Monday, March 2, 2026
No menu items!

சாம்பார் சட்டங்களை வைத்துக்கொண்டு தடுமாறும் ஸ்ரீலங்கா!

ரணிலின் ஆட்சியை இரவோடிரவா கலைத்தார் சந்திரிகா… அதிலும் முக்கிய அமைச்சுகளை முதலில் பறித்துவிட்டு…பிரதமராக இருந்தாலும் தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்துக்கே ரணில் வரக்கூடாதென அனுமதி மறுத்த மைத்ரிபால.. ஒரு கட்டத்தில் ரணிலின் அமைச்சரவையை வண்ணத்து பூச்சிகளின் கூடாரம் என்றார்…

ரணில் கைது பற்றி பேசலாம்.. ஆனால் ‘அரசியலமைப்பு சர்வாதிகாரம்’ என்ற தலைப்பில் பேச சந்திரிக்கா , மைத்ரிக்கு அருகதை கிடையாது…

1972 குடியரசு யாப்பு கொண்டு வரப்பட்டதே, சோல்பரி அரசியல் யாப்பில் இந்த விளையாட்டு எல்லாம் விட முடியாது என்பதால் தான். மீறுவதற்காக தங்களுக்கு ஏற்றாற் போல் வளைப்பதற்காக “சுதேசியம்” என்று மக்களை ஏமாற்றிய மேட்டுக்குடி அதிகார வர்க்கம் இன்றி முகவரி இன்றி கிடக்கிறது அவர்களின் கடைசி மண்டிதான் ரணில் விக்கிரமசிங்க,

ருவன் விஜேவர்தன போன்றவர்கள். பண்டாரநாயக்கா பரம்பரை அடியோடு போய்விட்டது. சோல்பரி அரசியல் யாப்பில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் நீக்கி இறுதியில் இனவழிப்பை கட்டவிழ்த்து அவர்களிடம் இருந்து பெற்ற கோடாரிக்காம்புகளை வைத்து காலத்தை ஓட்டுகிறார்கள்.

இவர்கள் வளர்த்து விட்ட ரவுடிகள் தான் இன்று அரசியல் செய்கிறார்கள். இவர்கள் அழித்து விட்ட தரமான ஒழுக்கமான காலநிகரான கல்வி திட்டம் காரணமாக படித்தும் அதை வெளிப்படுத்த தெரியாத ஒழுங்காக பாராளுமன்றத்தில் உரையாற்ற தெரியாத வாய்சப்பி பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச சபைகளில் உரையாற்ற தெரியாத அமைச்சர்கள், உயர் நீதிமன்றம் கூட முடிவெடுக்க தடுமாறும் குழப்பங்கள் நிறைந்த அரசியலமைப்பு “Patchwork” சாம்பார் சட்டங்களையும் வைத்து நாடு ஓடுகிறது .

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

பாரிஸ் தமிழரின் ஐந்து லட்சம் சுவாகா! திருத்த கஷ்டம்!

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் மாம்பழம் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாய்க்கு ஏலம்எடுக்கபட்டுள்ளது. குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் திருவிழாவான மாம்பழத் திருவிழாநேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.  இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த நபர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்தமாம்பழத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்டார். மேலும் குறித்த ஆலயத்தின் தேர் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமை தீர்த்ததிருவிழாவும் நடைபெறவுள்ளது. கருத்து: கோயில் என்பது ஆன்மீகம் சம்பந்தபட்ட ஒன்று.. ஆனால் ஈழதமிழர்கள் பொறுத்தவரை அது ஒருபணத்தை வைத்து சூதாட்டம் ஆடும் இடமாக மாற்றி வைத்துள்ளனர். வெளிநாட்டு ஆதித பணமும்,சிலபொம்பிளைகளின் போலி பக்தி விளையாட்டுக்களை வைத்து இவ்வாறு கோவில்கள் பயன்படுத்திகொள்கின்றன. எல்லா மதத்திலும் இந்த விளையாட்டு இருந்தாலும் நம்மவர்கள் ஓவராக நடந்துகொள்கிறார்கள்.. இவர்களின் ஆன்மீக அறிவு வரட்சியை பயன்படுத்தி கொள்ளும் கும்பல் நன்றாக காசு பாத்துவிட்டு ஊரில் சும்மாஇருந்து சாப்பிடுகின்றது.காசு உள்ளே வந்த இடங்களை பாருங்கள் எப்படி கெட்டு போய் இருக்கின்றனஎன்று... ஆன்மீகம் என்பது எளிமையானது அது துறத்தலை முன்நிறுத்துகின்ற ஒன்று..அங்கு காசு,தங்கம்,உயர்ரக பட்டு,வேட்டி பணம் கொட்டும் திருவிழாக்கள் இல்லை விசயம், காரணம் கடவுள் எளிமையிலேயேஅருள்கிறார்,ஆனால் நம்மவர்கள் கடவுளையும் சேர்த்து கெடுக்க பாக்கிறார்கள்.  நேற்று வந்த வட இந்திய துறவிகளையே இந்த கும்பிடு போட்டு காசு செலவழிக்கும் நம்மவர்கள்,காலம்காலமாக பழக்கி வைத்திருக்கும் இதை மட்டும் விடவா போகிறார்கள்...எல்லாம் செய்துவிட்டும் அழிந்துகொண்டுதா போகிறோம் என்பது கூட தெரியாமல் எல்லாத்தையும் பணம் பாத்து கொள்ளும் என்ற மிதப்பில்திரிகிறார்கள்...  உங்களை எல்லாம் இனி கடவுள்தான் காப்பற்ற வேண்டும் என முன்பு ஒரு அரசியல்வாதிசொல்லிருந்தார்.பின்னர் வந்த 2009 சொன்னது.. நம்மவர்கள் கடவுளால் கூட நம்மவர்களை காப்பாற்றமுடியாது என்று. À Jaffna, dans la rue Thamarai située à Vannarpannai, un manguier a été vendu aux enchères pour quatre cent...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img