Friday, March 13, 2026
No menu items!
Home Blog Page 103

உங்கள் மகன்,மகள் மருத்துவர்கள் ஆவார்களா?

0

1980 to 1990 –கால கட்டங்களில் தமிழக நகர்புறங்களில் வாழ்ந்து வந்த அத்துனை மேல்தர மற்றும் நடுத்தரக்குடும்பங்களின் இலட்சியம், குறிக்கோள் ஒரே மாதிரியாக இருந்தது. அது “நான் எனது மகனை Doctor –ஆக்கிகாட்டுவேன். Doctor –ஆக்காமல் ஓயமாட்டேன்” என்பதே. 

அச்சமயம் இதை இலட்சியம் என்பதை விட ஒருவிதமான “வெறி” என்றே சொல்லலாம். இதற்கு காரணம்நிச்சயம் “பணமாக” இருக்க முடியாது. ஏன் எனில், அக்காலத்தில் 7 தலைமுறை உட்கார்ந்து சாப்பிடும்அளவிற்கு பணம் படைத்த மேட்டுக்குடி குடும்பத்தினர்கள் கூட தன் மகனை மருத்துவம் படிக்க வைக்கஇலட்சக்கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்தளவிற்கு ஒரு மருத்துவருக்கு சமூக அங்கீகாரம் மற்றும் உயர்தர மரியாதை அளிக்கப்பட்டது. Dotor சொன்னா சரியாத்தான் இருக்கும் என்ற எண்ணம் வெகுசன மக்களின் மனதில் புரையோடிக் கிடந்தது. ஒருசபையில் “மருத்துவர்” நுழைந்ததுமே அத்துனை பேருமே எழுந்து நின்றுவிடுவார்கள். 

இது 80 – 90 களில் நடந்த உண்மை நிலவரம். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முந்தைய காலக்கட்டங்களில்“மருத்துவத் தொழிலுக்கு” இந்தளவிற்கு மரியாதை இல்லை. அது ஒரு ரெண்டாந்தர சேவைத் தொழிலாகவேமக்கள் பார்த்தார்கள். ஒரு நாட்டு மருத்துவர் வீட்டிற்கே தேடிவந்து வைத்தியம் பார்ப்பார். 

மருந்தை தானே தயாரித்து புண்களை சுத்தம் செய்து பராமரிப்பார். காரணம் மருத்துவம் ஒரு சேவையாகபார்க்கப்பட்ட காலம் அது. சோதிடத்தில் சூரியன் என்பது மருத்துவம் (அ) அரசியலைக் குறிக்கும். சந்திரன்என்பது சேவையைக் குறிக்கும். நாட்டு வைத்தியம் இவ்விரண்டு கர்மாவின் கலவைகளாக இருந்த காலம் அது. 

ஆனால் இதே (சூரி+சந்) கர்மவினை பிரிட்டிஷ் ஆட்சியின் போது “மருத்துவராக” பரிணமிக்க வில்லை. மாறாக“Nurse” என்ற கீழ்நிலை மருத்துவப் பணியாக தன்னை உருமாற்றிக் கொண்டது. காரணம் அப்பணியில்சூரியனோடு சந்திரன் என்ற சேவைக் கர்மவினையும் கலந்திருந்தது. பிரிட்டிஷ் ஆங்கில மருத்துவர்கள்கீழ்நிலை மருத்துவப் பணியை நேரடியாக களத்தில் இறங்கி செய்யமாட்டார்கள். 

எமது தனித்துவமான ஜோதிட சேவைகளை பெற கீழுள்ள வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொள்ளுங்கள்…

எல்லா பணிகளுக்குமே அவருக்கென வேலையாட்கள் நியமிக்கப்பட்டார்கள். அதாவது தலைமை மருத்துவம்என்பது Policy & Decision Making என்ற அளவிற்கு மிக உயர்வாக கருதப்பட்டது. இதன் அடிப்படையில்கவர்னர், உயர்நீதிமன்ற நீதிபதிகள் விடுப்பில் செல்லும் போது அரசாங்க ஆணைகளில் கையெழுத்திடுவதுமற்றும் அரசாங்க காரியங்களுக்கான மேற்பார்வை செய்வது என்ற அளவில் ஆங்கில மருத்துவர்களின் பணிஇருந்தது. 

அச்சமயம் அரசு அதிகார மையத்தின் 3 –வது படிநிலையில் அவர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். 1947 –க்குபிறகான காலகட்டங்களில் கூட, குறிப்பாக 1990 –கள் வரைக்கும் கூட இந்த அதிகார நீட்சி தொடர்ந்தது. அரசாங்கப் படிவங்கள் மற்றும் விண்ணப்பங்களில் Green Ink Signature –உடன் கூடிய “Attestation” கொடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இத்தகைய மறைமுக அரசியல் அதிகாரத்தின் காரணமாகவே அவர்களுக்கு “White & white” Dress Code அக்காலத்தில் அளிக்கப்பட்டது. ஜாதகப்படி ஒரு ஆங்கில மருத்துவருக்கு 10-ம் பாவத்தோடு வேறெந்த விதகர்மவினைக் கலப்பும் இல்லாமல் “சூரியன்” என்ற ஒற்றைக் கர்மா சம்மந்தப்படுவதால் அவர்கள் எந்த நேரத்தில்வேண்டுமானாலும் அரசியலில் இறங்கி வெற்றி பெறமுடிகிறது. ஆனால் ஒரு சித்த வைத்தியர், அக்கு மருத்துவர், ஹோமியோ மருத்துவர் ஆகியோரால் இது சாத்தியம் இல்லை. 

பிரான்ஸில் 175,000€ உடன் ஈழ தமிழர் மாயம்!

0

175,000€ பணத்துடன் பிரான்ஸில் கோவில் கட்ட கொடுத்த காசு அபேஸ்! 

பிரான்ஸில் ஒரு அம்மன் கோவில் கட்டப்பட உள்ளதாகவும் அதற்காக கிட்டத்தட்ட 175,000€ பணம் மற்றும்நகை சேர்க்கப்பட்டுள்ளதுடன் அதன்பின்னர் கோவில் வேலைகள் எதிர்பார்த்தபடி தொடங்கவில்லை எனதெரிகின்றது.

காசை சேர்த்தவரும் மனைவியையும் கொஞ்ச நாளாக காணவில்லை எனவும்,காசு கொடுத்தவர்கள்புலம்பியவண்ணம் உள்ளனர்.கோவில் கட்டுற ஐடியாவிலிருந்து காசு சேர்க்க ஆட்கள் சேர்த்வரை குறித்தநபரின் மனைவியே மூளையாக செயற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

கருத்து: மனிசர் என்ன நினைக்கிறமோ அது நடக்கும்,கஷ்டப்பட்டு உழைத்தால் யாரும் முன்னாலவரலாம்,சந்தோசமாக இருக்கலாம்.ஆனால் இந்த சந்தோசம் காசு எல்லாம் கடவுள்தான் தாறார் என்றுஅப்பாவிதனமாக நினைத்து ஏமாறுபவர்கள் இருக்கும்வரை இப்படி ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.

இவர்கள் ஏமாற்றுகிற மொடல் இப்படிதான்.. சாதாரண குடும்பங்கள் மதிக்கிற , சமூகத்தில் செல்வாக்குள்ளஆனால் உள்ளுக்குள் மதம் சம்பந்தமாக பயப்பிடுற / அப்பாவியை மயக்கி தம் பக்கம் இழுத்துகொள்வார்கள்,பின்னர் அவரை வைத்து 10 பேரை சேர்ப்பார்கள்.. இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும்…சேர்த்துகடைசியில் இதுக்கு மேல போனா ஓவராயிடும் என்ற நிலை வர.. அப்படியே அடிச்ச காசோட காணாமல்போய்டு.. வேற எங்கயாவது இருப்பார்கள்..இல்லை திரும்ப வந்து காசு கொடுத்தவர்கள் தொட முடியாத அளவுஇருப்பார்கள்.

பாரிசில் பணம் கொட்டும் இந்த தொழில்

0


சுற்றுலா வழிகாட்டி சேவைகள்

பிரான்சில் பாரிஸ் ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். நகரத்தைப் பற்றிய ஆழமான அறிவு உங்களுக்கு இருந்தால், சுற்றுலாப் பயணிகளுக்கு அதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மறைக்கப்பட்ட பல விடயங்களை காண்பிக்கும்வகையில் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களை வழங்கலாம்.

இது வருடத்தின் 12 மாதங்களும் பகுதி நேரமாக செய கூடியதும் ஆனாலும் வருடத்துக்கு கிட்டத்தட்ட லட்சம்ஈரோக்கள் வரை இலகுவாக உழைக்க கூடிய ஒரு சொந்த தொழிலாகும்.உங்களுக்கு அடிப்படையாக தெரியவேண்டியது ஆங்கில பேச்சு மொழி , ப்ரெஞ்ச் மொழி.. 

முழுமையாக தெரியாவிட்டாலும் ஆர்வமாக தொழிலில் இறங்கினால்,3-6 மாதங்களில் இரண்டு மொழிகளும்பரீட்சயமாகிவிடும்.பிரான்சின் வரலாறு,பண்பாடு பாரம்பரியத்தை அவ்வவ்போது தெரிந்து கொள்ளுங்கள்.அதைஎவ்வாறு கோர்வையாக தேவைக்கேற்ப நீட்டி சுருக்கி சொல்ல தெரிந்து கொள்ளுங்கள்.. 

இது தொழிலில் இறங்கி நாலு பேருடன் கதைக்க வெளிக்கிட தானாக வரும்.ஏர்போர்ட்டில் வாகனத்திலஏத்திறதுல இருந்து ஹொட்டல் சாப்பாடு , தங்குமிடம் என்று பக்கேஜ் போட்டா அடுத்தகட்டத்துக்கு போயிட்டாபிறகு வருமானம் இன்னும் அள்ளும்,

இந்த தொழிலில் விளம்பரம் தேவையில்லை.சேவையை சரியாக கொடுத்து வாறவர்கள் மனதில் பதிய வைத்தால்சரி,அவர்களே பத்து பேருக்கு போய் சொல்லுவார்கள்.

பழைய பிரான்ஸ் சம்பவங்கள்,வரலாறுகள்,இன்றைய நிலைமைகள்,மக்கள்,பிரச்சினைகள் என சகலதும்கலந்து கட்டி அடிச்சா.. சுக்ரன் உங்க பொக்கட்டில் வந்து இருந்திடுவார்.

ஏற்கனவே பல இளம் தமிழர்கள் இறங்கியிருக்கின்றனர்.இந்த தொழில்  எல்லையற்றது,விரிவாக்கி கொண்டேபோகலாம்.வாழ்த்துக்கள்…

பாரிஸில் வாடகைக்கு : எது சிறந்த தெரிவு?

0

பாரிஸில் ஒரு வீட்டை வாங்குதல் அல்லது வாடகைக்கு: எது சிறந்த தெரிவு? Acheter une Maison à Paris ou Louer : Lequel Est la Meilleure Option ?

அறிமுகம்:

Acheter une Maison à Paris ou Louer : Lequel Est la Meilleure Option ?

பாரிஸ், பிரான்சில் ரியல் எஸ்டேட் மிகவும் பிரபலமான இடங்களில்  ஒன்றாகும். பாரிஸில் ஒரு வீட்டைவாங்குவது சிறந்ததா அல்லது வாடகைக்கு எடுப்பது சிறந்ததா என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? இந்தகட்டுரை அதன்  நன்மை தீமைகளையும் ஆராய்கிறது.

பாரிஸில் வீடு வாங்குதல் : Achat Maison à Paris

பாரிஸில் ஒரு வீட்டை வாங்குவது ஒரு பெரிய முதலீடாகத் தோன்றலாம், ஆனால் அது குறிப்பிடத்தக்கநன்மைகளைக் கொண்டுள்ளது. நீங்கள் நீண்ட கால நிலைத்தன்மையை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இதுகருத்தில் கொள்ள வேண்டிய ஒரு விருப்பமாகும்.

சொத்து மற்றும் முதலீடு | Propriété et Investissement 

வீடு வாங்குவது என்பது ரியல் எஸ்டேட் வைத்திருப்பதாகும். வாடகை செலுத்துவதற்கு பதிலாக, உங்கள்சொந்த சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள்.

ரியல் எஸ்டேட் கடன் | Crédit Immobilier

ரியல் எஸ்டேட் கிரெடிட் என்பது உங்கள் வாங்குதலுக்கு நிதியளிப்பதற்கான ஒரு முக்கிய அம்சமாகும் . பிரான்சில் குறைந்த வட்டி விகிதங்கள் இந்த விருப்பத்தை கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றன.

அதிக சுதந்திரம்: உரிமையாளராக, உங்கள் இடத்தின் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு உள்ளது. உங்கள்விருப்பங்களுக்கு ஏற்ப உங்கள் வீட்டை தனிப்பயனாக்கலாம்.

பாரிஸில் அபார்ட்மெண்ட் வாடகை | Location Appartement à Parisஅ

வாடகைக்கு இருப்பதும் ஒரு புத்திசாலித்தனமான விருப்பமாக இருக்கலாம். நெகிழ்வுத்தன்மை உங்களுக்குமுக்கியமானது என்றால், பாரிஸில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுக்கவும். 

நிதி நெகிழ்வுத்தன்மை: ஒரு குத்தகைதாரராக, சொத்தை பழுதுபார்க்கும் அல்லது பராமரிப்பதற்கானசெலவுகள் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

மொபைலிட்டி: நீங்கள் எதிர்காலத்தில் செல்ல திட்டமிட்டால் அல்லது பாரிஸில் எவ்வளவு காலம் தங்குவீர்கள்என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் வாடகைக்கு எடுப்பது சிறந்தது.

குறைந்த முன்கூட்டிய செலவுகள்: ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுப்பதற்கு பொதுவாக வீடுவாங்குவதை விட குறைவான முன்பணம் தேவைப்படுகிறது.

முடிவுரை:

பாரிஸில் வீடு வாங்குவது அல்லது வாடகைக்கு எடுப்பது உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதி இலக்குகளைப்பொறுத்தது. 

நீங்கள் நீண்ட கால பாதுகாப்பை எதிர்பார்க்கிறீர்கள் மற்றும் முதலீடு செய்ய முடியும் என்றால், ஒரு வீட்டைவாங்குவது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இருப்பினும், நீங்கள் நெகிழ்வுத்தன்மை மற்றும் உடனடி நிதிசுதந்திரத்தை விரும்பினால், வாடகைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம். 

பாரிஸில் இருந்து மக்கள் புறநகர்களு நோக்கி செல்லும் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பாரிஸ் கபே , பேக்கரி உணவக தொழில் தொடர்பான சில இரகசியங்கள்!

0

நீங்கள் சரியான வாய்ப்புகளை கண்டறிந்து, உள்ளூர் சந்தையின் தேவைகளை நிவர்த்தி செய்தால், பாரிஸில்ஒரு சிறு வணிகத்தைத் தொடங்குவது ஒரு நம்பிக்கைக்குரிய முயற்சியாக இருக்கும். பாரிஸில்வெற்றிபெறக்கூடிய சில ஒரு வணிக யோசனை

கஃபே அல்லது பேக்கரி ஒன்றை பாரிசில் தொடங்க விரும்பும் தமிழர்கள் இந்த பாரிஸ் முதலாளி சொல்லும் சில உத்திகளை மனதில் வையுங்கள்.

பிரெஞ்ச் மக்கள்  கோப்பி மற்றும் பேஸ்ட்ரிகளை அதிகம் விரும்புகிறார்கள். ஒருஅழகான கஃபே அல்லது பேக்கரியைத் திறப்பது லாபகரமான முயற்சியாக இருக்கலாம், குறிப்பாக நீங்கள்உயர்தர, தனித்துவமான உங்கள் பொருட்கள் சேவைகளில் கவனம் செலுத்தினால் இன்னும் நன்றாகஉழைக்கும் வாய்ப்பும் கிடைக்கும் , 

அங்கே முக்கியமான விசயமே கடையை திறப்பது அல்ல,ஏற்கனவே பல கடைகள் இருக்கின்றன.சேவைகள்/பொருட்கள் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் தரம் கூட கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தாலும் உங்களின்கடையில் நீங்கள் அவர்களுக்கு அவற்றை அளிக்கும் சேவையின் தரத்தை அதிகரிப்பதன் மூலம் Brand கட்டியெழுப்ப முடியும்.

இதற்காக நீங்கள் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம்.. உதாரணமாக பாரம்பரிய பாஸ்ரி வகைகளைகண்டறிந்து அவற்றை மீண்டும் பாரம்பரிய தயாரிப்பு முறைகளில் வழங்கலாம். பாரிசியன்கள் விரும்புவார்கள்.

ஒரு Theme முறை ஊடாக உங்கள் கடைக்கு ஒரு பாரிசியர்கள் விரும்பும் வடிவத்தை கொடுக்கலாம்.

allergen-free pastries. Gluten-free, vegan, and low-sugar என வித்தியாசமான நிறைய வகைகளில்தேர்வுகளை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம்.

பருவகாலங்களுக்கு ஏற்ற மெனுக்களை சிறப்பு கழிவாக வழங்கலாம் அல்லது சிறுது இலவச சாம்பிளாககொடுக்கலாம்.

புத்தகங்கள்,Art Paintings,பூக்கள் என்பவற்றை சேர்த்து நேர்த்தியாக விக்கலாம்..

பின்னணியில் சிறிய இசைகளை பாட விடலாம்.

Subscription Boxes போன்ற சில முறைகளை கொண்டு வருவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தங்கள்கடையை திரும்ப திரும்ப வர வைக்க முடியும்..

அவர்கள் உங்கள் கடையில் இருந்து கோப்பி குடிப்பது ஏதோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இருப்பது போன்றஉணர்வை கொடுக்க வேண்டும்.

தொழில் வெற்றி என்பது மக்கள் உணர்வுகளை உங்கள பக்கம் திருப்புவதுதான்.காசை நினைத்தீர்கள் என்றால் மக்களை ஒரு கட்டத்தில் தவற விட்டுவிடுவீர்கள்,மக்கள் போனால்,தொழில் இல்லை.ஆகவே தொழில் மட்டும் கவனம் வையுங்கள்,காசு தானாக உங்களை தேடி வரும்.அப்படி வருவதே நிலைக்கும்.

பாரிசில் நகை திருடன் கூறிய அதிர்ச்சி தகவல்!

0

பாரிசில் சிக்கிய நகை திருடன்,சொன்ன அதிர்ச்சி தகவல்கள்! காவல்துறை மயக்கம்! 

பாரிசில் தொடர்ச்சியாக நகைகளை மட்டும் கொள்ளையடித்து வந்த திருடன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளநிலையில் அவன் குற்றத்தை ஒத்துகொண்ட முறை பிரான்ஸ் காவல்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தான் நகைகளை மட்டும் கொள்ளையடிப்பதற்கான காரணம் நகை போடுகிறவர்கள் காசுவைத்திருப்பார்கள்,தனது திருட்டால் அவர்கள் வாழ்வு பெரியளவில் பாதிக்கப்படாது என கருதியதாகவும்,நகைமட்டும் திருடி சில முறைகளில் தேர்ச்சி பெற்றதாகவும் கூலாக கூறியிருக்கிறான்.

அத்துடன் நகைகளை விற்று வரும் பணத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கும் உதவி செய்திருப்பதாக கூறிய அந்ததிருடன்,பணம் எல்லாவற்றையும் உடன் உடனயே செலவழித்துவிடுவேன் எனவும் கூறியுள்ளான்.

பாரிஸ் லியோ திரையரங்கில் மோதல்! தமிழ் குழுக்கள் கைவரிசை

0

பிரான்ஸில் நேற்று வெளியான விஜய் நடித்த லியோ பட காட்சிகளின் போது இரு தமிழ் குழுக்களிடையேநடந்த வன்முறை காரணமாக தியேட்டர் கலவரப்பட்டுள்ளது.

பின்னர் பொலிசார் தலையிட்டு பிரச்சினைக்குரியவர்களை அப்புறப்படுத்தியுள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன. இது ஒரு விஜய் – அஜித் ரசிகர்கள் மோதலாக இருக்கலாம் என்றும் அல்லது இரு தமிழ்இளைஞர் குழுக்களிடையே ஆன மோதலாக இருக்கலாம் என கருத்தப்படுகின்றது.

குறித்த தமிழ் இளைஞர்கள் கத்தி வைத்திருந்தாகவும் சொல்லப்படுகின்றது.கத்தி குத்து சம்பவம்நடைபெற்றதாக வதந்திகள் பாரிசில் பரவிய போதிலும் முழுமையான எம்மால் தற்போதுவரை அதனைஉறுதிப்படுத்த முடியவில்லை.

உக்கிரமான வன்முறை காட்சிகளை கொண்ட லியோ படத்தை பார்க்க வந்துவிட்டு அமைதியாக திரும்பிபோனால் அது லோகேஷ் கனகராஜ்ஜின் யூனிவேர்ஸை LCU வை அவமதிப்பு போலாகிவிடும் என்பதால் குறித்தசம்பவத்தை பாரிஸ் தமிழர்கள் திட்டமிட்டு லியோவுக்கான Tribute ஆக செய்திருக்கலாம் என சினிமாவிமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

பாரிஸ் இளம் தமிழ் தாயார் ஒருவருக்கு புற்றுநோய்..விடப்படும் எச்சரிக்கை!

0
A medical staff member walks in the emergency unit at the military hospital Laveran in Marseille, France, September 18, 2020. REUTERS/Eric Gaillard

குறித்த பெண்ணுக்கு புற்றுநோய் ஏற்பட்டதுக்கு அதிகமான அவரால் பாவிக்கப்பட்ட உடலை அழகாக்கும் சில  இராசயனங்களும் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.

குறிப்பாக சுருள் கூந்தலை நேராக்குவதற்காக methylene glycol என்னும் ரசாயனம்பயன்படுத்தப்படுகிறது,இந்த மெத்திலீன் கிளைக்கால், பார்மால்டிஹைடு என்னும் ரசாயனத்தைவெளியிடக்கூடியது. இந்த போர்மல்டிகைட் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் எனவகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களே கவனம்… அந்தகாலத்தில் மஞ்சள் பூசுவார்கள் பெண்கள்..இந்த காலத்தில்தான் அவை புற்றுநோயைதடுக்கும் என கண்டுபிடித்தார்கள்..இன்று இவ்வளவு வசதி இருந்தும்,அறிவு இருந்தும் அறிவற்ற வீண் அழகால்கவரப்பட்டு இவ்வாறு அழிகிறார்கள்.. 

12 ராசிகளில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு இன்றைய ராசி பலன்கள்…

0

மேசம்: இன்று படத்துக்கு போவதால் தொழில்போட்டி குறையும்,பிள்ளைகள் லியோ பார்க்க ஆசைப்படுவதால்மனதில் சஞ்சலம் தோன்றும்.

ரிசபம் : வீட்டு பெண்களால் இன்று பணசெலவு உண்டாகும்,லியோ டிக்கெட் விலையை கேட்டுமயக்கமுறுவீர்கள்.

மிதுனம்: லியோ டிக்கெட் கிடைக்காத நண்பர்களால் சஞ்சலம் அடைவீர்கள்,லியோ க்ளைமாக்ஸ் நேரத்தில்வயிறு கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு 

கடகம்: பிள்ளைகள் நலனிலும் வளர்ச்சியிலும் அக்கறை இருப்பதால் லியோ படத்துக்கு அவர்களை கூட்டிசெல்லாமல் தனியாக  செல்வீர்.

சிம்மம் : கவர்ச்சிகரமான ட்ரெயிலை நம்பி படம் பார்க்க வந்துவிட்டோம் என துயர் அடைவீர்.லியோ படம்நினைத்த மாதிரி இல்லாததால் மனசோர்வு அடைவீர்.

கன்னி: லியோவுக்கு கூட்டி செல்வதாக கொடுத்த வாக்கை உங்கள் நண்பர்கள் நிறைவேற்றாதால் ஏமாற்றம்அடைவீர்.கோபத்துக்குள்ளாகுவீர்.

துலாம்: சாதுரியமாக வேலையிடத்தில் பேசி லியோ செல்ல நேரத்தை ஒதுக்குவீர்.எதிர்பார்த்த உதவிகள்எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும்.

விருட்சிகம் : பிரச்சினைகளில் இருந்து விடுபட அஜித் ரசிகர்களை வம்பிழுப்பீர். உடல் பிரச்சினைக்காகமருத்துவ பரிசோதனை செய்து கொள்ள நேரிடலாம்.

தனுசு: மனைவி பிள்ளைகளுடன் லியோ பார்க்க வெளிகிடுவீர்.மெட்ரோ பயண தடங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள்உண்டு.

மகரம்: 500 ஆ 1000 கோடி லியோ வசூல் பிரச்சினையில் அஜித் ரசிகர்களாக இருக்கும் உங்கள்நண்பர்களுக்கே உமக்கு எதிராக திரும்புவதால் மனசங்கடம் உண்டாகும்.

கும்பம்: உங்கள் பேச்சாற்றலால் லியோவுக்கு நன்றாக உருட்டி முட்டு கொடுத்து தாங்குவீர்.இதன் மூலம் விஜய்ரசிகர்கள் மத்தியில் மிகுந்த புகழடைவீர்.

மீனம்: லியோ பற்றி மற்றவர்களின் தப்பான விமர்சனத்தால் வேதனைபடுவீர்கள்,தியேட்டர் பயணங்களால்அலைச்சல் உண்டாகும்.செலவு அதிகரிக்கும்.

பிரான்சில் வீடு வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

0

பிரான்சில் வீடு வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

பிரான்ஸில் வீடு வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.பாரிஸ்பிராந்தியத்தில் வீடுகளின் விலைகள் குறைந்துள்ளதாகவும் ஆனாலும் மக்களுக்கு அதனை வாங்குவதற்குரியசக்தி வலு குறைந்திருப்பதாகவும் அரசு சார்பில் நடாத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் வங்கிகளூடாக மக்களுக்கு இலகு கடன்களை வழங்கி வீடுகளை வாங்க மக்களுக்கு உதவி செய்யும்திட்டங்களை முன்மொழியவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதற்கு 6 மாத கால அவகாசத்தை அரசு கேட்டுள்ளது.