நாம் வாழ்ந்து வீழும் உலகில் எல்லாவற்றையும் நேரம்தான் முடிவு செய்கின்றது என்ற ஒரு கருத்துலகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றோம்.அதனாலேயே நேரத்தின் பின்னால் ஓட வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்த என்று சொல்லி கொண்டனர்.இவ்வாறே தொலைபேசி,தொலைகாட்சி என்று வரிசையாக நேரத்தை மிச்சப்படுத்த என்று பயன்படுத்த தொடங்கியவைதான் இன்று அவர்களின் நேரத்தை விழுங்கி கொண்டுள்ளன.
உண்மையில் நேரத்தை மிச்சப்படுத்த முடியுமா..? இல்லை..காரணம் நேரம் என்று ஒன்று இல்லை..அது பல்வேறு தளங்களில் அதிர்ந்து இயங்கி கொண்டிருக்கும் பிரபஞ்ச ஆற்றலில் உண்டான மாயையின் பக்க விளைவு பொருள். நீங்கள் இயற்கை கொஞ்சும் மலைகள்,சிறு மழை என ஒரு சூரிய உதயத்தின் போதும் சரி,மழலை குழந்தை சிரிப்பின் போதும் சரி,ஒரு தலை காதலியின் ஒரு நிமிட தரிசனத்திலும் சரி,பிடித்த இயற்கை உணவை உண்ணும் போதும் சரி,மரநிழலில் இருக்கும் போதும் சரி உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் போதும் சரி,தியானம் செய்யும் போதும் சரி தேசத்திற்காக போராடும் போது சரி…உங்கள் உழைப்பை 100% கொடுக்கும் போதும் சரி,மாலையில் வியர்வை சிந்தி விளையாடும் போதும் சரி,பிடித்த நண்பர்களுடன் இருக்கும் போதும் சரி நீங்கள் நேரத்தை மறந்து போயிவிடுவீர்கள்.அங்கு நேரம் கொல்லப்பட்டுவிடும்,அதாவது T=0 நேரம் காணாமல் போகின்றது.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சி என்று சொல்லப்படும் உலக இயங்கியலும் இயற்கையில் இருந்து கற்றதை கொண்டு இயற்கையை வேலை தாண்டி நாம் அதனை செய்ய வேண்டும் என்ற அகங்காரம் மனித இனந்திற்கு ஏற்படுள்ளது.இதனால் நேரத்தை காணாமல் போக செய்யவே ஏதோ ஏதோ எல்லாம் கண்டுபிடிக்கிறார்கள் என்று சொல்லி கொள்கிறார்கள் ஆனாலும் அவர்களை இதுவரை அதில் வெற்றி பெறவில்லை.
உதாரணத்துக்கு நீங்கள் தொலைதூர விமான பயணம் தற்போதைய வளர்ச்சியில் சில மணி நேரத்தில் பூமியின் எப்பாகத்தில் இருந்து எப்பாகத்திற்கும் போய் வரலாம் . ஆனால் அதை செய்யும் போதும் அல்லது குறிப்பிட அந்த செயற்பாடுகளுக்கு தயாராகும் போதான மனழுத்தம் அதனை சுற்றியுள்ள அழுத்தம்,இந்த நேர குறைப்பிற்காக விஞ்ஞானம் வளர்ந்ததை திரும்ப கீழே தள்ளி இதனால் உண்டான மன அழுத்ததிற்கு மருந்து கண்டுபிடிக்க இயற்கை அவர்களை அனுப்பி விடும்.
இன்னொரு உதாரணமாக நீங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு நடந்து சென்றால் குறிப்பிட்ட நேரம் எடுக்கும்,ஆனால் இதே வேகமாக குறைந்த நேரத்தில் செல்ல வேண்டும் என்று நீங்கள் நேர்ந்தெடுக்கும் போக்குவரத்து முறையில் உங்கள் உயிரை இழக்கும் சந்தர்ப்பங்களும் காணப்படும்.நேரத்தை மிச்சப்படுத்தும் போரில் வீதி விபத்துக்கள் அதிகரித்து அவற்றை சமபடுத்தி விடுகின்றன.
நோய் மரணங்களை தடுக்க விஞ்ஞானம் மருந்து கண்டுபிடித்தால்,ஒரு பக்கம் நோயாளிகள் காப்பற்றப்பட்டாலும் இன்னொரு பக்கம் மருந்தின் பக்கவிளைவுகள் நோயாளிகளை காவு வாங்கி கொள்ளும்.போருக்கு பிள்ளையை அனுப்பாமல் வெளிநாடு அனுப்பினால் பணம் அதிகமாக உழைத்து இருக்கலாம் ஆனால் அதே பணத்தால் நான்கு சொந்தம் சண்டை போட்டு பிரிந்து இருக்கும்,அதே வீட்டு பிள்ளைகள் சோம்பேறிகளாகி கெட்டு குட்டிசுவர் ஆகியிருப்பார்கள்.
நிறைய காலம் இருக்க வேண்டும் பாதுகாப்பு வேண்டும் என்று உள்ள சீமெந்துகளை போட்டு இயற்கை சமனிலையை புறக்கணித்து வீட்டை கட்டலாம்,ஆனால் அவற்றால் வீடுகள் உள்ள உலகத்தின் ஆயுள் குறைந்து போய்விடும்! அல்லது சீமெந்து வீட்டு வெட்கை பிள்ளை பிறக்காமல் சந்ததியை அழித்து விடும்,பெயின்ட் போன்ற பல இராசயனங்கள் நோய்களை உருவாக்கி கொன்றுவிடும்.ஆக மொத்ததில் அதிக காலம் இருக்க வேண்டும் என்று வீட்டை கட்டலாம்,ஆனால் வீட்டை பார்க்க நீங்கள் அதிக காலம் இருக்கமாட்டீர்கள்.
நீங்கள் அதிக காலம் இருக்க வீட்டின் ஆயுள் காலம், நீங்கள் செய்யும் வேலைகளின் காலத்தை குறையுங்கள்,உதாரணமாக உங்கள் மூச்சு எடுக்கும் காலத்தை நீங்கள் குறைக்கும் தியான முறை உங்களை அதிக காலம் நோய் இல்லாமல் வாழ வைக்கும்,உங்கள் மனதை காலத்தின் மாயையில் இருந்து விடுதலை பெற உதவும்! சாப்பிடும் போது மெதுவா சாப்பிடுங்கள் இலகுவாக செமிபாடு அடையும்.நோய்கள் அண்டாது.வாசிக்கும் போது பேசும் போதும் நடக்கும் போது வாகனங்களை ஓடும் போதும் அதற்கு கொடுக்கும் கால மாத்திரையை குறையுங்கள் உங்களின் மன இறுக்கம் காணாமல் போய்விடும்.நேரத்தை குறைக்க என்று சென்ற நவீன உலகத்தின் மிகப்பெரிய வியாதியாக மன இறுக்கம் மாறியுள்ளது.மனம் இறுகினால் பின்னர் எல்லாமே இறுகிவிடும்.
Fast food,hybrid seeds என நேரத்தை மிச்சப்படுத்த என்னத்தை மனித இனம் ஆரம்பித்தாலும் அவர்கள் ஆரம்பிப்பதிற்குள்ளேயே அதற்கான வெடியை அதாவது நேர கணிப்பு குண்டை இயற்கை வைத்து விடுகின்றது…ஒரு பக்கம் நேரத்தை மிச்சப்படுத்துவதாக மனித இனம் ஓடிக்கொண்டிருக்கும் போது அந்த குண்டு வெடித்து அவர்களை தொடங்கி இடத்தில் கொண்டு வந்து விடுகின்றது.ஆக இயற்கை எதிரான போராட்டத்தில் மனித இனம் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கின்றது.
இன்று விஞ்ஞானத்தின் உச்ச வளர்ச்சி என்று பீற்றி கொள்ளும் பாடமாக்கி பாஸ் பண்ணிய படித்த வர்க்கம் மனித இனத்தை செவ்வாய்க்கு கொண்டு செல்ல போகிறோம் என்கிறார்கள்.காலம் அவர்கள் வாயாலேயே சொல்ல வைத்து விடுகின்றது ஒன்று பூமி அழிய போகின்றது அல்லது செவ்வாய் பூமியானல்,பூமி செவ்வாயாக போகின்றதா என்று!
இல்லாத நேரத்தை இல்லாமல் செய்வதுதான் இலக்கு அதற்கான வழி இயற்கை நோக்கியே இருக்கின்றது.ஆனால் மனித இனம் அதற்காக எதிர்திசையில் செல்கின்றது.செல்ல வைக்கப்பட்டு கொண்டுள்ளது.இயற்கை தனது பக்கம் zero வைத்து கொண்டு எதிர்திசையில் முடிவிலியை வைத்துள்ளது.ஆக விஞ்ஞான ரீதியாக பார்த்தாலும் இயற்கை பக்கமாக திரும்பி நடப்பதுதான் புத்திசாலிதனம்.இல்லையெனினும் எப்படியும் எங்கு சுத்தியும் கடைசியில் இயற்கையிடம்தான் வரவேண்டும்.