Read More

spot_img

பிரான்சில் திடீரென முடங்கிய இணைய சேவை!

மார்ச் 11, செவ்வாய்க்கிழமை காலை முதல் Bouygues நிறுவனத்தின் இணைய மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் திடீரென முடங்கியதால், நாடு முழுவதுமுள்ள பயனர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இணையம் மற்றும் மொபைல் தொடர்புகளில் ஏற்பட்ட இந்த தடையை பலர் சமூக வலைதளங்களில் புகாரளித்துள்ளனர்.

இச்சேவை தடையின் காரணம் குறித்து Bouygues நிறுவனம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை. நிறுவனத்தின் இணைய தளம் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கும் அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bouygues என்றால் என்ன?
Bouygues என்பது ஒரு பிரஞ்சு நிறுவனம் ஆகும். 1952ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் கட்டுமானம், தொலைத்தொடர்பு, ஊடகங்கள், மற்றும் உள்கட்டமைப்பு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. Bouygues Telecom அதன் முக்கியமான தொலைத்தொடர்பு பிரிவு ஆகும், இது பிரான்ஸில் மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவைகளை வழங்குகிறது.

மேலும், Bouygues தொலைத்தொடர்பு சேவை முடங்கியதற்கான காரணம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்தவுடன் உடனடியாக புதிய தகவல்களை வழங்குவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img