பிரான்ஸில் இருந்து யாழ் திரும்பிய தமிழ் இளைஞரை வீட்டுக்குள் எடுக்காமல் விரட்டி அடித்துள்ள சம்பவம்ஒன்று இடம்பெற்றுள்ள
குறித்த இளைஞர் பாரிஸில் இருந்து பல காலத்திற்கு பிறகு யாழ் திரும்பி வீட்டுக்கு பிள்ளைகள் மனைவியோடுசென்று கேட் ஐ திறந்த போது அவரது பெற்றோர் சகோதரிகள் எல்லாரும் சேர்ந்து திட்டி தீர்த்து வர வேண்டாம்என்று சொல்லியிருக்கிறார்கள்..
அதாவது அவர் மனைவி வளவுக்குள் வரவிடமாட்டோம் என்று சண்டை… ஏதோ சீதன சிக்கல் என்று கேள்வி! சகோதரனுக்கு பேசிய சீதன காசு பின்னர் மனைவி வீட்டாரால் கொடுக்கப்படவில்லையாம்,கேட்டதற்கு குறித்தஇளைஞர் வேண்டாம் என்று சொன்னதால் நாம் குடுக்கவில்லை என பெண் வீட்டார்கூறியிருக்கின்றனர்,இரண்டு பிள்ளை பிறந்தும் விடாம சீதன காசு மீதியை தர சொல்லி இளைஞர் குடும்பபெண்கள் மோதல்
சுற்றி எல்லோரும் அக்கம் பக்கத்தினர் பார்க்க,அந்த வீட்டு ஆண்கள் எல்லாம் அமைதியாக இருக்க,பெண்கள்அதாவது மகளிர் படையணி இந்த தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கின்றது..
இதனால் மனமுடைந்த இளைஞர்,மனைவி பிள்ளைகளை கூட்டி கொண்டு மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
கருத்து: வெளிநாடு போய் சகோதரன் காசில் நன்றாக இங்கு சாப்பிட்டு தூங்கிவிட்டு,அற்ப சீதன காசுக்காகசொந்த சகோதரனை திட்டி அவர் காசில் கட்டிய வீட்டுக்குள் வர விடாமல் கத்தி கூச்சல் போட்டு அர்ச்சனைசெய்வது எந்த விதத்தில் நியாயம்..?