📢 உணவு, தண்ணீர், மருந்துகள், ரேடியோ, பணம் – உடனே தயார் செய்யுங்கள்!
ஐரோப்பிய குடிமக்களுக்கு “தேசிய ஆயத்த நிலை தினம்” அறிவிப்பு!
🛑 போர், இயற்கை பேரழிவு, சைபர் தாக்குதல், அணுக்கசிவு – எதிர்பாராத நெருக்கடிகளுக்கு தயாராகுங்கள்!
📍பாரிஸ், மார்ச் 27
💥 உயிர் பிழைப்பதற்காக 72 மணிநேரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எப்போதும் கையிலிருக்க வேண்டும்! இது ஐரோப்பிய ஆணையத்தின் கடும் எச்சரிக்கை! போர்கள், இயற்கை அனர்த்தங்கள், சைபர் தாக்குதல்கள், தொற்று நோய்கள் என பல அபாயங்கள் அதிகரித்து வரும் சூழலில் ஐரோப்பிய குடிமக்கள் நெருக்கடியை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது!
🚨 இனி, ஒவ்வொரு குடிமகனும் தனியாக 72 மணிநேரம் உயிர்வாழக்கூடிய “Survival Kit” வைத்திருக்க வேண்டியது அவசியம்!
🔴 அந்த Survival Kit-ல் என்ன இருக்க வேண்டும்?
✅ தண்ணீர் & உணவு
✅ மருந்துகள் & மூக்குக் கண்ணாடி
✅ முக்கிய ஆவணங்கள் நீர்ப்புகாத பையில்
✅ டோர்ச் லைட், பேட்டரி, கைத்தொலைபேசி சார்ஜர்
✅ திரவப் பணம், ரேடியோ, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி
✅ கத்தி, சிக்னல் ஒளி – அத்தியாவசிய பொருட்கள்!
🔥 “எந்த நேரத்திலும் நெருக்கடி ஏற்படலாம். மக்கள் தயார் இருக்க வேண்டும்!” – ஐரோப்பிய ஆணையர் ஹட்ஜா லஹ்பீப் (Hadja Lahbib)
⚠️ கொரோனா காலத்தில் மக்கள் கழிப்பறைக் காகிதத்துக்காக முண்டியடித்ததை நினைவில் கொள்ளுங்கள்! இப்போது நெருக்கடி வந்தால், நீங்கள் தயாரா?
💡 ஐரோப்பிய நாடுகள், பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில், இவ்வளவு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளன. உக்ரைன் போர், பொருளாதார அசாதாரண நிலை, மற்றும் மற்றொரு பேரழிவை எதிர்கொள்ள இப்போது ஆயத்தமாக இருக்கணும்!
🚀 அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் “தேசிய ஆயத்த நிலை தினம்” கொண்டாடப் பட உள்ளது – மக்கள் விழிப்புணர்வுடன் தயாராக இருக்க வேண்டும்!
⚡ உங்கள் Survival Kit தயார் செய்யுங்கள்! நெருக்கடியை எதிர்கொள்ள தயாராக இருங்கள்! 🛑
Full News : ஐரோப்பிய ஆணையகம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்களை நெருக்கடி கால ஆயத்த நிலைக்கு தயார்படுத்துவதற்கான வழிமுறையை முன்மொழிந்துள்ளது. போர், இயற்கை அனர்த்தங்கள், சைபர் தாக்குதல்கள், அணுக்கசிவுகள், தொற்றுநோய்கள் போன்ற நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஆயத்த நிலை மற்றும் முகாமைத்துவ உத்தி எனப்படும் இந்த முன்மொழிவு, ஒவ்வொரு குடிமகனும் குறைந்தது 72 மணிநேரத்திற்கு உயிர்வாழ்வதற்கான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஒரு பொதியைத் தயார்செய்யுமாறு பரிந்துரைக்கிறது.
“புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் மோதல்கள், சைபர் பாதுகாப்பு மற்றும் தகவல் கையாளுதலில் உள்ள அபாயங்கள், காலநிலை மாற்றம் மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் அதிகரித்துவரும் ஆபத்துகளுக்கு மத்தியில், சாத்தியமான எந்தவொரு நெருக்கடிக்கும் முகம்கொடுக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தயாராக இருக்க வேண்டும்” என்று ஆணையம் தெரிவித்துள்ளது. “உறுப்பு நாடுகளுக்கு எதிராக ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு சாத்தியம்” என்பதையும் அதன் முன்மொழிவில் நேரடியாகக் குறிப்பிட்டுள்ளது.
குடிமக்கள் குறைந்தது 72 மணிநேரத்திற்கு தங்களது உயிரைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் விதமாக “உயிர்வாழ்வதற்கான கருவியை” தயார் செய்துகொள்வதற்கு உறுப்பு நாடுகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று, இந்த விவகாரத்துக்குப் பொறுப்பான ஐரோப்பிய ஆணையர் ஹட்ஜா லஹ்பீப் (Hadja Lahbib) தெரிவித்துள்ளார்.
திடீர் அனர்த்த நிலைமையில் உயிர்வாழ உதவும் இந்தக் கருவியில் பொதி செய்து வைத்திருக்க வேண்டிய அவசியப் பொருட்களாக தண்ணீர், உணவு, அவசிய மருந்துகள், மூக்குக் கண்ணாடி, முக்கிய ஆவணங்கள் அடங்கிய நீர்புகாத பை, டோர்ச் லைட், பேட்டரி, கைத்தொலைபேசி சார்ஜர், திரவப் பணம், கத்தி, ரேடியோ, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி போன்றவை அடங்கும்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்திலும் இதற்கான விழிப்புணர்வைத் தூண்டும் “தேசிய ஆயத்த நிலை தினம்” ஒன்றை அறிவிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுவருகிறது. தேசிய நெருக்கடிகள், அனர்த்தங்களின் போது பீதியடையாமல், பதற்றப்படாமல் எதைச் செய்யவேண்டும் என்று மக்களுக்கு வழிகாட்டும் விழிப்புணர்வைத் தூண்டுவதே இதன் நோக்கமாகும். கொரோனா பெருந்தொற்று நோய் நெருக்கடியின் போது மக்கள் கழிப்பறை காகிதங்களை வாங்குவதற்காகப் பதற்றத்துடன் முண்டியடித்ததை நினைவுபடுத்தியுள்ள லஹ்பீப், இவ்வகையான பதற்றங்களை தவிர்க்க முன்கூட்டியே ஆயத்தமாக இருப்பது முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் போரைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை அடுத்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்களது பாதுகாப்பைப் பலப்படுத்தத் தொடங்கியுள்ளன. நெருக்கடி காலங்களுக்கு மக்களைத் தயார்ப்படுத்தும் இத்தகைய திட்டங்களைச் சில நாடுகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளன.