இந்த உலகில் நாம் விரும்புவது,நம்மை விரும்புவது என்று ஒன்று தனியாக இல்லை.இங்கு இயங்கிகொண்டிருக்கும் இரு பொருட்களிடையிலான கவர்ச்சிவிசையே விருப்பமாகும்.இங்கு உள்ள எல்லா பொருட்களுக்கும் இடையிலும் ஒன்றுக்கொன்று ஒரு குறிப்பிட்ட கவர்ச்சி விசை இயங்கி கொண்டுள்ளது.ஆக எதனால் எதையும் எல்லாவற்றையும் இங்கு நாம் விரும்பும் வாய்ப்பை பிரபஞ்சம் கொடுத்துள்ளது. ஆனால் எல்லோரும் எல்லாவற்றையும் அடைய விரும்புவதில்லை.
விருப்பம் என்ற கவர்ச்சி விசை தொழிற்பட இரு துருவங்கள் தேவை! அதாவது விரும்புவர்,விரும்பப்படும் பொருள் என்ற இருமைகள். இருவருக்கிடையான கவர்ச்சியே விருப்பமாகும்.அந்த விருப்பமான கவர்ச்சிவிசை அதிகமாக இருக்கும் போது கவரப்படும் பொருள் அடையப்படுகின்றது.இங்கு எல்லாவற்றிக்கும் குறிப்பிட்ட சக்தி உண்டு,
உதாரணமாக ஒரு கதையாக சொல்லிவிடலாம். நீங்கள் ஒரு பெண்ணை பார்க்கிறீர்கள்,உங்களுக்கு பிடித்துவிடுகின்றது.உங்களின் விருப்ப கவர்ச்சி விசை அந்த நொடியிலேயே அவளை ஈர்க்க ஆரம்பித்து விடுகின்றது.உங்களின் விசையால் உந்தபட்டு அவளின் விருப்ப கவர்ச்சி விசை உங்களை நோக்கி திரும்பினால் உங்களுக்கு வேலை சுகம்!
குறைந்த நேரத்தில் நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அடைந்து கொள்வீர்கள்! இல்லாது அந்த பெண்ணுக்கு கவர்ச்சி எதிர்திசையில் இருந்தால்,நீங்கள் இன்னும் அதிக கவர்ச்சி விசையை அதிக காலத்திற்கு கொடுக்க வேண்டியிருக்கலாம்.பின்னர் உங்களின் பெரு விருப்ப கவர்ச்சி கொண்டு அடைந்தாலும் அதனை தக்க வைக்க வாழ்நாள் முழுக்க உங்கள் கவர்ச்சி விசை கொண்டு போராட வேண்டியிருக்கலாம்.
அந்த பெண்ணின் பக்கம் இருந்து பார்த்தால் தனது எந்தவித விருப்ப கவர்ச்சி சக்தியும் செலவழிக்காமல் ஒரு ஆணை தன்னை அடைய வைத்தால் , பெண்ணிடம் செலவாகாமல் இருக்கும் அதீத விருப்ப கவர்ச்சி சக்தி அந்த அந்த ஆணை,குடும்பத்தை/தனிப்பட்ட ரீதியில் பெரிய விடயங்களை செய்ய பயன்படலாம் அல்லது பலவீனமாகி அழிவு பாதைக்கும் செல்லவும் பயன்படலாம்.
அவை அந்த குறிப்பிட்ட ஆணுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பும் உண்டு.அல்லது பிடித்த நேரத்தில் ரொக்கட் போன்று அந்த இடத்தில் இருந்து கிளம்பி விலகி செல்லும் நிலை கூட ஏற்படலாம்! சிலர் அந்த சக்தியை பயன்படுத்தி ஆண்களின் பெரும் சொத்து/பொருட்களை/நாட்டை அடைந்தமை பற்றி வரலாற்றில் பல கதைகள் உண்டு.
இதே போல்தான் பொண்ணோ,பொருளோ எல்லாவற்றிலும் கவர்ச்சி விசை ஒரே மாதிரியே தொழிற்படுகின்றது.நீங்கள் உங்கள் விசையை பிரயோகித்து அவற்றை உங்களை நோக்கியோ அல்லது விலகியோ அசைத்து கொள்கிறீர்கள். சில பல மனிதர்கள் தங்கள் சக்தியை தங்களுக்கு பிடிக்காதது மேல் பிரயோகித்து அவற்றை செலவழித்து கொண்டேயிருப்பதும் உண்டு.
ஆகையால் நமது கவர்ச்சி விசைகளையும் நம்மால் தூண்டப்படும் பொருட்கள்/மனிதர்கள் கொண்டுள்ள கவர்ச்சி விசைகள்,அதன் திசைகள் குறித்தும் கணித்து அதிக கவனத்துடன் எமது விசைகளை பயன்படுத்தி கொள்ளும் போதே எமது சுய இயங்கியலை நாம் சரியான கட்டுபாட்டில் வைத்து கொள்வோம்…