France paris tamil news – பாரிஸில் தமிழ் குடும்பஸ்தர் இழந்த மூன்று கோடி!
பிரான்ஸில் இருபது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் 3 கோடி ரூபா பணத்தை இழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..
பாரிஸில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை ஊரில் உள்ள தனது சொந்த மூத்த சகோதரியிடம்கொடுத்துள்ளார்.குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஊருக்கு வந்து ஊரோடு வாழ்வதே தனது விருப்பம்என்றும்,அதற்கு ஒரு நல்ல காணி,அதில் அளவான ஒரு வீடு,தென்னை வேம்பு,பழ மரங்கள் , காய்கறிகள் எனஈழத்தில் வாழ ஆசைப்பட்டு பணத்தை பகுதி பகுதியாக அனுப்பியுள்ளார்.
பணத்தை பெற்ற மூத்த சகோதரி , கொஞ்சம் கொஞ்சமாக அதனை சொந்த காரியங்களில்செலவழிக்கலானார்.அப்பப்ப காசு கதை எடுக்கும் போதெல்லாம் அதெல்லாம் அப்படியே கிடக்கு என கூறிவந்துள்ளார். சொந்த அக்காவிடம் கணக்கு கேக்க விருப்பமில்லாமல் இருந்த நிலையில்,
குடும்பஸ்தரின் மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது,அவர் நேரிடையாக ஊருக்கு நாங்க வந்து காணி வாங்கபோறம், காசை எடுத்து தாங்க என கேட்ட பொழுது , குறித அக்காகாரி , அவரிடம் சண்டை போட்டுள்ளார்.இதுதனது தம்பி பணம்,அக்கா தம்பிக்கிடையில் வேறு யாரும் வர வேண்டாம் என கூறியுள்ளார்.
France paris tamil news அதற்கிடையில் குடும்பஸ்தர் மனைவி நீங்க காசு தந்துட்டு வாயை காட்டுங்கோ என கூற மேலும் சண்டைஇறுகி,தற்போது பேசாமல் இருக்கிறார் அக்கா.. தெரிந்த உறவுகள் மூலம் காசை தருமாறு தம்பிகெஞ்சியுள்ளார்..அதற்கு அக்கா,உன்னால் ஊரில் என் மரியாதை போச்சு,அதற்கு எத்தனை கோடிகொடுத்தாலும் பத்தாது,மான நஷ்ட கணக்கு நீதான் தர வேண்டும் என உறவுகளிடம் கூறியுள்ளாராம்..
கருத்து- பணம் பத்தும் செய்யும்,உறவுகளை பிரிக்கும்,மனிதர்களை கெடுக்கும்.காசு அளவோடு இருப்பதுநல்லது அதிகமானால் அதனால் வரும் தொல்லைகளையும் சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும்.
https://citytamils.com/resultats-bac-2024-pour-lacademie-de-lille-decouvrez-la-liste-des-admis
https://citytamils.com/france-election-results-and-latest-updates-in-tamil-july-8