பாரிஸ் நகரின் உலகப் பிரசித்தி பெற்ற Louvre அருங்காட்சியகம் இந்த ஞாயிற்றுக்கிழமை காலை பெரிய திருட்டின் இலக்காக மாறியுள்ளது. முழுக்க முகம் மறைத்த குற்றவாளிகள் குழு, Rue de Rivoli பகுதியிலிருந்து உள்ளே நுழைந்து, Napoléon மற்றும் Impératrice Joséphine அவர்களுக்கு சொந்தமாக இருந்த அரிதான நகைகள் பலவற்றை திருடிச்சென்றனர்.
📌 எப்படி நடந்தது இந்த கொள்ளை?
- குற்றவாளிகள், அருங்காட்சியகத்தின் Seine ஆற்றங்கரையில் நடைபெற்று வந்த புதுப்பிப்பு பகுதியால் பாதுகாப்பு குறைந்திருந்த பகுதியைத் தேர்வு செய்தனர்.
- அவர்கள் freight elevator (சுமை ஏற்றும் லிப்ட்) வழியாக நேராக Apollo Gallery (Galerie d’Apollon) எனப்படும் நகை மற்றும் அரச மரபுப் பொக்கிஷங்கள் வைக்கப்படும் அறைக்குள் சென்றனர்.
- கண்ணாடி vitrine-களை உடைத்து, மாளிகையின் மிக முக்கியமான ஒன்பது வரலாற்று முக்கியத்துவமுள்ள நகைகள் – செயின், பிரோச் (broche), டயாரா, மற்றும் பிற அணிகலன்கள் ஆகியவை திருடப்பட்டுள்ளன.
💎 எது பாதுகாப்பாக உள்ளது?
- மிகப் பெரும் மதிப்புடைய “Regent Diamond” (140 carats) – Louvre-இன் முக்கியமான வைரம் திருடப்படாமல் பாதுகாப்பாக உள்ளது என்று உள்ளக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
- ஆனால், எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதற்கான சரியான மதிப்பீடு இன்னும் வெளியாகவில்லை.
🚨 காவல்துறை விசாரணை
- குற்றவாளிகள் TMax ஸ்கூட்டரில் A6 autoroute நோக்கி தப்பிச் சென்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
- Ministre de la Culture Rachida Dati, இடத்தில் உயிர்ச்சேதம் இல்லை என்றாலும், இது பிரான்சின் patrimoine historique-க்கு நேரடியான தாக்கம் எனக் கூறியுள்ளார்.
- Laurent Nuñez (Ministre de l’Intérieur) இன்று மாலை ஊடகங்களுக்கு விசாரணை தொடர்பான தகவல்களை அறிவிக்கவுள்ளார்.
😨 சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பதற்ற நிலை
சம்பவம் நடந்தபோது Louvre உள்ளிருந்த பயணிகள் அலறியோட, கண்ணாடி கதவுகளை தட்டியபடி வெளியேற முயன்றனர். “போலீசார் பாம்பிட் (glass pyramid) அருகே ஓடிக்கொண்டிருந்தார்கள், கதவுகள் பூட்டப்பட்டதால் மக்கள் பீதியில் கத்தினர்” என Kacie என்ற பயணி X-ல் பதிவு செய்தார்.
🏛️ ஏன் Apollo Gallery முக்கியமானது?
- Louvre அருங்காட்சியகத்தின் மிகத் திறன்பாக பாதுகாக்கப்படும் இடங்களில் ஒன்றான Apollo Gallery, பிரான்சின் ராணி, பேரரசர் நகைகள், தங்கப் பொருட்கள் மற்றும் வரலாற்று epaulettes ஆகியவை வைக்கப்பட்டிருக்கும் பகுதி.
- இது 2020 ஜனவரி 15 அன்று புதுப்பிப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது.
- Advertisement -

