Villeurbanne (Rhône), France – பிரான்ஸ் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம். ஞாயிற்றுக்கிழமை மதியம், லியோன் அருகே உள்ள Villeurbanne நகரில் (rue Charles-Montaland, Gratte-Ciel பகுதி) ஒரு வீட்டில் 37 வயது தாயும், அவருடைய இரண்டு குழந்தைகளும் (வயது 4 மற்றும் 6) உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.பல நாட்களாக இந்தக் குடும்பத்தினர் தொடர்பு கொள்ளாததால், பாட்டி கவலை தெரிவித்தார். அதன்பின் ஒரு தோழி வீட்டிற்கு சென்று இந்த துயரச் சம்பவத்தை கண்டுபிடித்தார்.
“Closed-door tragedy” என்கிற கோணம் வலுப்பெறுகிறது
வீட்டின் கதவுக்கு வெளிநோக்கி உடைக்கப்பட்ட தடயங்கள் எதுவும் இல்லை.
போராட்டத்தின் சுவடுகள் எதுவும் இல்லை.
உடலருகில் சிரிஞ்ச் (syringe) கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், suicide அல்லது மன அழுத்தம் காரணமான சம்பவம் என்ற கோணம் தற்போது விசாரணையாளர்களால் பரிசீலிக்கப்படுகிறது.
போலீஸ் தரப்பின் தகவலின்படி:
தாயார் முன்பு domestic violence-இல் சிக்கி, கணவரிடமிருந்து பிரிந்திருந்தார்.
2024 நவம்பரில் தந்தைக்கு எதிராக harassment case பதிவு செய்யப்பட்டது.
அவர் அல்ஜீரியாவிலிருந்து தப்பி, முதலில் Switzerland சென்றார். பின்னர் தனது அத்தை வீட்டில் தங்கி, சமீபத்தில் Villeurbanne-ல் குடியேறினார்.
அக்கம் பக்கத்தினரின் அதிர்ச்சி
“இங்கு 22 வருடமாக வசிக்கிறேன். மிகவும் அமைதியான இடம். இத்தனை சிறிய வீட்டில் இவ்வளவு இளம் குழந்தைகள் வசித்ததை தெரியவில்லை. அவர்கள் இறந்துவிட்டதாகக் கேட்பது அதிர்ச்சி அளிக்கிறது,” என ஒரு அண்டை வீட்டுக்காரர் கூறினார்.Villeurbanne வழக்கை பிரான்ஸ் ப்ராஸிக்யூட்டர் Thierry Dran தலைமையில் விசாரணை நடக்கிறது. அவர் கூறுகையில், மூன்றாம் நபரின் தொடர்பு இல்லை என ஆரம்பத்தில் கருதப்படுகிறது.

