சுற்றுலா வழிகாட்டி சேவைகள்
பிரான்சில் பாரிஸ் ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். நகரத்தைப் பற்றிய ஆழமான அறிவு உங்களுக்கு இருந்தால், சுற்றுலாப் பயணிகளுக்கு அதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மறைக்கப்பட்ட பல விடயங்களை காண்பிக்கும்வகையில் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களை வழங்கலாம்.
இது வருடத்தின் 12 மாதங்களும் பகுதி நேரமாக செய கூடியதும் ஆனாலும் வருடத்துக்கு கிட்டத்தட்ட லட்சம்ஈரோக்கள் வரை இலகுவாக உழைக்க கூடிய ஒரு சொந்த தொழிலாகும்.உங்களுக்கு அடிப்படையாக தெரியவேண்டியது ஆங்கில பேச்சு மொழி , ப்ரெஞ்ச் மொழி..
முழுமையாக தெரியாவிட்டாலும் ஆர்வமாக தொழிலில் இறங்கினால்,3-6 மாதங்களில் இரண்டு மொழிகளும்பரீட்சயமாகிவிடும்.பிரான்சின் வரலாறு,பண்பாடு பாரம்பரியத்தை அவ்வவ்போது தெரிந்து கொள்ளுங்கள்.அதைஎவ்வாறு கோர்வையாக தேவைக்கேற்ப நீட்டி சுருக்கி சொல்ல தெரிந்து கொள்ளுங்கள்..
இது தொழிலில் இறங்கி நாலு பேருடன் கதைக்க வெளிக்கிட தானாக வரும்.ஏர்போர்ட்டில் வாகனத்திலஏத்திறதுல இருந்து ஹொட்டல் சாப்பாடு , தங்குமிடம் என்று பக்கேஜ் போட்டா அடுத்தகட்டத்துக்கு போயிட்டாபிறகு வருமானம் இன்னும் அள்ளும்,
இந்த தொழிலில் விளம்பரம் தேவையில்லை.சேவையை சரியாக கொடுத்து வாறவர்கள் மனதில் பதிய வைத்தால்சரி,அவர்களே பத்து பேருக்கு போய் சொல்லுவார்கள்.
பழைய பிரான்ஸ் சம்பவங்கள்,வரலாறுகள்,இன்றைய நிலைமைகள்,மக்கள்,பிரச்சினைகள் என சகலதும்கலந்து கட்டி அடிச்சா.. சுக்ரன் உங்க பொக்கட்டில் வந்து இருந்திடுவார்.
ஏற்கனவே பல இளம் தமிழர்கள் இறங்கியிருக்கின்றனர்.இந்த தொழில் எல்லையற்றது,விரிவாக்கி கொண்டேபோகலாம்.வாழ்த்துக்கள்…
- 📱Xiaomi Redmi Pad SE: மிக குறைந்த விலை!
- பாரிஸ் தமிழர் படைத்த சாதனை! நிறைய காசு உழைக்கலாமா?
- 💶 பிரான்ஸ் யூரோ → இலங்கை ரூபாய் (Euro to LKR) நாணய மாற்று விகிதம் !
- புயல் – பிரான்சில் பெரும் தாக்கம்? சேத உதவி தொகை, காப்பீடு!
- பிரான்சில் ஓய்வு வயது மாற்றம்? வெளியான தகவல்!

