Saint-Brieuc இல், உள்ள உயர்நிலைப் பாடசாலையில் ஆயத்த வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியியல்ஆசிரியர், தனது மாணவர்களின் சவாலை ஏற்றுக்கொண்டார். அவர் இளங்கலையில் Bac தேர்ச்சி பெற்று19.32/20 மதிப்பெண் பெற்று கொண்டார்.
Saint-Brieuc இல், Côtes-d’Armor இல், இயற்பியல் மற்றும் வேதியியல் பேராசிரியரான பெனாய்ட்டெலிபைன், அவரது மாணவர்களால் இளங்கலை பட்டத்தை மீண்டும் பெறுவதற்கு சவால் விடப்பட்டார். அவர்19.32/20 என்ற சராசரியுடன் சித்தி பெற்று காட்டியுள்ளார்..
1994 இல் பிறந்த பேராசிரியர், ஏற்கனவே தனது பட்டப்படிப்பை திறமை சித்தியடைந்திருந்தார்.
ஒரு ஆசிரியராக, மாணவர்களுக்கு சித்தி அடைய சில அறிவுரைகளை கூறிய போது இரு மாணவர்கள் அறிவுரைகூறுவது இலகு,செய்வதுதான் கஷ்டம் என நகைசுவையாக கூறியுள்ளனர்.இந்த அறிவுரைகளை வைத்து நீங்க Bac எழுதி சித்தி பெற்று காட்டுங்கள் என்று கூறியுள்ளனர்.
அதனை சவாலாக ஏற்று எழுதிய அவர் இறுதியாக, இரண்டு சிறப்புத் தேர்வுகளில் 20/20 பெற்றார், பொறியியல்மற்றும் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல். பிரஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம், கணிதம் மற்றும்வரலாறு-புவியியல் ஆகியவற்றில் அதே மதிப்பெண் பெற்றார்.
பின்னர் தனக்கு சவால் விட்ட மாணவர்களை சந்தித்து பேசி மகிழ்ந்துள்ளார்.. இப்படிதான் த்து அறிவுரைகளைவைத்து சித்தி பெறுவது என்று தானே செய்து காட்டியமை தனக்கு பெருமையாக உள்ளதாக தெரிவித்தார்.