பிரான்ஸ் அதன் காவல்துறைக்குள் காணப்படும் இனவெறி மற்றும் இனப்பாகுபாடு குறித்துத் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
பாரிஸில் பதின்ம வயது இளைஞர் ஒருவர் பொலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கருத்து வெளியிட்டிருக்கின்ற ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரது பேச்சாளர் இவ்வாறு கேட்டிருக்கிறார்
இது இப்படி இருக்க சில பல படித்த தங்களுக்கு விசயம் தெரிந்த என்று தங்களை தங்களே நினைத்து கொள்ளும் பிரான்ஸ் தமிழர்கள் கண்ணை மூடி கொண்டு பிரெஞ்ச் காவல்துறைக்கு கழுவி விட ஆரம்பித்திருக்கிறர்கள்.. “அடைகள்” என்று வன்மத்தை கக்கி கொண்டே எல்லாத்தையும் நியாயப்படுத்துகிறர்கள்.
பிரெஞ்ச் தேசம் ஆபிரிக்க அரேபிய ஐரோப்பிய குறு நாடுகளை ஒரு காலத்தில் கைப்பற்றி வளங்களை சுரண்டிதான் பாரிஸ் நகரமே கட்டப்பட்டதாம்..இப்போது அதை அவர்கள் வந்து திரும்ப எடுக்கிறார்கள்! இதில் அவர்கள் தப்பு என்ன? கொள்ளை,கலவரங்களை நடாத்த அவர்களுக்கு கற்று கொடுத்ததே இவர்கள்தான்…
வெள்ளையாக இருப்பதால் தமிழர்கள் இவர்களை உயர்வாக நம்புகிறார்களா? இல்லை தங்கள் வேலைக்காக நடிக்கிறார்களா என்று தெரியவில்லை?
வெள்ளைகாரங்கள நம்பி ஏமாறுவதில் தமிழருக்கு என்று தனி வரலாறே இருக்கின்றது..இதற்கு முழுகாரணமே சுயநலம் மட்டும்தான்.போதிய வரலாற்று தேர்ச்சி இல்லை,சொந்தமாக சிந்திக்கிற தன்மையும் இல்லாமல்,இருக்கிற இடத்தில் நக்க வேண்டும் நக்கிகால்தான் வாழ்க்கை என்று சில ஈன தமிழர்கள் வாழ பழகி கொள்கிறார்கள்!
ஒரு அகதிக்கு இன்னொரு அகதியை பிடிக்காதுதான் ஆனால் இங்கு இருக்கிறவனுக்கு நீங்கள் இரண்டு பேருமே அகதிதான்! இது எத்தனை நூறு ஆயிரம் வருடங்கள் போனாலும் சரி மாறாது என்று ஒரு புலி தளபதி ஐரோப்பா வந்து சமாதான காலத்தில நினைவூட்டி போனதையும் சொல்லி கொள்ளலாம்.
வந்துட்டம் குடியுரிமை எடுத்தாச்சு இனி இங்கயே இப்படியே இருக்கலாம் என்பதுதானே உங்கள் நினைப்பு? அதற்கு சாத்தியமில்லை! ஊருக்கு திரும்பி செல்வதை நினைத்தால் கசக்கும் தானே? காத்திருங்கள் காலம் பதில் சொல்லும்…! ஐரோப்பா அமெரிக்க நாடுகள் போற போக்கை சரியாக கணித்தவர்களுக்கு ஓரளவு நாம் சொல்ல வருவது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்…🙊