Read More

இலங்கை கிரிக்கெட் வீர ரின் தந்தையை கொன்றவரை விடுவித்த பிரான்ஸ் நீதிமன்றம்!

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பாதாள உலக நபரான ‘குடு அஞ்சு’ என அழைக்கப்படும்சின்ஹாரகே சமிந்த சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தெஹிவளை – கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் கொலை, பாரியளவிலானபோதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்த ‘குடு அஞ்சு’ கடந்தஏப்ரல் மாதம் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார்.

- Advertisement -

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்தி வந்த ‘குடு அஞ்சு’ என்பவரை கைது செய்ய இன்டர்போலும் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இவர் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையை கொன்ற பிரதான சந்தேகநபராவார்.இந்நிலையில் இவரின் விடுதலையை இலங்கையில் பார்டி வைத்து கொண்டாடிய இவரின் சகாக்கள்நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Chargement des actualités de Capital.fr...