காலை எழுந்தவுடன் தவளை என்ற இந்த புத்தக தலைப்பு சிலருக்கு ஆரம்பத்தில் புரியாமல்இருக்கலாம்.ஆனால் எமக்கும் எமது இலக்குகளுக்கும் இடையிலான பயண நுணுக்கங்களை பற்றியும்துல்லியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையானவை பற்றியும் எளிமையாக அலசுகின்றது.
இன்று ஒரு நாள் காலையிலிருந்து வர போகின்ற உங்களின் எதிர்கால வாழ்க்கை வரையிலான மொத்த காலஅளவையும் அதற்கான நுட்பங்களையும் விளக்கி சொல்கின்றது.இலக்கு தொடர்பான எமக்குள் செய்யவேண்டிய சில மாற்றங்களையும் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்களையும் விலாவாரியாக விவரித்துகூறுகின்றது.
உங்கள் வெற்றிக்கான மாபெரும் விதிமுறைகள் தொடர்பான விளக்கத்தை தருகின்றது.ஒரு யானையைஎவ்வாறு சாப்பிடுவது..? ஒரு நேரத்தில் ஒரு கடி.. அதாவது யானை போல் உள்ள பெரிய ஒரு வேலையைஎவ்வாறு செய்து முடிப்பது..? பெரிய வேலையை சிறு துண்டுகளாக பிரித்து ஒரு நேரத்தில் ஒரு துண்டு வேலை..
நீங்கள் இலக்குகள்,வாழ்வில் வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கான பக்கத்தையும் உங்களுக்குகாட்டுகின்றது.உங்கள் ஆற்றலை எவ்வாறு பிரித்து கொள்வது? எதற்கு எவ்வளவு? எப்படி பயன்படுத்துவது எனகுறிப்பிட்டு கால வரைகளுடன் கணிக்க உதவுகின்றது.
உங்கள் இலக்குகள் நோக்கி இலகுவாக முன்னேறுவதற்கான நடைமுறைகள்,தந்திரங்கள்,தடைநீக்கிகளை , சிந்தனை முறைகள், நீண்டகால நோக்குகள், நிகழ்கால தேர்ந்தெடுப்புக்கள் , காலகெடுகள் , வீண்அழுத்தங்கள் , முட்டுகட்டைகள், மட்டுபடுத்தும் காரணிகள் , முக்கியான எடுகோள்கள் என இந்த புத்தகம்விரிவாக பேசுகின்றது.
வாழ்வில் இலக்குகளை அடைய விரும்பும் அனைவருக்கும் இந்த புத்தகம் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.