நிறைவான வாழ்க்கை 4 உடன்படிக்கைகள்
தனி மனித சுதந்திரதிற்கான வழிகாட்டி
உங்களை பற்றி நீங்களே ஒரு அறிய பல படிகளை கடக்க வேண்டியிருக்கும்,பல கால சொந்த அனுபவங்களைபெற்று கொள்ள வேண்டிவரும்,இந்த புத்தகம் அப்படி ஒரு ஆழமான சுய தரிசனத்தை உங்களுக்குகாட்டுகின்றது.எந்தவிதமான அலங்கார வார்த்தைகள்,தேவையற்ற சொற்றொடர்கள் எதுவும் இல்லாமல்நேரிடையாக மிக இயல்பான உண்மைகளை பேசுகின்றது.
நீங்கள் யார்,இந்த பூமி பந்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..? உங்களுக்கு என்ன நடந்துகொண்டிருக்கின்றது..? உங்கள் புரிதல்கள் என்ன..? உங்கள் மனது எது..? உங்களின்பயம்,பலம்,பலவீனங்களை அலசி உங்களுக்கே காட்டுகின்றது.
பிரபஞ்சத்தில் இருக்கும் நீங்கள்,உங்களுக்குள் இருக்கும் பிரபஞ்சம் என இரண்டும் ஒன்றாக இருக்கதேவையானது இணைப்பு.அந்த இணைப்புக்கு தேவையான 4 உடன்படிக்கைகள் பற்றி எளிமையாகபேசுகின்றது. நரகத்தில் உழன்று கொண்டிருப்பவர்கள் அதனை தனிமையில் அனுபவிக்கவிரும்புவதில்லை,மனித இனம் “கும்பல் மனோபாவத்தில்” இயங்கி வருகின்றதையும் உங்களுடைய மகிழ்ச்சிஎங்கே இருக்கின்றது என்ற முகவரியை உங்களுக்கே காட்டுகின்றது.
ஒரு தனிமனிதனை எது போராளியாக மாற்றுகின்றது? உலக வாழ்க்கை என்னும் போர் களத்தில் தனித்துவிடப்பட்டுள்ளவர்களின் போர்கள் எப்படி தோற்கடிக்கப்படுகின்றன,எப்படி வெல்லப்படுகின்றன என்றுவிளக்குகின்றது.
நீங்கள்,சமூகம்,உலகம்,பிரபஞ்சம்,விழிப்புணர்வு என பல தத்துவ உண்மைகளை புட்டு புட்டுவைக்கின்றது.நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகங்களில் இதுவும் ஒன்று என்பதை நாம் இங்குகுறிப்பிட்டே ஆக வேண்டும்.