Read More

Read More

சூரியப் புள்ளிகளும், இள வயது மரணங்களும் : அறியப்படாத அறிவியல் உண்மைகள்

கதிரவன் கருணையால் உயிர்த்திருப்பது நம் பூமி. ஒளி, வெப்பம், மழை என அனைத்திற்கும் காரணம் அந்த பகலவனே. பூமியில், உயிர்கள் உயிர்த்திருக்கக் காரணமான அந்த சூரியனே, குறிப்பிட்ட காலங்களில் பிறக்கும் குழந்தைகளின் இளம்வயது மரணங்களுக்கும் காரணம் என்கிற அதிர்ச்சித் தகவலைப் பதிவுசெய்திருக்கிறது, சமீபத்திய அறிவியல் ஆய்வு ஒன்று.


சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 6000 டிகிரி கெல்வின் ஆகும். ஒளியை உமிழும் சூரியனின் மேற்பரப்பு, ‘ ஒளி மண்டலம் ( photosphere ) எனப்படும்..பூமியின் காந்தப்புலத்தைப்போல பல மடங்கு ஆற்றல் மிகுந்த காந்தப்புலம் சூரியனில் உண்டு. அவ்வப்போது, அந்த சூரியக் காந்தப் புலத்தில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.அதன் காரணமாக, ஒளி மண்டலத்தில்,சில இடங்களில் வெப்பநிலை குறைகிறது. 4000 டிகிரி கெல்வின் அளவிற்குக் கூட வெப்பநிலை குறைவதுண்டு. இப்படி வெப்பநிலை குறைந்த பகுதிகள், 6000 டிகிரி வெப்பநிலை பகுதிகளை ஒப்பிட ஒளி மங்கிக் காணப்படும். பூமியிலிருந்து நோக்கும் போது, சூரியனின் ஒளி மங்கிய பகுதிகள் ‘ கரும் புள்ளிகள் ‘( Black spots) போலத் தோற்றம்தரும். அவைதான், ‘ சூரியப்புள்ளிகள் ‘( Solar Spots or Sun spots) என்று அழைக்கப்படுகின்றன.. சில சூரியப்புள்ளிகள், 50,000 கிலோ மீட்டர் அகலம் உடையவை என்பதால், வெறும் கண்ணால், எளிதாகப் பார்க்கலாம்


இந்த சூரியப்புள்ளிகள் நிரந்தரமானவை அல்ல. திடீரெனத் தோன்றும் சூரியப் புள்ளிகள், குறிப்பிட்ட காலம் வரை நம் கண்ணுக்குத் தெரியும். பிறகு மறைந்துவிடும். குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தோன்றும். சூரியப்புள்ளிகள் தோன்றுவதும், மறைவதும், மீண்டும் தோன்றுவதும் எனத் திரும்பத் திரும்ப நிகழ்வதை ‘ சூரிய சுழற்சி ‘( Solar cycle) என்பர். சூரியப் புள்ளிகள் நீடித்திருக்கும் காலம் அல்லது மறைந்திருக்கும் காலம்,’ சூரிய சுழற்சி காலம்” ( Solar period) எனப்படும். சூரிய சுழற்சிக் காலங்கள் சமமாக இருப்பதில்லை.

அதனால், சராசரி ‘ சூரிய சுழற்சி காலம்’ 11 ஆண்டுகள் என்று கணக்கிட்டுள்ளனர்.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, சூரியப்புள்ளிகள் தோன்றுவதும், மறைவதுமாக இருந்தாலும் கூட, கி.மு. 364 இல், சீன வானவியலாளர்,கேன் டே(Gan DE) என்பவரது பதிவு தான், வரலாற்றின் முதல் பதிவு ஆகும்.’

விண்மீன் அட்டவணை’ ( Star Catelogue) என்கிற நூலில் அவரது பதிவு காணப்படுகிறது. கி.மு.28 முதல், சீன வானவியலாளர்கள், வரிசைக்கிரமமாக, சூரியப்புள்ளிக் காலங்களைப் பதிவுசெய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிளேட்டோ, அரிஸ்டாடில் ஆகியோரின் மாணவரான தியோஃப்ரேஸ்டஸ்(Theophrastas) என்பவர் கி.மு.300 இல் சூரியப் புள்ளிகள் பற்றி, தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.
கி.பி.1610 இல் தாமஸ் ஹாரியட்( Thomas Harriot) மற்றும் கலிலியோ ஆகியோர், முதன்முதலாக, தொலைநோக்கியைப் பயன்படுத்தி, சூரியப்புள்ளிகளைக் கண்டறிந்தவர்கள் எனலாம். கி.பி.1611-இல், ரோம் நகருக்கு வந்திருந்த கலிலியோ, தொலைநோக்கியைக் கொண்டு பொது மக்களுக்கு சூரியப்புள்ளிகளைக் காட்டியதாக அவரது வரலாறு சொல்கிறது. கி.பி.1612-இல் கலிலியோ, வெல்சர்( Welser) என்னும் அறிவியலாளருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

அந்த கடிதத்தில், ஒரே நாளில், ஒரே நேரத்தில் அவர் அவதானித்த சூரியப் புள்ளிகளின் பதிவுகளைப் பற்றி எழுதுகிறார். சூரியனின் சாய்வு( Orientation) மாறாமல் இருந்த காரணத்தால் தான், சூரியப் புள்ளிகளின் நகர்வை எளிதில் பதிவு செய்ய முடிந்தது என்கிறார்.
சூரியப் புள்ளிகள் பற்றிய, கலிலியோவின் இந்த அவதானிப்பு தான், நகராத சூரியனை, பூமி சுற்றி வருகிறது என்கிற போலந்து நாட்டைச் சேர்ந்த கோபர்நிகஸ்( Nicholas Coprnicus) என்பவருடைய கொள்கையை கலிலியோ ஏற்று, பரப்புரை செய்வதற்குக் காரணம் ஆயிற்று. அதன் தொடர்ச்சியாகவே, கலிலியோ மரணம் அடையும் வரை வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ‘ சூரிய சுழற்சி’ காலத்தில் பிறக்கும் குழந்தைகள் தான், சிறு வயதிலேயே அதிக அளவில் மரணம் அடைகின்றனர் என்கிறது, ஜின் ரோல் கயீர்வே(Gin Roll Skjaerve ), ஃப்ரோடு ஃபாஸி(Frode Fossoy ), ஈவின் ரோஸ்காஃப்ட்(Einvin Roskaft)ஆகிய மூன்று அறிவியலாளர்கள் செய்த ஆய்வு முடிவு. அவர்கள், தங்கள் ஆய்வு முடிவுகளை, Proceedings of the Royal Society) என்கிற ஆய்விதழில் பதிவு செய்துள்ளனர். நார்வேயில் 1696 முதல் 1898 வரையிலான 202 ஆண்டுகள் கால இடைவெளியில் பிறந்த 8662 குழந்தைகள் பற்றிய தரவுகளைத் தேவாலயங்களில் இருந்து பெற்று, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அதிர்ச்சி தரும் உண்மைகள் தெரிய வந்துள்ளன.


சூரிய சுழற்சி காலமாகிய 11 ஆண்டுகளில்,முதல் 3 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் சராசரி ஆயுள், அதற்கடுத்த 8 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் சராசரி ஆயுளை விடவும் 5.2 ஆண்டுகள் குறைவாக இருந்தது.
முதல் 3 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் சராசரி ஆயுளும் கூட ஒரேமாதிரியாக இல்லை. சூரிய சுழற்சியின் முதல் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக இருந்தது. 22.1 விழுக்காடு, அதாவது, ஆய்வுக்குட்படுத்தப் பட்ட 8662 குழந்தைகளில், 2006 குழந்தைகள், 20 வயதை எட்டுவதற்கு முன்பாகவே இறந்து விட்டனர் என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது..


இரண்டாவது ஆண்டில், முதல் ஆண்டின் இறப்பு விகிதத்தை விட குறைவாகவும், மூன்றாவது ஆண்டு இறப்பு விகிதம் அதை விடவும் குறைவாகவும் இருந்தது. அதற்கடுத்த 17 ஆண்டுகளில் ( 8+11) இறப்பு விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது. ( 11 ஆண்டுகள் சூரிய புள்ளிகள் தெரியாத காலம் )
மாத்திரமல்ல, சூரிய சுழற்சி காலத்தின் முதல் மூன்று ஆண்டு காலங்களில் பிறந்தபெண்குழந்தைகள், மரணத்திலிருந்துத் தப்பித்து உயிர் வாழ்ந்தாலும், அவர்கள் பருவமடைந்த பிறகு, ‘ கருத்தரிக்கும் திறன் ‘ இல்லாதவர்களாக அல்லது மிகவும் குறைவான திறன் கொண்டவர்களாக இருந்தனர் என்பது கூடுதல் அதிர்ச்சி தரும் செய்தி ஆகும்


சூரிய சுழற்சி காலத்திலும் கூட, சூரிய புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும் முதல் 3 ஆண்டுகளில் தான், குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும,, முதல் ஆண்டில் அது உச்சத்தில் இப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. .
சரி, இந்த சூரிய சுழற்சி காலத்தில் பிறக்கும் குழந்தைகள் பெருமளவில் மரணமடைவதற்கும், பெண் பிள்ளைகளின் கருத்தரிக்கும் திறன் குறைவதற்கும் என்ன காரணம் ? சூரிய காந்த புலத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, அலைநீளம் குறைந்த, அதிக ஆற்றல் கொண்ட ஆபத்தான புற ஊதா கதிர்கள் (Ultra violet Rays ) ,ஓசோன் அடுக்குகளையும் ஊடுருவி, பெருமளவில் பூமியை வந்து சேர்கின்றன.

அந்த புற ஊதா கதிர்கள், கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றிலிருக்கும் கருவையும், வளர் பருவத்தில் இருக்கும் தளிர்களின்( குழந்தைகளின்) மூலக்கூறு மற்றும் செல் கட்டமைப்பு ( Molecular and Cellular Mechanism ) ஆகியவற்றை ஊடுருவி, அவற்றை சிதைத்து விடுவதுமே காரணம் எனகிறார்கள், ஆய்வை மேற்கொண்ட அறிவியலாளர்கள்.‘சூரிய மறைப்பின்’( Solar Eclipse)போது, கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக் கூடாது என்று சொல்வதற்கும் அன்றைய தினம் ஆற்றல் மிக்க புற ஊதாக் கதிர்கள் அதிக அளவில் பூமியை வந்தடைகின்றன என்கிற அறிவியலே காரணம்.
சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து, பெண்களை வகைப்படுத்தியும் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. சூரிய சுழற்சி காலத்தில் கருத்தரித்தப் பெண்களில், ஏழைப் பெண்களே அதிகம் பாதிக்கப் பட்டதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதற்காக இரண்டு காரணங்களை ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.


பணக்காரப் பெண்கள், கர்ப்ப காலத்தில்,பாதுகாப்பாக இருக்கும் ( வீட்டு ) வசதி பெற்றிருப்பதால், அவர்கள் புற ஊதா கதிர்களின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்கின்றனர். மாறாக, அப்படிப் பட்ட வசதி இல்லாததால், ஏழைப் பெண்கள் அதிக அளவில் புற ஊதா கதிர்வீச்சிற்கு ஆளாகின்றனர் என்பது ஒரு காரணம்..
மற்றொன்று, கருவுற்ற பணக்காரப் பெண்கள், மரபணுக்களை ( DNA ) வலுப் படுத்தும் உணவுகளை உண்பதும், ஏழைப் பெண்களுக்கு அப்படிப் பட்ட உணவு கிட்டாமல் இருப்பதும் ஆகும். உலகம் முழுவதுமே, எல்லா காலங்களிலும், இயற்கைப் பேரிடர்களால், பெரிதும் பாதிக்கப்படுவது ஏழைகள் தான் என்கிற பொது விதிக்கு, இந்த ஆய்வு முடிவும் கூடத் தப்பவில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.


சூரிய சுழற்சி காலங்களில்,கர்ப்பிணிப் பெண்கள் மீது ஏற்படும், வீரியம்மிக்க புற ஊதா கதிர்களின் தாக்கம், அதன் காரணமாக பிறக்கும் பிள்ளைகள் சிறு வயதிலேயே மரணமடைவது, பெண் பிள்ளைகளின் கருத்தரிக்கும் திறன் குறைவது போன்ற, இது வரை அறியப்படாத உண்மைகள், இந்த ஆய்வுகளின் வழியே முதன் முதலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
1755 முதல்தான் சூரிய சுழற்சி காலம் கணக்கிடப்பட்டு வருகிறது. இது வரை 23 சூரிய சுழற்சிகள் வந்து போயுள்ளன. .2008 சனவரியில் தொடங்கிய 24 வது சூரிய சுழற்சி காலம் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. எப்போது முடியும் எனத் தெரியாது.


தமிழ்நாட்டில், கொடைக்கானல் மலையில், 1899 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட,‘சூரிய ஆய்வு மையம்’ ( Solar Observatory ),, நூறு ஆண்டுகளைக் கடந்து இயங்கி வருகிறது. பார்வையாளர்களுக்காக ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.. மிகச் சிறந்த நூலகம் ஒன்றும் இங்கு உள்ளது. இந்த சூரிய ஆய்வு மையத்தில், சூரியப் புள்ளிகள் பற்றியும் ஆய்வு நடைபெறுகிறது. தஞ்சைப் பகுதியில் பகல் நேர மூடுபனிக்குக் காரணம் சூரியப் புள்ளிகளா என்கிற கேள்வி எழுந்ததும், அந்த செய்தி, நாளிதழ்களில் வந்ததும் பலர் அறிந்திருக்கக் கூடும். அது பற்றிய ஆய்வை,, கொடைக்கானல் சூரிய ஆய்வு மையத்தின் அறிவியலாளர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் செய்தி வந்திருந்தது, குறிப்பிடத்தக்கது.


இயற்கைப் பேரிடர்களைத் தடுக்கவோ, தவிர்க்கவோ மனிதனால் முடியாது. ஆனால், முன்கூட்டிய திட்டமிடல் காரணமாக, இழப்புகளைக் குறைக்கலாம். அந்த வகையில், அரசும்,அறிவியல் வல்லுநர்களும் இணைந்து, சூரிய சுழற்சி காலத்தை, குறிப்பாக அதன் ஆரம்ப காலத்தைக் கணித்து, அதனால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றி, மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு அதுவும் கூட கர்ப்பிணிப் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இனி வரும் காலங்களில் அவசியம் ஆகிறது

அறிவியல் ஆய்வாளர்கள் :

  1. Gin Roll Skjaerve
  2. FrodeFossoy
  3. EivinRoskaft
    Publication : 7th January 2015
    Journal: Proceedings of the Royal Society
    காக்கை பிப்ரவரி 2016

Today Jaffna Tamil Youtube Videos

Video thumbnail
🔥 பிச்சுணாவால் குழப்பம் | அபிவிருத்திக் குழு கூட்டம் | Sri Lanka Tamil Comedy | Pakidiya Kathaippam
11:29
Video thumbnail
ஊரியான் - கொம்படி பாதை! துயரம் நிறைந்த எங்கள் கதை! #jztamil #jztamilvlog #travel #jaffna #vanni #jz
20:42
Video thumbnail
சிக்கலா..? | City Tamils
05:44
Video thumbnail
அன்றே கணித்த அருச்சுனா | City Tamils
06:54
Video thumbnail
நடக்க போவதை சொன்ன டொக்டர் | City tamils
17:12
Video thumbnail
அவ்ளோதான் முடிஞ்சு போச்சு | City Tamils
08:11
Video thumbnail
🤩யாழ்ப்பாணத்தின் 2025 Drone View🔥 | Sri Lanka | Jaffna Tamil YouTubers | Jaffna Tamil Vlogs
08:44
Video thumbnail
லண்டனில் தமிழர் வாழும் பகுதி | Biggest Tamil Area in UK | Tamil people living in UK
33:38
Video thumbnail
💵 இத்தனை கோடி அடித்தார்களா? 😲 | Jaffna YouTuber | Sri Lanka Tamil Comedy | Pakidiya Kathaippam 2025
12:14
Video thumbnail
யாழில் காய்த்து குலுங்கும் மரங்கள் விற்பனைக்கு! Jaffna youtubers | canada Tamil Vlog
22:27
Video thumbnail
யாழில் பழமை மாறாத அழகிய கிராமம்🥰 | Vasavilan Village Explore | Jaffna | Sri Lanka
52:47
Video thumbnail
மக்ரோனின் சர்ச்சைக்குரிய உரையால் அதிர்ச்சியில் உறைந்த உலகம் #foryou #tamil
10:05

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Latest

spot_img
spot_img
spot_img

Don't Miss

spot_img
spot_img
spot_img