சிம்ம லக்னம் —————————— ஒவ்வொரு ராசிக்கட்டத்தின் சின்னத்திற்கும் அதற்குள் இருக்கும் ஒரு நட்சத்திரமே காரணமாக இருக்கும். உதாரணத்துக்கு மீன ராசிக்கு ரேவதி, கும்ப ராசிக்கு சதயம், தனுசு ராசிக்கு மூலம், விருச்சிக ராசிக்கு கேட்டை என சொல்லிக் கொண்டே போகலாம். இந்த ராசிகள் எல்லாம் அந்த ராசிக்குள் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தினுடைய பண்புகளின் அடிப்படையிலேயே தனது பெயர் மற்றும் சின்னத்தை பெற்றுள்ளன.
இந்த வரிசையில் சிம்ம ராசிக்குள் இருக்கும் மிக முக்கியமான நட்சத்திரம் “மகம்” ஆகும். மகம் என்றால் பிரம்மாண்டம் என்று பொருள். ஒரு சிறிய விசயத்தை மிகப் பெரிதாக காட்டக் கூடிய தன்மை என்றும் பொருள்படும். அதன் சின்னமான “அரச மரம்” தன்னோடு ஒரே நிலத்தில் சேர்ந்து வளரக்கூடிய அத்துனை மரம் செடி கொடிகளையும் மட்டையாக்கி விட்டு தன்னை மட்டும் பிரம்மாண்டமாக காட்டிக் கொண்டு வளரும் தன்மையுடையது.
இதை ஒரு வகையில் ஈகோ என்றும் கூறலாம். குறிப்பாக இதனை சிங்கத்தின் குணத்துடன் ஒப்பிடலாம். சிங்கம் தனக்கு மேல் உள்ள தலைமையை (தந்தையை) போட்டுத் தள்ளிவிட்டு அந்த இடத்தை பிடிக்க எண்ணும் குணமுடையது. அதனால்தான் அந்த வீட்டிற்கே சிம்மம் எனப் பெயர் வந்தது. இதை நிரூபிக்க ஒரு வழி உள்ளது. சிம்ம லக்கினத்தில் பிறந்தவரின் ஜாதகத்தில் லக்கின அதிபதி சூரியன் தந்தையைக் குறிக்கும் 9-ஆம் இடத்தில் உச்சம் அடைந்து தனது தந்தையை Address இல்லாமல் Dummy ஆக்குகிறார்.
இதனை “காரகோ பாவநாஸ்தி” என்றும் அழைக்கலாம். அதே சிம்ம லக்னத்திற்கு மாமனாரைக் குறிக்கும் 3-ஆம் இடத்தில் (துலாம்) சூரியன் நீச்சமாகிறார். அப்போது சிங்கத்தின் இந்த Character மாமனாரிடம் எடுபடாது. மாமனாரின் தொழில், அதிகார நிலை வலிமையாக இருக்கும். ஜாதகருக்கும் மாமனாருக்குமான உறவு மிக நன்றாக இருக்கும். சிம்ம லக்கின ஜாதகர் சூரியனின் கர்மவினையை வாங்கினால் மேற்கூறிய விதிகள் 100 சதவிதம் பொருந்தி வரும்.