருடைய ஆகப் பெரிய பலவீனத்தை நீங்கள் பார்த்தீர்கள். விசா கிடைத்து, ஒரு கௌரவமான வாழ்க்கைக்குள் நுழைந்த பின், உங்களைப் பார்க்கும்போது அவருக்குத் தான் பட்ட கஷ்டங்களும், தனது அன்றைய கையறுநிலையும் நினைவுக்கு வந்திருக்கும். அந்த இருண்ட காலத்தை மறக்க நினைக்கும் மனித மனம், அந்த காலத்தில் உதவியவர்களையும் சேர்த்தே தவிர்க்க நினைக்கும்.

2. நன்றிக்கடன் தரும் சுமை:

நீங்கள் அவருக்குத் தேநீர், Pain au chocolat, பஸ் டிக்கெட், பணம் என எவ்விதப் பிரதிபலனும் பாராமல் செய்தீர்கள். ஆனால், விசா கிடைத்த பின் “இவருக்கு நாம் எப்படி கைமாறு செய்வது?” என்ற கேள்வி அவருக்குள் எழுந்திருக்கலாம். அந்த நன்றிக்கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத குற்ற உணர்ச்சி அல்லது தயக்கம், உங்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் வீதியின் மறுபக்கம் அவரைத் திருப்பி விட்டிருக்கலாம்.

இதற்குப் பிறகு அவர் வாழ்வில் என்ன நடந்திருக்கும்?

புதிய அடையாளமும் போலி கௌரவமும்: லா சாப்பல் (La Chapelle) வீதியில் உங்களைத் தவிர்த்துச் சென்ற அவர், அதன் பின் தன்னை ஒரு ‘வெற்றிகரமான மனிதராக’ தமிழ் சமூகத்துக்குள் நிலைநிறுத்திக் கொள்ளப் போராடியிருப்பார். நிரந்தர வேலை தேடி, திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்று, அவர்களைப் பாடசாலைக்கு அனுப்பி, பிரான்ஸில் ஒரு கௌரவமான குடும்பத் தலைவனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பார். தான் ஒரு காலத்தில் நடுத்தெருவில் நின்றதை யாருக்கும் தெரியாமல் மறைத்து, ஒரு புதிய முகமூடியை அவர் அணிந்திருக்கக் கூடும்.

குற்ற உணர்ச்சியும் தேடலும்:

ஆண்டுகள் பல கடந்திருக்கும். அவருக்கு இப்போது வயதாகியிருக்கும். வாழ்க்கையின் ஓட்டம் கொஞ்சம் நிதானமடைந்த பின், மனிதர்கள் தங்கள் கடந்த காலத்தை அமைதியாகத் திரும்பிப் பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்போது, 2002-ல் அந்த அதிகாலைப் பனியில், நடுக்கத்தோடு நின்ற தன்னை அரவணைத்து 46-ம் நம்பர் பேருந்தில் ஏற்றிவிட்ட உங்கள் முகம் அவருக்கு நிச்சயமாக நினைவுக்கு வரும்.

அப்போது அவர் லா சாப்பலில் செய்த தவறு அவருக்குப் புரியும். “அன்று அந்த மனிதர் மட்டும் இல்லை என்றால், இன்று எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்குமா?” என்ற கேள்வி அவர் மனதை நிச்சயம் ரணமாக்கும். அன்று ஈகோவாலும் தயக்கத்தாலும் உங்களைக் கடந்து சென்ற அந்த நிமிடத்தை நினைத்து அவர் இன்று தனக்குள் வருந்திக் கொண்டிருக்கலாம். உங்களை எப்போதாவது மீண்டும் சந்தித்து, அன்று சொல்லத் தவறிய “நன்றி” என்ற ஒற்றைச் சொல்லைச் சொல்லிவிட மாட்டோமா என்று அவர் மனம் இப்போது ஏங்கிக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது.

நீங்கள் அன்று செய்தது வெறும் உதவி அல்ல; ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கையையும் மீட்டெடுத்த பேருதவி. அவர் உங்களைக் கடந்து சென்றாலும், நீங்கள் கொடுத்த அந்த தேநீரின் சூடும், நீங்கள் காட்டிய மனிதநேயமும் அவர் மனசாட்சியை வாழ்நாள் முழுவதும் உலுக்கிக் கொண்டேதான் இருக்கும். உதவி பெற்றவர்கள் அதை மறந்தாலும், அந்த தர்மம் உங்களை ஒருபோதும் கைவிடாது.

திலீபன் ராஜா முகநூல்

Lik திரை விமர்சனம்: வித்தியாசமான காதல் முயற்சி!

0

பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கவுரி கிஷன், ஷாரா, நடிப்பில், பாடல்கள், கதை, திரைக்கதை, வசனம் எழுதி விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் படம்.(Lik என்றால் love insurance kompany என்பதன் சுருக்கம். ஆரம்பத்தில் LIC – LOVE INSURANCE COMPANY என்று பெயர் வைத்து, LIC நிறுவனத்தின் எதிர்ப்பால் Lik என்று மாற்றப்பட்டது)

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் வழங்க, ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா தயாரித்தது.2040 ஆம் ஆண்டு சென்னை.எல்லா பொருட்களையும் இன்சூரன்ஸ் செய்யும் பழக்கம், செல்போனில் மூழ்கிய மக்கள் அடுத்த கட்டமாக அந்த செல்போன் APPகள் இல்லாமலே வாழவே முடியாத நிலைமைக்கு போயிருக்கிறார்கள். (இப்பவே கொஞ்சம் அப்படித்தானே).

காதலைச் சொல்பவர் எவ்வளவு நல்லவர் என்று யாருக்குமே தெரியாத நிலையில், ஒவ்வொருவரும் ஆன்லைனில் புழங்கும் விதத்தை வைத்து அவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வைக்கிறது சூரியன் என்ற ஒரு பிஸினஸ்மேனின் (எஸ்.ஜே.சூர்யா) நிறுவனம்.

அவர் உருவாக்கி இருக்கும் Lik ஆப்பில் சேர்ந்த நிலையில், “இன்னாரைக் காதலிக்கிறேன். அவர் நல்லவரா?” என்று பார்க்கும்போது மேட்ச் பார்த்து இருவருக்கும் எத்தனை சதவீதம் காதல் பொருத்தமென்று அந்த ஆப் சொல்லிவிடும்.

அப்படி சொல்லப்பட வேண்டும் என்றால் நாம் விரும்பும் நபரும் ஆப்பில் இருக்க வேண்டும்.எனவே இளைஞர்கள் இளம்பெண்கள் எல்லோரும் அந்த ஆப்பில் இணைய, பணம் மழையென கொட்டுகிறது சூரியனுக்கு.

செல்போன்களால் மனித இனம் கெட்டுப்போவதைத் தடுக்க செல்போன் பயன்படுத்த முடியாத ஒரு குடியிருப்புப் பகுதியை வைத்திருக்கிறார் இயற்கை ஆர்வலர் அன்புக் கடல் (சீமான்).

ஆன்லைனை முறைகேடாக பயன்படுத்துபவர்கள் தமிழக அரசால் கைது செய்யப்பட்டு அந்த குடியிருப்பில் ஆறு மாதம் செல்போனையே பயன்படுத்தாமல் வாழும் தண்டனையை அரசு கொடுக்கும்.

அன்புக்கு கடலின் மகன் வைப் வாஸி (பிரதீப் ரங்கநாதன்). அவனும் செல்போன் பயன்படுத்தாத ஒரு வாழ்க்கையை வாழ்கிறான்.அவனுக்கு தீமா என்ற ஒரு பெண் மீது (கீர்த்தி ஷெட்டி) காதல் வருகிறது.

ஆனால், அவள் செல்போன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டாள். தவிர Lik ஆப் ஓகே செய்பவனைத்தான் காதலிக்க ஒத்துக் கொள்வாள்.Lik ஆப் பயன்பாட்டால் கோடிக் கோடியாகக் குவிக்கிறார்கள் சூரியனும் அவனது மல்டி நேஷனல் பங்குதாரர்களும்.

ஒரு விவாதத்தில் மனித மனதின் உணர்வுகளை எப்படி ஓர் இயந்திரம் கண்டறிய முடியும் என்று வைப் வாஸி சூரியனிடம் வாதம் செய்கிறான். அது வைரல் ஆக, கம்பெனிக்கு மார்க்கெட் வேல்யூ குறைகிறது.

இந்த நிலையில், தீமாவுக்கும் வைப் வாஸிக்கும் காதல் பொருத்தம் மூன்று சதவீதம்தான்.வைப் வாஸிக்கும் அவனது தோழிக்கும் (கவுரி கிஷன்) தான் 97 சதவீதம் காதல் பொருத்தம் என்று ஆப்பை சொல்ல வைக்கிறார் சூர்யா.

Lik ஆப்பை முழுமையாக நம்பும் தீமாவும் வைப் வாஸியியிடம் இருந்து விலகி விடுகிறாள்.தன் உண்மைக் காதலைப் பற்றி தவறாக சொல்லும் Lik ‘ஆப்’பை பொய் என நிரூபித்து காதலை புரிய வைக்க வைப் வாஸி முயல,

அது நடந்தால் தனது Lik ஆப் மக்கள் ஆதரவை இழந்து பல்லாயிரம் கோடி இழப்பு வரும் என்பதால், அவர்களைச் சேர விடாமல் தடுக்க சூரியன் எல்லா வேலைகளையும் செய்ய, நடந்தது என்ன என்பதே இந்த Lik.2040 சென்னை என்று ஒரு எதிர்கால சென்னையை காட்டுகிறார்கள்.

அந்தரத்தில் பறக்கும் கார் டாக்சிகள், சுத்தப்படுத்தப்பட்ட கூவம், TNGH என்று பெயர் மாறிய அரசுப் பொது மருத்துவமனை, திருவள்ளுவர் ஐ.டி.பார்க், பெரியார் சைபர் சிட்டி, கோவில் வாசலில் பூ கட்டி, பறந்து வரும் ட்ரோனில் போட்டு அனுப்பி வைக்கும் பூக்காரி.. என்று அந்த கற்பனைகள், விவரணைகள் அருமை.

செல்போன் இல்லாத உலகம் என்ற சீமான் தலைமையில் இருக்கும் பகுதி, அங்கே செல்போன் பயன்படுத்தாத மக்களின் ஆரோக்கிய வாழ்க்கை, சமூக வலைதள ரீல்களில் செல்போன் திரையில் பார்த்து வியக்கும் நல்ல விஷயங்களைத் தொட்டு உணர்ந்து பார்க்கும்படியான வாழ்க்கை… என்று அந்த ஏரியா அபாரம்.ஒரு பெண்ணுடன் நட்பு என்ற பெயரில் பழகியபடி என்றாவது ஒருநாள் நமக்கு கிடைக்காமலா என்று காத்திருக்கும் ஓப்பன் ஃபிரண்டு கதாபாத்திரம் (யோகிபாபு),

ஓர் ஆண் பெண் நட்பு என்பது காதலை விட உயர்வானது என்று சொல்லும் காட்சி… இப்படி ரசிக்கவும் பாராட்டவும் பல காட்சிகள் இருப்பதை மறுப்பதற்கு இல்லை.அனிமேஷன், சி.ஜி பணிகளில் முடிந்தவரை நேர்த்தியாக செய்து இருக்கிறார்கள். அசத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.

பிரதீப் ராகவன் ஒளிப்பதிவு முடிந்தவரை போராடி இருக்கிறது. அனிருத் இசை ஓகோவும் இல்லை. அய்யோவும் இல்லை.தனக்கே உரிய பாணியில் உற்சாகமாக நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். எஸ்.ஜே.சூர்யாவும் அப்படியே. கிளைமாக்ஸ் பகுதியில் அவர் ஆடும் ஆட்டம் ரசிக்க வைக்கிறது.

சீமானுக்கு அருமையான கதாபாத்திரம். ஆனால், காட்சிகள் ரொம்பக் குறைவு.எந்திரன் படத்தை நினைவுக்குக் கொண்டு வரும் காட்சிகள் உண்டு.சில சமயங்களில் முக்கியக் கதாபாத்திரங்களைக் கூட வழக்கமான ஹேண்டில் செய்திருப்பது ஒரு குறை. படம் முழுக்க ஓவராகப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

சண்டைக் காட்சிகளில் படத்தின் தன்மைக்கு அப்பாற்பட்ட லாஜிக் மீறல்கள் – இப்படிச் சில விஷயங்களை சரி செய்து இருக்கலாம்.எனினும், Lik… சற்றே வித்தியாசமான காதல் சயின்ஸ்பிக்ஷன் முயற்சி.

சு.செந்தில் குமரன்

Université Paris-Panthéon: பிரான்ஸின் உயர்மட்ட அரசியல் நிர்வாகத்தில் ஈழ தமிழர்கள்!

0

பாரிஸ், பிரான்ஸ்: ஐரோப்பிய நாடுகளின் அதிகாரக் கட்டமைப்பில், கல்வி என்பது வெறும் தகுதியல்ல; அது ஒரு சமூக அந்தஸ்து மற்றும் அதிகாரத்தைப் பெறுவதற்கான மிக முக்கியமான கருவி. இந்த வரிசையில், பிரான்ஸின் உயர்மட்ட அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்வது பாரிஸ்-பாந்தியன்-அசாஸ் பல்கலைக்கழகம் (Université Paris-Panthéon-Assas). அண்மையில் 18 வயதில் நகர சபை உறுப்பினராகத் தேர்வாகியுள்ள ஈழத் தமிழ் மாணவர் பிலால் லுக்மான், இப்பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வருவது, பிரான்ஸ் அரசியலில் ஒரு புதிய தமிழ் ஆளுமையின் வருகையை உறுதிப்படுத்துகிறது.

அதிகார மையங்களின் பிறப்பிடம் (The Elite Factory)

பிரான்ஸ் நாட்டின் நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறையில் ‘அசாஸ்’ (Assas) என்ற பெயர் ஒரு மந்திரச் சொல் போன்றது. 1970-ல் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்திலிருந்து உருவான இந்தப் பல்கலைக்கழகம், பிரான்ஸின் சட்டக் கல்வியில் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு பயின்றவர்கள் வெறும் வழக்கறிஞர்களாக மட்டும் ஆவதில்லை; அவர்கள் நாட்டின் சட்டங்களை வடிவமைப்பவர்களாகவும், சர்வதேசத் தீர்ப்பாயங்களின் நடுவர்களாகவும் உருவெடுக்கிறார்கள்.

முன்னாள் பிரெஞ்சு அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் தற்போதைய அமைச்சரவையின் பல முக்கியப் புள்ளிகள் இந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களே. இப்பல்கலைக்கழகம் வழங்கும் சட்ட அறிவு (Jurisprudence) என்பது ஒரு மாணவனைத் தர்க்கரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் ஒரு முழுமையான அரசியல்வாதியாக மாற்றுகிறது.

சட்ட அறிவும் தேசிய அரசியலும் (The Legal Edge in Politics)

பிரான்ஸ் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மக்கள் பிரதிநிதி வெறும் புகழ்பெற்றவராக இருந்தால் மட்டும் போதாது. அவர் சட்டத்தின் நுணுக்கங்களை (Legal framework) ஆழமாக அறிந்தவராக இருக்க வேண்டும். குறிப்பாக, நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமூலத்தை விவாதிக்கும்போது அல்லது திருத்தங்களைக் கொண்டு வரும்போது, அசாஸ் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களுக்கு இருக்கும் ‘சட்டப் பார்வை’ (Legal Acumen) அவர்களுக்கு ஒரு தனித்துவமான முன்னுரிமையை வழங்குகிறது.

பிலால் லுக்மான் தற்போது இப்பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டே, கயன்கூர் நகராட்சியின் நிர்வாகத்திலும் பங்கெடுப்பது அவருக்கு ஒரு ‘Double-Engine’ பலத்தைக் கொடுக்கிறது. ஒருபுறம் பல்கலைக்கழகத்தில் கற்கும் கோட்பாட்டு ரீதியான சட்ட அறிவு, மறுபுறம் நகராட்சியில் மேற்கொள்ளும் நடைமுறை ரீதியான நிர்வாக அனுபவம். இந்த இரண்டுமே அவரை எதிர்காலத்தில் பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் ‘டெப்யுட்டி’ (Député) பதவிக்கு மிகச்சிறந்த வேட்பாளராக நிலைநிறுத்தும்.

அமைச்சரவை நோக்கிய நகர்வு (Path to the French Cabinet)

பிரான்ஸ் அரசியலில் ‘டெக்னோக்ராட்ஸ்’ (Technocrats) எனப்படும் துறைசார் வல்லுநர்களுக்கு அமைச்சரவையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிலால் போன்ற தமிழ் இளைஞர்கள் இத்தகைய உயர்தரக் கல்வி நிறுவனங்களில் தடம் பதிப்பது, வரும் காலங்களில் அமைச்சரவையில் (French Ministry) ஒரு தமிழருக்கான இடத்தை உறுதி செய்கிறது. குறிப்பாக, சட்டத்துறை, கல்வி அல்லது ஐரோப்பிய விவகாரங்கள் போன்ற அமைச்சகங்களில் அசாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் எப்போதும் முன்னுரிமை பெறுகிறார்கள்.

பிரித்தானியாவின் ரிஷி சுனக் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மூலம் அரசியல் உயரங்களை எட்டியது போல, பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு அசாஸ் பல்கலைக்கழகம் அந்த வாய்ப்பை வழங்குகிறது. இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில், பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் விவாதங்களில் ஒரு தமிழரின் சட்ட ரீதியான குரல் ஒலிப்பதை நாம் எதிர்பார்க்கலாம்.

புலம்பெயர் சமூகத்தின் அறிவுசார் புரட்சி

இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு குடும்பத்தின் இரண்டாம் தலைமுறை இளைஞர், பிரான்ஸின் மிகக் கடினமான ‘எலைட்’ கல்வி நிறுவனத்தில் நுழைந்திருப்பது, புலம்பெயர் தமிழர்களின் அறிவுசார் வளர்ச்சியைக் காட்டுகிறது. இவர்கள் தங்களைச் சமூகத்தின் விளிம்புநிலையில் வைத்திருப்பவர்கள் அல்ல; மாறாக, ஒரு நாட்டின் மைய அதிகாரத்தைச் (Establishment) சட்டப்பூர்வமாக அணுகுபவர்கள்.

பிலால் லுக்மானின் வெற்றி என்பது வெறும் ஒரு தேர்தல் வெற்றியல்ல; அது ஒரு சமூகத்தின் நீண்டகால அரசியல் முதலீடு. பாரிஸ்-பாந்தியன்-அசாஸ் பல்கலைக்கழகம் வழங்கும் அந்த ‘அதிகார அடையாளத்தை’ வைத்துக்கொண்டு, பிலால் லுக்மான் மற்றும் அவரைப் போன்ற தமிழ் இளைஞர்கள் பிரான்ஸ் நாட்டின் அமைச்சரவை வரை செல்வது என்பது காலத்தின் கட்டாயம். தமிழர்களின் அரசியல் அதிகாரம் இப்போது கல்வியின் வழியாகக் கட்டி எழுப்பப்படுகிறது, அது எவராலும் அசைக்க முடியாத பலத்தைக் கொண்டது.

பிரெஞ்சு அதிகார மையத்தில் ஈழத்தமிழரின் எழுச்சி: ஓர் அரசியல் பகுப்பாய்வு

0

பாரிஸ், பிரான்ஸ்: ஐரோப்பிய மண்ணில் குடியேறிய ஈழத்தமிழர்கள், ஆரம்பக் காலங்களில் பொருளாதாரத் தன்னிறைவுக்காக உழைத்த ‘குடியேறிகள்’ என்ற நிலையிலிருந்து, இன்று அந்த நாடுகளின் சட்டங்களை இயற்றும் மற்றும் நிர்வாகத்தைத் தீர்மானிக்கும் ‘அதிகாரச் சக்திகளாக’ (Power Centers) உருவெடுத்துள்ளனர். இதற்குச் சான்றாக, பாரிஸின் புறநகர்ப் பகுதியான கயன்கூர் (Guyancourt) நகராட்சியில், தனது 18-வது வயதிலேயே நகர சபை உறுப்பினராகத் தேர்வாகியுள்ள பிலால் லுக்மான், ஒரு தனிமனித வெற்றியைத் தாண்டி ஒரு சமூகத்தின் அரசியல் முதிர்ச்சியையே பறைசாற்றுகிறார்.

அரசியல் தளம்: 15 வயதில் தொடங்கிய வியூகம்

பிலால் லுக்மானின் இந்தப் பயணம் தற்செயலானது அல்ல; அது ஒரு தீர்க்கமான அரசியல் வரைபடம். பிரான்ஸின் அரசியல் கலாச்சாரமானது, அனுபவமிக்க மூத்த தலைவர்களுக்கிடையே இளம் திறமையாளர்களுக்கு (Young Technocrats) எப்போதும் முன்னுரிமை அளிப்பது. பிலால் தனது 15-வது வயதிலேயே பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் (Assemblée Nationale) பயிற்சியாளராக இணைந்து, ஒரு சட்டம் எவ்வாறு ஒரு விவாதப் பொருளாக மாறி, பின் அரசாணையாக உருப்பெறுகிறது என்பதை நேரடியாகக் கற்றவர். இந்த நுணுக்கமான அறிவுதான், அவரைப் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு சட்டப் படிப்போடு, ஒரு நகரத்தின் நிர்வாகப் பொறுப்பையும் ஏற்கத் தூண்டியது.

கல்வியும் அதிகாரமும்: அமைச்சரவைக்கான திறவுகோல்

பிலால் பயின்று வரும் Paris-Panthéon-Assas பல்கலைக்கழகம் என்பது சாதாரணமான ஒன்றல்ல. பிரான்ஸின் மிக உயரிய நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை உருவாக்கிய ‘அதிகாரத் தொழிற்சாலை’ அது. பிரான்ஸ் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின்படி, அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு ஒருவருக்குத் தெளிவான சட்ட அறிவும் (Jurisprudence), நிர்வாக அனுபவமும் அவசியம். பிலால் லுக்மான் தற்போது இந்த இரண்டையுமே ஒருசேரக் கையாண்டு வருகிறார். இது அவர் வரும் காலங்களில் பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் ‘டெப்யுட்டி’ (Député) எனப்படும் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அதன் தொடர்ச்சியாக அமைச்சரவையில் ஒரு முக்கியத் துறையை அலங்கரிக்கவும் வழிவகுக்கும்.

தமிழர்கள் எப்போது பிரான்ஸ் பிரதமராக முடியும்?

பிரித்தானியாவில் ரிஷி சுனக் பிரதமராகப் பதவியேற்ற நிகழ்வு, ஐரோப்பாவின் ‘வெள்ளை இனத்தவர் மட்டுமே ஆள முடியும்’ என்ற பிம்பத்தை உடைத்தது. பிரான்ஸிலும் இந்த மாற்றம் மிக வேகமாக நிகழ்ந்து வருகிறது. பிரான்ஸ் ஒரு ‘மெரிட்டோக்ரசி’ (Meritocracy – தகுதிக்கு முன்னுரிமை) நாடு. இங்கே ஒருவரது பூர்வீகம் எத்தகையது என்பதை விட, அவரது நிர்வாகத் திறன் எத்தகையது என்பதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்.

தற்போதைய அரசியல் நகர்வுகளின்படி, அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்களின் பிரதிநிதித்துவம் உறுதியாக இருக்கும். பிலால் லுக்மான் மற்றும் துணை மேயராக இருக்கும் ஆதித்யா அனந்தராஜா போன்ற இளம் தலைவர்கள், இன்னும் இரண்டு தேர்தல் சுழற்சிகளுக்குள் (Two election cycles) தேசிய அளவிலான அமைச்சர்களாக உயரும் வாய்ப்பு மிக அதிகம். குறிப்பாக, சட்டத்துறை, கல்வி அல்லது புலம்பெயர் விவகாரங்கள் தொடர்பான அமைச்சகங்களில் தமிழர்கள் இடம்பெறுவது ஐரோப்பிய அரசியலில் ஒரு புதிய விடியலாக அமையும்.

புலம்பெயர் அரசியலின் புதிய பரிமாணம்

இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வந்த பிலால், தனது உரையில் குறிப்பிடுவது போல: “நாம் எங்கிருந்து வந்தோம் என்பது ஒரு முகவரி மட்டுமே; நாம் எங்கே செல்லப்போகிறோம் என்பதே நமது இலக்கு”. இது வெறும் வசனமல்ல; இது இரண்டாம் தலைமுறை புலம்பெயர் தமிழர்களின் மனநிலை. இவர்கள் தங்கள் வேர்களைப் பெருமையுடன் சுமந்து கொண்டே, தங்களை முழுமையான பிரெஞ்சு குடிமக்களாக மாற்றிக்கொண்டுள்ளனர்.

நிர்வாகத் தரவு மற்றும் ஆதாரங்கள் (Verified Links)

  1. கயன்கூர் நகராட்சி உறுப்பினர்கள் பட்டியல்: பிலால் லுக்மான் தற்போது ‘Guyancourt’ நகராட்சியின் பெரும்பான்மை குழுவின் உறுப்பினராக இருப்பதை இங்கே சரிபார்க்கலாம். Ville de Guyancourt – Official Site
  2. பிரெஞ்சு உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்: பிரான்ஸ் உள்துறை அமைச்சகத்தின் (Ministère de l’Intérieur) தரவுகளின்படி, மிகக் குறைந்த வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் பிலாலும் ஒருவராவார்.

பிலால் லுக்மானின் வெற்றி என்பது ஈழத்தமிழர்களின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனை. இது ஒரு நகர சபையுடன் முடியப்போவதில்லை. பிரெஞ்சு அரசியலின் ‘எலிசே மாளிகை’ (Élysée Palace) நோக்கிய பயணத்தின் தொடக்கப்புள்ளி இது. ஒரு தமிழன் பிரான்ஸின் அமைச்சராகவோ அல்லது பிரதமராகவோ பதவி ஏற்கும் காலம் தூரத்தில் இல்லை; அது பிலால் லுக்மான் போன்றவர்களால் மிக விரைவில் நிகழ்த்தப்படும் நிதர்சனம்.

சிவகாமியின் சபத வாதாபி – 1500 ஆண்டு பழமையான கலை அதிசயங்கள்

0

சிவகாமியின் சபதத்தில் வரும் வாதாபி – 1500 ஆண்டு பழமையான சாளுக்கிய கலை அதிசயங்கள் | Badami, Aihole, Pattadakal பயணம் – பகுதி 1

பல நாட்களாக என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்த இந்தத் தொடரை எழுத இப்போதுதான் நேரம் வாய்த்தது. கல்கியின் சிவகாமியின் சபதம் வாசித்த எவருக்கும் வாதாபி எனப்படும் பாதாமி ஒரு தீராத கனவுத் தேசம். அந்த நாவலில் வரும் பல்லவ மாமன்னன் நரசிம்மவர்மன் (மாமல்லன்), வாதாபியின் மீது போர் தொடுத்து, அந்நகரை அழித்து, தனது வெற்றிக் கல்வெட்டைப் பொறித்து வந்த வரலாற்றுச் சுவடுகளைக் காண்பதுதான் எங்களின் முதன்மை நோக்கமாக இருந்தது.

அன்று கி.பி. 642-ல் வாதாபியின் வீதிகளில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தபோது, யானைகளின் பிளிறலும், வாள்களின் மோதலும், வீரர்களின் மரண ஓலமும் அந்த செந்நிறப் பாறைகளில் எதிரொலித்திருக்கக்கூடும். சாளுக்கிய மாமன்னன் இரண்டாம் புலிகேசியை வீழ்த்திய மாமல்லன், தனது வெற்றியைப் பதிவு செய்த கல்வெட்டு இன்றும் பாதாமி அருங்காட்சியகம் அருகிலுள்ள பாறையில் காலத்தை வென்று கம்பீரமாக நிற்கிறது. ஒரு பேரரசின் வீழ்ச்சியும், ஒரு நகரின் சிதைவும் வரலாற்றின் கோரமான பக்கங்கள். ஆனால், இந்த அழிவின் சுவடுகளுக்குப் பின்னால் ஒரு மாபெரும் நிர்மாணத்தின் வரலாறு ஒளிந்திருக்கிறது.

பல்லவர்கள் வாதாபியைச் சிதைப்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே, கி.பி. 543-544 காலக்கட்டத்தில் ஆரம்பகால சாளுக்கிய வம்சத்தை நிறுவிய முதலாம் புலிகேசி, இந்தப் பாறைகளின் மேல் வலிமையான கோட்டையை அமைத்தார். வாதாபி நகருக்கு மேலே உள்ள மலையில் அவர் கோட்டை அமைத்ததை உறுதிப்படுத்தும் கல்வெட்டு இன்றும் அங்குள்ள ஒரு பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது (அந்தக் கல்வெட்டின் முழுமையான வாசகம் வரலாற்றுப் புத்தகங்களில் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை என்றாலும், கோட்டை அமைக்கப்பட்ட ஆண்டான 543-544 என்பதை அது உறுதியாகப் பதிவு செய்துள்ளது).

அசுவமேதம் உள்ளிட்ட யாகங்களைச் செய்து அவர் தங்களது சுதந்திர ஆட்சியைப் பிரகடனப்படுத்தினார். மூன்று பக்கமும் செங்குத்தான செம்மணற்கல் பாறைகளால் சூழப்பட்ட இந்த இயற்கையான பாதுகாப்பே வாதாபியை அவர்களின் தலைநகராக மாற்றத் தூண்டியது. அழிவுகளையும் தாண்டி இன்றும் கம்பீரமாக நிற்கும் சாளுக்கியர்களின் குடைவரைகளும் கோயில்களும், காலத்தை வென்ற அவர்களின் கலை தாகத்திற்குச் சாட்சிகளாக விளங்குகின்றன.

வரலாற்றுத் தேடலும் மழையின் சாரலும்!

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆவணம் கருத்தரங்கம் இனிதே முடிவடைந்த கையோடு, எங்களின் இந்த வரலாற்றுப் பயணம் தொடங்கியது. நானும் எனது நண்பர் திரு. முருகன் நடராஜன் அவர்களும் இணைந்து மேற்கொண்ட மூன்று நாள் தேடல் இது. இந்தப் பயணத்துக்கான முழுத் திட்டமிடலும் நண்பர் முருகன் நடராஜனுடையது தான். எங்கு செல்ல வேண்டும், என்னென்ன கல்வெட்டுகளைப் பார்க்க வேண்டும் என அனைத்தையும் மிகத் துல்லியமாக அவர் திட்டமிட்டிருந்தார்.

பயணத்திற்கு முன்பே, அந்த இடங்களைப் பற்றிய முழுமையான வரலாற்றுத் தகவல்களைப் படித்துவிட்டுச் சென்றது, இந்தப் பயணத்தை வெறும் சுற்றுலாவாக அல்லாமல் ஒரு ஆழ்ந்த வரலாற்றுத் தேடலாக மாற்றியது. பெங்களூரிலிருந்து இரவு ரயிலில் ஏறி, அதிகாலை 6 மணிக்கெல்லாம் பாதாமி ரயில் நிலையத்தை வந்தடைந்தோம். நாங்கள் சென்ற ஜூலை மாதம் நல்ல மழைக்காலம். மழையில் நனைந்தபடி வாதாபியின் மண்ணில் கால் பதித்தபோது, அங்கிருந்த குடைவரைகளும் கோயில்களும் சொல்ல முடியாத பேரழகோடு காட்சியளித்தன.

மல்பிரபா நதிப் பள்ளத்தாக்கின் செம்மணற்கல் பாறைகளும், கண்கவர் பள்ளத்தாக்குகளும் மழையில் நனைந்து ஜொலித்தன. சாளுக்கியப் பேரரசின் சுவடுகள் மழையின் சாரலில் மேலும் மிளிர்ந்தன. பாதாமியின் உண்மையான அழகை முழுமையாக ரசிக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக ஒரு மழைக்காலத்தில் தான் செல்ல வேண்டும்.

மல்பிரபா பள்ளத்தாக்கும் மேகுடி மலையின் பெருங்கற்கால சின்னங்களும்

ஐஹொளே பற்றிய பயணக்கட்டுரைக்குள் நுழைவதற்கு முன்பு, அங்குள்ள பழங்கால சின்னங்கள் பற்றிய விரிவான தகவல்கள் இதோ. கர்நாடகாவில் உள்ள ஆரம்பகால சாளுக்கியர்களின் ராஜ்ஜியம் முக்கியமாக ஒரு பள்ளத்தாக்கிற்குள் அடங்கியுள்ளது. இது அதன் அகலமான பகுதியில் 8 கிலோமீட்டர் அகலத்திற்கும் சற்றே அதிகமாகவும், சுமார் 25 கிலோமீட்டர் நீளமும் கொண்டது. இதன் வழியாக மல்பிரபா நதி வடகிழக்கு திசையில் பாய்கிறது.

இந்த பள்ளத்தாக்கு செம்மணற்கல் பாறைகளால் சூழப்பட்டுள்ளது, இவற்றில் சில வியக்கத்தக்க செங்குத்துப் பாறைகள் மற்றும் அற்புதமான பள்ளத்தாக்குகளைக் கொண்டுள்ளன. இந்த தனிமையான பகுதி இன்று செழிப்பான நீர்ப்பாசன வசதியைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் தக்காணத்தின் பெரும்பகுதி வரை விரிவடைந்திருந்த ஒரு ராஜ்ஜியத்தின் மையமாக இது செயல்பட்டதால், இது அதிக மக்கள் தொகை கொண்டதாக இருந்திருக்க வேண்டும்.

ஏராளமான நீர் விநியோகத்துடன், கரடுமுரடான பாறைகளால் சூழப்பட்டுள்ளதால் மல்பிரபா பள்ளத்தாக்கு இயற்கையான பாதுகாப்பையும் பெறுகிறது. ஆரம்பகால சாளுக்கியர்களும், அவர்களின் வாரிசுகளும் இதை நன்கு உணர்ந்திருந்தனர். அவர்கள் பாறைகளின் ஓரங்களில் பாதுகாப்பு கோட்டை சுவர்கள், கொத்தளங்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்தனர். போர்களும் படையெடுப்புகளும் நீண்ட காலத்திற்கு முன்பே கடந்துவிட்டன, மல்பிரபா பள்ளத்தாக்கு இப்போது அதன் தனிமையான சூழ்நிலையால் அதிக அழகைப் பெறும் ஒரு அமைதியான, கிராமப்புறப் பகுதியாக உள்ளது.

நதி மற்றும் சுற்றியுள்ள பாறைகளின் இயற்கையான குகைகள், பாறை ஓவியங்கள் எனப் பழங்காலம் முதலே மல்பிரபா பள்ளத்தாக்கு மனிதர்களின் வாழ்விடமாக இருந்ததில் ஆச்சரியமில்லை. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான வரலாற்றுக்கு முந்தைய எச்சங்கள் (Prehistoric Remains) இதனை உறுதிப்படுத்துகின்றன. இவை டால்மென்கள் (Dolmens) எனப்படும் கல் அடக்க அமைப்புகளாகவும் (கல்பதுக்கைகள்), இயற்கையான பாறை குகைகளின் பரப்புகளில் வரையப்பட்ட அல்லது கொத்தப்பட்ட விலங்குகள், பறவைகள் மற்றும் மனித உருவங்களாகவும் உள்ளன. இந்த அடக்கங்கள், ஓவியங்கள் மற்றும் சித்திரங்களின் காலக்கட்டம் பழங்கற்காலம் (Palaeolithic), நுண்கற்காலம் (Microlithic) மற்றும் பெருங்கற்காலம் (Megalithic) சார்ந்தது.

மேகுடி மலையில் உள்ள பெருங்கற்கால சின்னங்கள் (டால்மென்கள்): ஐஹொளேயில் உள்ள மேகுடி மலையின் உச்சிப் பகுதியில் சுவர்களுக்கு அப்பால் உள்ள பாறைகள் நிறைந்த இடத்தில், ஏராளமான டால்மென்களைக் (கல்பதுக்கைகள்) காண முடியும், அவற்றில் பல இப்போது இடிந்து கிடக்கின்றன. ஒப்பீட்டளவில் முழுமையான நிலையில் எஞ்சியிருப்பவை நான்கு செங்குத்தான கல் பலகைகளைக் கொண்டு ஒரு நாற்கர அறையை உருவாக்குகின்றன, அவற்றின் மேல் மிகப் பெரிய, வடிவம் இல்லாத கிடைமட்ட கல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

சங்கமிக்கும் வழிபாட்டு மரபுகள்

இந்த மூன்று நாள் பயணத்தில் நாங்கள் காணவிருக்கும் கலைப் பொக்கிஷங்களின் பெயர்களை நினைத்தாலே நெஞ்சம் இனிக்கிறது. சாளுக்கியர்களின் இந்தத் தலைநகரங்களில் ஒரு மாபெரும் பேரரசு எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் மட்டும் தங்களைச் சுருக்கிக் கொள்ளாமல், சைவம், வைணவம், சமணம், பௌத்தம், சௌரம் (சூரிய வழிபாடு), சாக்தம் (அம்மன் வழிபாடு) எனப் பல்வேறு வழிபாட்டு மரபுகளுக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளது. வரும் நாட்களில் நாங்கள் விரிவாகப் பார்க்கவிருக்கும் இடங்கள்:

பாதாமியில்: செங்குத்தான பாறைகளில் குடையப்பட்டுள்ள நான்கு மாபெரும் குடைவரைகளில் மத நல்லிணக்கம் மிளிர்கிறது. சிவன் நடராஜராக வீற்றிருக்கும் முதலாம் குடைவரை சைவ மரபிற்கும், விஷ்ணுவுக்கான இரண்டு மற்றும் மூன்றாம் குடைவரைகள் வைணவ மரபிற்கும், நான்காம் குடைவரை சமண மரபிற்கும் உரியவை. மேலும் அகஸ்திய தீர்த்தக் குளக்கரையில் அமைந்திருக்கும் பூதநாதர் கோயில், மலைக்கட்டி சிவாலயம், மேல் சிவாலயம் மற்றும் கீழ் சிவாலயம் ஆகியவை சைவ மற்றும் வைணவக் கூறுகளைக் கொண்டுள்ளன.

ஐஹொளேயில்: இந்தியக் கோயில் கட்டிடக்கலையின் தொட்டிலான இங்கு பல்வேறு வழிபாட்டு நெறிகளைக் காண முடிகிறது. ஆரம்பத்தில் சூரியனுக்காகக் கட்டப்பட்ட சௌர மரபைச் சேர்ந்த தனித்துவமான அரைவட்ட வடிவம் கொண்ட துர்கா கோயில், அன்னை கௌரிக்காகக் கட்டப்பட்ட சாக்த மரபைச் சேர்ந்த கௌடர்குடி, மற்றும் மரக்கட்டிடங்களை ஒத்த அமைப்புடைய லாட்கான் கோயில் இங்கு உள்ளன. தூய சைவ மரபைக் குறிக்கும் ராவணபாடி குடைவரை, கி.பி. 634-ல் கட்டப்பட்ட மேகுடி சமணர் கோயில் மற்றும் ஒரு பௌத்த குடைவரைக் கோயிலும் இங்கு அமைந்துள்ளன. மேலும், கௌமாரம் சார்ந்த குறிப்புகளாக ஹுச்சிமல்லிகுடி கோயிலின் மேற்கூரையில் மயில் வாகனத்தில் பறக்கும் கார்த்திகேயன் (முருகன்) சிற்பமும் காணப்படுகிறது.

பட்டடக்கல்லில்: பாசுபத சைவ மரபின் உச்சமாகத் திகழும், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பிரம்மாண்டமான விருபாக்ஷா கோயில், மல்லிகார்ஜுனா கோயில், சங்கமேஸ்வரா கோயில், பாபநாதர் கோயில் மற்றும் காசிவிஸ்வநாதர் கோயில் ஆகியவை இங்குள்ளன. அத்துடன் ஒரு சமணக் கோயிலும் இங்கு அமைந்துள்ளது.

மகாக்கூடாவில்: புனித நீரூற்றைக் கொண்ட மகாக்குடேஸ்வரா மற்றும் மல்லிகார்ஜுனா கோயில்கள் தூய சைவ மரபைப் பறைசாற்றுகின்றன. சாளுக்கியர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை அதிசயங்களை நோக்கிய எங்கள் தேடல் இங்கிருந்துதான் விஸ்வரூபம் எடுத்தது.

நீளிரா – விடியும் ஈழ தமிழர் சினிமா!

0

நீளிரா – போர் எதிர்ப்புப் படம்
~
தனிப்பட்ட பகை எதுவுமில்லாத மனிதர்கள், ஒருவரையொருவர் ஈவிரக்கமின்றி கொலை செய்யப் பயிற்றுவிக்கப்படுவதுதான் போரின் அபத்தமான அம்சம். உலகம் போரின் அபத்த விளைவுகளை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில்தான் இன்று நீளிரா பார்த்தேன்.

இன்று நடைபெறுவது அதிகாரத்துக்கான, ஒரு நாட்டின் கனிமவளங்களுக்கான போர்.
ஆனால் இலங்கையில் நடைபெற்ற யுத்தம் ஓர் இனத்தின் விடுதலைக்கானது.

நீள் + இரவு என்பதுதான் நீளிரா.

1987 இலங்கையில் அமைதியை நிலைநாட்டும் விதமாக இந்நிய அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ் விடுதலை இயக்கங்கள் திறந்த மனதுடன் இந்திய அமைதிப்படையை வரவேற்றன. ஆனால் இந்திய அமைதிப்படையோ தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் அப்பாவித் தமிழர்களுக்கும் சொல்லொணா கொடுமைகளைத் தந்தது.

அமைதிப்படை வெளியேற வேண்டுமென இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் மக்கள் போராடினர். உண்ணாநோன்பு மேற்கொண்டு உயிர் துறந்த திலீபனின் கோரிக்கைகளுள் ஒன்று அமைதிப்படை வெளியேற வேண்டுமென்பது.

சரி, இப்போது நீளிரா
கதையைப் பார்ப்போம்.

யாழ்ப்பாணத்தில் ஓர் எளிய தமிழ்க் குடும்பம். அந்த வீட்டு பெண்ணுக்கு விடிந்தால் கல்யாணம். மாப்பிள்ளை ஃப்ரான்ஸில் இருக்கிறார். மணப்பெண்ணை மட்டும் வைத்துத் திருமணச் சடங்கு செய்து
அவளை வழியனுப்ப வேண்டும்.

அன்றிரவு, விடுதலைப் போராளிகளைத் தாக்க அமைதிப்படைத் திட்டமிடுகிறது. அதில் ஒரு படையணி தவறுதலாக திருமண வீட்டுக்கு
அருகே வந்துவிடுகிறது. விடியும்வரை அந்தக்குழுவினர் கல்யாண வீட்டில் தங்கியிருக்கத் திட்டமிடுகின்றனர்.
இது தெரிந்து போராளிக்குழுவினர் அவர்களைத் தாக்க முனைகின்றனர்.
அந்த இரவில் என்ன நடந்தது?
மறுநாள் காலை அந்தப் பெண்ணுக்கு திருமணம் நடந்ததா? இதுதான் நீளிரா.

இச்சூழலில் அந்த அப்பாவித் தமிழ்க் குடும்பத்தினர் அனுபவிக்கிற வலிகளையும் வேதனைகளையும் மனதைப் பிசையும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஒரு இனத்தின் மீது போர் உருவாக்கிய பதற்றத்தை, அச்சத்தை, நிரந்தரமின்மையை, மனக்குலைவை, ஒவ்வொரு காட்சிவழியாகவும் வெளிப்படுத்துகிறார் இயக்குநர் சோமீதரன். ஒரு போரால் மானுடத்தின் அமைதி எவ்வாறெல்லாம் சிதைக்கப்படுகிறது? மனம் நடுங்கும் வகையில் காட்டுகிறார்கள்.

இத்தனைக்கும் இடையில், அங்கு சிறுவர்கள் போரை எளிதாக எடுத்துக்கொண்டு பகடி செய்கிறாராகள். போரின் வெப்பம் பரவும் ஒரு நிலத்தை காதலின் ஈரமும் நனைக்கிறது. தன் கணவன் எங்கே? தெரியவில்லை. மகளுக்காவது
ஒரு நல் வாழ்க்கை அமையட்டும்.
என எதிர்காலம் மீது தாய்மார்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்.

நாம் யாருக்காக போராடுகிறோம்? யாரை எதிர்த்து போராடுகிறோம்? அமெரிக்க ராணுவ வீரர்களைப் போன்றதுதான் இந்திய ராணுவத்தின் நிலையும். அர்த்தமற்ற வன்முறை, தர்க்கத்தின் முறிவு, அன்றாட வாழ்வை உச்சகட்ட அழிவில் நிறுத்துவது, இவற்றை உள்ளடக்கியதுதான் போர். அதிகாரத்துவத்தின் கொடுங்கனவுகளே போரைக் கட்டமைக்கின்றன.

இந்தக் குடும்பத்தில் ஒருவர் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் வேலை செய்தவர். அப்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எல்லைகள் கிடையாது. எல்லைக் கோடுகளை போர்கள் அழிக்கின்றன. அல்லது புதிதாக உருவாக்குகின்றன.

போரில்,ஈடுபடுவது பகைவர்கள் மட்டுமில்லை. சகோதரர்களும்தான். இந்தியா, சகோதரர்களோடு சண்டை செய்யும் அபத்தத்தைத் செய்தது. பெரிய அளவில் தமிழ் ஈழம் , இந்திய அமைதிப்படையின் வன்முறை, என்றெல்லாம் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்த்து, ஒரு திரைப்படத்துக்குத் தேவையானவற்றை மட்டும் காட்டியிருக்கிறார் இயக்குனர். அதேவேளை நீளிரா ஓர் போர் எதிர்ப்புப் படமாக முழுமையடைந்த ஒரு கலை முயற்சியாக வெற்றி பெறுகிறது .

– கரிகாலன்

கனடாவின் இரட்டை நிலைப்பாடு: MV சன் சீ கப்பல்!

0

2010-ல் MV சன் சீ கப்பலில் வந்த 492 ஈழத் தமிழர்களில் ஒரே பின்னணி, ஒரே போர் அனுபவம், ஒரே அச்சுறுத்தலைச் சொல்லி அகதி உரிமை கோரியவர்கள். ஆனால் கனடா அரசு அவர்களை ஒரே அளவுகோலில் நடத்தவில்லை.

சிலர் அகதி உரிமை பெற்று, நிரந்தர வதிவிடம், பின்னர் கனேடிய குடியுரிமை பெற்றனர். அவர்கள் இன்று இலங்கைக்கு விடுமுறைக்குச் சென்று, குடும்பத்துடன் சுற்றுலா சென்று, பாதுகாப்பாக கனடா திரும்புகின்றனர். இலங்கை “ஆபத்தானது” என்று சொல்லி குடியுரிமை பெற்ற அதே நபர்கள், இப்போது அங்கு விடுமுறைக்குப் போவது சட்டபூர்வமானது என்று கனடா அரசே ஏற்றுக்கொள்கிறது.

ஆனால் அதே கப்பலில் வந்த, அதே காரணங்களைச் சொன்ன மற்ற தமிழர்களுக்கு அகதி உரிமை மறுக்கப்பட்டது. 16 ஆண்டுகளாக அவர்கள் limbo நிலையில் தவிக்கின்றனர். deportation அச்சத்தில் வாழ்கின்றனர். சமீபத்தில் குகதீஸ்வரன் துரைசிங்கம் போன்றவர்களுக்கு ஏப்ரல் 2026-ல் நாடு கடத்தல் உத்தரவு வரும் நிலை உள்ளது. இலங்கையில் சிறை, சித்திரவதை, மரண அபாயம் இருப்பதாக அவர்கள் இன்னும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

இது தெளிவான இரட்டைத்தரம். ஒரே கப்பல், ஒரே ஆண்டு, ஒரே போர் பின்னணி. ஆனால் சிலருக்கு கனடா “உங்கள் வாழ்க்கை பாதுகாப்பானது, இலங்கைக்கு போகலாம்” என்று குடியுரிமை கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்கு “இலங்கை இப்போது பாதுகாப்பானது, திரும்பிப் போங்கள்” என்று deportation செய்ய முயல்கிறது.

கனடா அரசின் நிலைப்பாடு என்ன? அகதி உரிமை அப்போதைய நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்கிறது. ஆனால் 16 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே நிலவரம் தொடர்ந்தால் என்ன செய்வது? இலங்கையில் மனித உரிமை அமைப்புகள் இன்னும் இராணுவ கண்காணிப்பு, அச்சுறுத்தல், சித்திரவதை அபாயம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் போது, failed asylum seekers-ஐ மட்டும் ஏன் திருப்பி அனுப்ப முயற்சிக்கிறது?

இது கனேடிய அகதி முறைமையின் பெரிய பலவீனத்தை காட்டுகிறது. ஒரே வழக்கில் சிலருக்கு உரிமை, சிலருக்கு மறுப்பு – இது தனிப்பட்ட சாட்சியங்கள், IRB உறுப்பினர்களின் மனநிலை, அல்லது அரசியல் அழுத்தங்களால் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை.

உண்மையில் , இது நியாயமற்றது. ஒரே பிரச்சினையை எதிர்கொண்ட அதே தமிழர்களுக்கு இரு விதமான நடத்தை இருக்கக்கூடாது. கனடா அரசு தன் அகதி கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். MV சன் சீ வழக்கில் மீதமுள்ளவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஒரு நியாயமான, ஒரே மாதிரியான தீர்வை வழங்க வேண்டும். “ஆபத்து இருந்தது” என்று சொல்லி குடியுரிமை கொடுத்தவர்களுக்கு இலங்கை பாதுகாப்பானது என்றால், அதே ஆபத்தைச் சொல்லும் மற்றவர்களுக்கும் அந்த உரிமையை வழங்க வேண்டும். அல்லது அனைவருக்கும் ஒரே அளவுகோல் இருக்க வேண்டும்.

இரட்டைத்தரம் என்பது நீதிக்கு எதிரானது. கனடா தன் பெயருக்கு ஏற்றவாறு மனித உரிமை அடிப்படையில் நடந்துகொள்ள வேண்டும்.

இந்த ஈழ தமிழ் அகதி, கனடாவில் இருந்து நாடு கடத்தப்படுவாரா?

0

இந்தத் தமிழ் அகதி நாடு கடத்தப்படுவாரா ? குகதீஸ்வரன் துரைசிங்கம் கனடாவுக்கு வந்து 16 ஆண்டுகள். 492 தமிழ் அகதிகளுடன் MV Sun Sea கப்பலில் மாதக்கணக்கில் கொடூரமான கடல் பயணத்தை மேற்கொண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு (B.C.) வந்தவர் இந்தக் குகதீசன் துரைசிங்கம்.

இன்றும் கனடாவில் அகதி அந்தஸ்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். சர்வதேச அளவில் பிரபலமான அந்தச் சரக்குக் கப்பலுடன் தொடர்பு கொண்டதால் மட்டுமே இலங்கையில் தனக்கு ஆபத்து இருப்பதாக அவர் கூறுகிறார். இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படும் அபாயம் இவரை எதிர்நோக்கியுள்ளது.

Sun Sea கப்பலில் ஏறுவதற்கு என்ன காரணம்?

குகதீஸ்வரன் துரைசிங்கம் 1977ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவருக்கு ஐந்து வயதிருக்கும் போது தாயார் இறந்தார். பின்னர் அவரது தந்தை அவரையும் மூன்று உடன்பிறப்புகளையும் பள்ளிப்படிப்பிலிருந்து விலக்கினார்.

குகதீஸ்வரன் துரைசிங்கம் இரும்பு வேலை செய்யும் (iron smith) மற்றும் மரவேலை (carpentry) நிலையங்களில் சின்ன வயதில் வேலைக்கு அனுப்பப்பட்டார்.குகதீஸ்வரன் துரைசிங்கம் 13 வயதில் சைக்கிள் பழுது பார்க்கும் கடையில் வேலை செய்தார். டயர்களைப் பழுது பார்ப்பது அவரது வேலை.

தொடர்ச்சியான துப்பாக்கிச் சத்தங்கள், வன்முறை மற்றும் குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தவர் இவர்.இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE) அமைப்புக்கும் இடையிலான யுத்தத்துக்கு மத்தியில் அவர் வளர்ந்தார்.

2001 இல் மணம் புரிந்த குகதீஸ்வரன் துரைசிங்கம் மூன்று பிள்ளைகளின் தந்தை. நீண்டகாலமாகத் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் பிரிந்த நிலையில் கனடாவில் அவரது அவல வாழ்வு தொடருகிறது.

2009ஆம் ஆண்டின் இறுதியில் அவர் தாய்லாந்துக்கு சென்று, அங்கிருந்து MV Sun Sea கப்பலில் ஏறினார். “அந்தப் படகில் நீண்ட பயணம். நிறையப் பேர் கப்பலுக்குள். உணவும் தண்ணீரும் போதவில்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் அனைவரும் இறந்துவிடுவோம் என்று நினைத்தோம்” என்று குகதீஸ்வரன் துரைசிங்கம் ‘ரொறொன்ரோ ஸ்ரார்’ பத்திரிகைக்கு மொழிபெயர்ப்பாளர் மூலம் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் கப்பல் பயணம் மூன்று மாதங்கள் நீடித்து 2010 ஓகஸ்ற் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா கரையை வந்தடைந்தது.கப்பலுக்குள் கனடிய அதிகாரிகள் வந்தபோது பயணிகளுக்கு ஆறுதலாக இருந்தது.ஆனால் அதன் பின்னர் சிறைவாசமும், “மனிதக் கடத்தல்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகள்” என்று அரசால் முத்திரை குத்தப்படுதலும் தொடர்ந்தது.

பின்பு பலர் விடுதலையானார்கள். விடுதலையானவர்கள் அகதி அந்தஸ்து கேட்டார்கள். அதிகமானவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு நிரந்தர வதிவிட அனுமதி, குடியுரிமை என்றெல்லாம் பெற்றார்கள்.அவரது வழக்கை முதலில் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் திறமையற்றதாக இருந்ததால், கப்பலில் வந்த தமிழர்களைக் கனடிய அரசும் ஊடகங்களும் சித்தரித்த விதத்தால் ஏற்படும் ஆபத்துகள் சரியாக மதிப்பீடு செய்யப்படவில்லை என்று அவரின் தற்போதைய வழக்கறிஞர் கூறுகிறார்.2012இல் அவரது அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மேல் முறையீடுகள், Pre-Removal Risk Assessment (PRRA) அனைத்தும் தோற்றன.

முக்கிய காரணம்: MV Sun Sea கப்பலில் வந்தவர்கள் இலங்கைக்குத் திரும்பினால் எதிர்கொள்ளும் ஆபத்துகள் (துன்புறுத்தல், கண்காணிப்பு, இராணுவ அச்சுறுத்தல்) அவரது வழக்கில் ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்படவில்லை.முந்தைய வழக்கறிஞர் இந்த முக்கிய ஆதாரங்களைச் சேர்க்கத் தவறிவிட்டார் என்று தற்போதைய வழக்கறிஞர் கூறுகிறார்.

கடந்த 16 ஆண்டுகளில் அவர் பட்ட வேதனைகள்:

நீண்டகால மனச்சோர்வு, மது பழக்கம்,மனநோய் (psychosis) – குரல்கள் கேட்டல், நினைவிழப்பு, தெரியாத இடங்களில் அலைதல் வீடு இல்லாமை (homelessness), பேருந்துத் தரிப்புகளில் இரவுநேர நித்திரை பல தடவைகள் தற்கொலை முயற்சிகள், மருத்துவமனை அனுமதி

2022-ல் அகதி விசாரணைக்கு வராததால் கைது, 2024-ல் மீண்டும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது.அப்போதுதான் Refugee Law Office வழக்கறிஞர் தலையிட்டு, அவருக்கு மனநோய் உள்ளதெனக் கண்டறியப்பட்டது.மவுண்ட் சினாய் மருத்துவமனைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டார்.

தற்போது தமிழ் மனநல ஆதரவுக் குழுவின் peer support worker அவர் விடயத்தில் பணியாற்றுகிறார். அவரது மனநல நெருக்கடி கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.2025இல் முன்னைய நீக்க உத்தரவு (removal order) நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டது.ஆனால் கடந்த வாரம் எல்லை அதிகாரிகள் மீண்டும் அவரது நீக்க உத்தரவை ஒத்திவைக்க மறுத்துவிட்டனர்.

“இலங்கை அரசுக்கு அவர் MV Sun Sea மூலம் கனடா சென்று இப்பொழுது இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளமை நன்றாகத் தெரியும்” என்று கூறும் தற்போதைய வழக்கறிஞர் Kes Posgate, “இவர் வீடு இல்லாமல், மனநோயால் பாதிக்கப்பட்டும், ஒருபோதும் சோர்வடையவில்லை. இப்போது தமிழ் சமூகத்துக்கு உதவுகிறார். ஆகவே இவரை நாடு கடத்தும் அநீதி மிகப் பெரியது” என்கிறார்.

இது MV Sun Sea கப்பலில் வந்த 492 தமிழ் அகதிகளில் ஒருவரின் நீண்டகாலப் போராட்டக் கதை. இன்னும் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.

பிற்குறிப்பு : யூலை 2015 ஆம் ஆண்டு Candian Council for Refugees அறிக்கையின்படி MV Sun Sea கப்பலில் வந்தவர்களில் 228 பேரின் அரசியல் தஞ்சக் கோரிக்கை ஏற்கப்பட்டது.116 பேரின் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.20 பேர் தங்களது தஞ்சக் கோரிக்கையை மீளப்பெற்றார்கள் அல்லது இல்லாமலாகியது.

பதிவுக்கு நன்றி – முரளிதரன் நடராஜா

கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் MV Sun sea ஈழ தமிழர்!

0

2010 ஆகஸ்ட் மாதம், தாய்லாந்திலிருந்து புறப்பட்ட எம்.வி. சன் சீ (MV Sun Sea) கப்பல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையை அடைந்தது. இதில் 492 ஈழத் தமிழர்கள் (380 ஆண்கள், 63 பெண்கள், 49 சிறுவர்கள் உட்பட) வந்திருந்தனர். இலங்கையில் 2009-ல் கொடூர இனப்படுகொலை போர் முடிவடைந்த பின்னர் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல், கைது மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக அகதிகளாக வந்தவர்கள் இவர்கள் எனக் கூறப்பட்டது.

ஆரம்பத்தில் கனடா அரசால் அனைவருக்கும் எதிராக அகதி உரிமை வழக்குகள் தொடரப்பட்டன. மனிதக் கடத்தல் மற்றும் பயங்கரவாதத் தொடர்பு குற்றச்சாட்டுகளுடன் பலர் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டனர். Immigration and Refugee Board (IRB) மூலம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில், சுமார் 228 பேரின் அகதி உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 116 பேரின் உரிமை மறுக்கப்பட்டது. LTTE உறுப்பினர் என்று நிரூபிக்கப்பட்டவர்கள் மிகக் குறைவு (சுமார் 11 பேர் மட்டும்). இதுவரை 30 பேருக்கு மட்டுமே நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாறு இருக்க இதே கப்பலில் வந்து கனேடிய குடியுரிமை (Permanent Residency அல்லது Citizenship) பெற்ற பலர் இன்று இலங்கைக்கு விடுமுறைக்குச் சென்று திரும்புகின்றனர் . இந்தப் பயணங்கள் சட்டபூர்வமானவை. அகதியாக அங்கீகரிக்கப்பட்டு கனடிய குடிமக்களாக மாறியவர்களின் உரிமை அவை , இது 2010-ல் இருந்த அப்போதைய இலங்கை நிலவரத்தின் அடிப்படையில் அளிக்கப்பட்டது.

ஆனால்,அதே கப்பலில் வந்து அகதி உரிமை மறுக்கப்பட்டவர்கள் இன்னும் நிலையற்ற நிலையில் (limbo) உள்ளனர். சிலர் 16 ஆண்டுகளுக்குப் பின்னரும் deportation அச்சத்தில் வாழ்கின்றனர். அண்மையில் குகதீஸ்வரன் துரைசிங்கம் (Kugatheeswaran Thuraisinkam / Kumar Thuraisinkam) என்பவரின் வழக்கு இதற்கு உதாரணமாகக் குறிப்பிடப்படுகிறது. 2010-ல் சன் சீ கப்பலில் வந்த அவர், அகதி உரிமை மறுக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 16, 2026 அன்று நாடு கடத்தப்படும் திட்டம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தனக்கு சிறை, சித்திரவதை, கைது மற்றும் மரண அபாயம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். MV Sun Sea-யில் வந்ததால் LTTE ஆதரவாளர் என்று பார்க்கப்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே,முன்பு நாடு கடத்தப்பட்ட சிலருக்கு இலங்கையில் சித்திரவதை ஏற்பட்டதாக affidavit (உறுதிமொழி) ஆவணங்கள் உள்ளன. 2011-ல் deported செய்யப்பட்ட Sathyapavan Aseervatham என்பவர், இலங்கை சிறையில் சித்திரவதைக்கு உள்ளாகியதாகக் கூறியுள்ளார். இத்தகைய சம்பவங்கள், failed asylum seekers திரும்பினால் விமான நிலையத்தில் CID அல்லது SIS விசாரணைக்கு உள்ளாகலாம் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

அகதி உரிமைக்காக சிலர் கனடா அரசை “ஏமாற்றினார்களா” என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அனைவருக்கும் ஆரம்பத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சிலரின் உரிமை சாட்சியங்கள் மற்றும் இலங்கை நிலவர அறிக்கைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இதை பொதுவாக “பொய் சொல்லி ஏமாற்றியது” என்று கூற முடியாது. IRB மதிப்பீடுகள் தனிப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை. சில உரிமைகள் நீதிமன்றத்தில் திருத்தப்பட்டுள்ளன.

இன்று இலங்கை அரசு “நாடு பாதுகாப்பானது” என்று கூறி, தமிழ் அகதிகளை (குறிப்பாக இந்தியாவிலிருந்து) திரும்ப அழைக்கிறது. சிலர் திரும்பியும் உள்ளனர். ஆனால், மனித உரிமை அமைப்புகள் (Human Rights Watch, Amnesty International உள்ளிட்டவை) வடக்கு-கிழக்கில் இராணுவ கண்காணிப்பு, அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்வதாகத் தெரிவிக்கின்றன. Failed asylum seekers-க்கு இலங்கைக்குப் பயணம் எளிதல்ல; அவர்களுக்கு ஆபத்து இருக்கலாம்.

கனடா அரசு ஆரம்பத்தில் “பயங்கரவாதிகள்” என்று பிரச்சாரம் செய்தாலும், பின்னர் பெரும்பாலான உரிமைகளை இவர்களுக்கு கொடுத்தது . தற்போதும் deportation நடவடிக்கைகள் தொடர்கின்றன. தமிழ் சமூகம் அங்கும் இங்குமாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்த விவகாரம் கனேடிய அகதி முறைமையின் சிக்கல்களை வெளிப்படுத்துகிறது. அகதி உரிமை அப்போதைய நிலவரத்தின் அடிப்படையில் அளிக்கப்படுகிறது.

முக்கிய ஆதாரங்கள்: