பாரிஸ் நகருக்கு அருகே ஏ9 நெடுஞ்சாலையில் மூடப்பட்டிருக்கின்ற வீதிப் பகுதியை மீண்டும் பாவனைக்குத்திறப்பது மேலும் தாமதமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று மே மாதம் முதலாம் திகதி அந்த வீதி வழியே வாகனப்போக்குவரத்துகளை ஆரம்பிப்பது சாத்தியமில்லை என்று தெரிகின்றது..
தலைநகர் பாரிஸில் இருந்து வடக்கே நோர்மன்டி வரை செல்லுகின்ற இந்த நெடுஞ்சாலையில் பாரிஸ் சென்குளூட் (Saint-Cloud) – வோக்கிரசோன் (Vaucresson-Hauts-de-Seine) ஆகிய இடங்களுக்கு இடைப்பட்டபகுதியில்
தரை நகர்வு காரணமாக வீதியில் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதனால் வீதியின் அந்தப் பகுதி ஊடான இரு மார்க்கப் போக்குவரத்துகள் கடந்த 18 ஆம் திகதி முதல்நிறுத்தப்பட்டிருக்கின்றன.
ஏற்கனவே காணப்பட்ட வெடிப்புகள் பரிசோதிக்கப்பட்டுவந்த நிலையில் தற்சமயம் மேலும் புதிய வெடிப்புகள்அவதானிக்கப்பட்டுள்ளன.
வீதிக்கு அடியே தரையில் ஏற்பட்டுள்ள சரிவுகள் திருத்த வேலையை ஆரம்பிப்பதற்கு இடமளிக்குமா என்பதைஇல்-து-பிரான்ஸ் பெருந் தெருக்கள் திணைக்களத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலைமையில் வீதியை எப்போது போக்குவரத்துக்குத் திறக்க முடியும் என்ற கால வரம்பைஇப்போதைக்குத் தீர்மானிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பிரான்ஸ் புதிய பிரதமராக Sébastien Lecornu நியமிப்பு! நெருக்கடியைத் தவிர்க்க முயற்சி!
- பிரான்ஸ் : வீட்டுக் கடன் திருப்பி செலுத்தல் பற்றிய விளக்கம்
- பாரிஸில் அதிகரிக்கும் வாடகை மோசடி! மூன்று வித விபரம்!
- பிரான்ஸ் இந்த மாச சம்பளத்தில் வெட்டு! விபரம் உள்ளே!
- மீண்டும் கலையும் பிரான்ஸ் அரசு! விடப்பட்ட எச்சரிக்கை!