Read More

spot_img

பாரிஸில் கைதான தமிழர்கள் தொடர்பில் தகவல்!

பாரிஸ் கலவரங்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளையோர்கள் முழுமையாகவிடுவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.பெற்றோர் சந்திப்புகளின் பின்னர்,சில எச்சரிக்கைகளுடன் கூடியவகையில் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே எந்தவொரு வழக்குகளும் இல்லாத நிலையிலும் அவர்களின் வயதை கருத்தில் கொண்டும்எதிர்காலங்களில் சிக்கினால் என்ன நடக்கும் என்ற தீவிரமான எச்சரிக்கைகளுக்கும் பின்னரே வழக்கில்இருந்து பெற்றோர் சகிதம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பாரிஸ் வாசியான தமிழர் கருத்து தெரிவிக்கையில் வசிக்க வந்த இடங்களில் பெயரைகெடுக்காமல் இருப்பதுதான் புத்திசாலிதனம்,என்ன குழப்படி விடுறது என்றாலும் ஊருக்கு போய் விட்டுகொள்ளுங்கள்,இங்கே இருந்து அடுத்தவர்கள் பெயரையும் சேர்த்து கெடுக்காதீர்கள், அவனவன் 1000 பிரச்சினைகளுடன் கவலைகளுடன் வாழ்க்கையை கொண்டு செல்கிறான் என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img