மலையாள திரையுலகில் ஒரு புதிய காமெடி புயல் – “ஒரு ஜாதி ஜாதகம்”! இந்த திரைப்படம் ஒரு வயதான yet single நாயகனின் விநோதமான திருமணப்பயணத்தை கதையாகக் கொண்ட ஒரு மாஸான காமெடி எண்டர்டெய்னர்.
கதை சுருக்கம்
நாயகன் ஜெயேஷ் (வினீத் ஸ்ரீனிவாசன்) – அவனுக்கு ஒரு பெரிய பிரச்சினை! வயதாகியும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. காரணம்? எந்த பெண்ணையும் மனம் வராமல் தான் வந்துவிடுவான்! உயரம் குறைவு, தொப்பை கூட ஓரளவு இருக்கும். ஆனால் காரணம் அவனுக்கே புரியவில்லை. அவனைவிட்டுப் போன பெண்களை விட்டுவிட்டு, அவன் குடும்பமே அவனை சந்தேகிக்க தொடங்குகிறது. “இவன் ஒருவேளை Gay தானா?”
நண்பர்கள் கூட அவனை சந்தேகிக்க ஒரு காரணம் இருக்கிறது – பார்ட்டியில் நண்பர்களை Kiss செய்யும் வீடியோ வைரலாகிறது. இதனால் சூழ்நிலை இன்னும் விறுவிறுப்பாகிறது. வீட்டிலுள்ளவர்கள் கூட அவனது உள்ளாடைகளில் Pink கலர் இருக்கிறதா? என்று பார்ப்பதற்கே வந்துவிடுகிறார்கள்.
நண்பனே அவனுக்குள் “நீ Gay தானே?” என சொல்லிவிட, ஜெயேஷ்க்கே தன் மீது சந்தேகம் வருகிறது. “ஏன் எந்தப் பெண்ணை பார்த்தாலும் எனக்கு காதல் வரவில்லை?”
முக்கிய திருப்பம்
ஒருநாள், தனது ஃப்ளாட்டின் மொட்டைமாடியில் நின்று self-doubt மனநிலையில் இருக்கும் போது, பக்கத்து ஃப்ளாட்டில் உள்ள பாயல் (Trending Actress கயாது லோஹர்) அவனை பியர் பாட்டில்களுடன் சந்திக்கிறாள்.
“ஜெயேஷ், ஏதோ குழப்பத்தில் இருக்கிறாய்? இதோ, பியர் அடி… சூட்டுக்கு சுகமாக இருக்கும்!”
ஜெயேஷ் தன் பிரச்சினைகளை கூற, பாயல் ஒரே ஒரு கேள்வி கேட்டுவிடுகிறாள் – “உனக்கு சந்தேகம் இருக்கிறதா?”
அடுத்த நொடி – டக்கென அவனது கன்னத்தில் முத்தமிடுகிறாள்!
ஜெயேஷ் அதிர்ந்து நிற்க…
“இதற்கு முன் பெண்ணிடம் முத்தம் வாங்கி இருக்கிறாயா?” என அவள் கேட்க, அடுத்த நிமிடம் direct லிப்லாக்!
ஜெயேஷ் நேராக பாத்திரூமுக்கு ஓடி, குனிந்து பார்த்து “நான் Gay இல்லை!” என உறுதி செய்து கொள்ள, அந்த சமயத்தில் அவனது தந்தை அந்த இடத்தில் வந்து விடுவார்! 😂
100% காமெடி எண்டர்டெய்னர்
ஒரு ஜாதி ஜாதகம் படம் முழுக்க காமெடி வெடிகள் – வினீத் ஸ்ரீனிவாசன் perfectly fit ஆன ட்விஸ்ட் அடிக்கும் நாயகன்! அதே நேரத்தில் கயாது லோஹர் ஒரு power-packed performer ஆக முழு படம் தன் கரண்ட் ஷாக் கதாபாத்திரத்தால் சுவாரஸ்யமாக நகர்த்துகிறாள்.
மிஸ் செய்ய முடியாத படம்!
நீங்கள் சிரித்து வயிறு வலிக்க வேண்டுமா?
கண்டிப்பாக “ஒரு ஜாதி ஜாதகம்” பார்க்க வேண்டியது தானே! 😆🔥