Read More

பிரான்ஸ்: மாணிக்க பிள்ளையார் திருவிழாவில் மோசடி! வெளிப்படுத்திய நபர்!

பாரிஸில் அண்மையில் பெருமெடுப்பில் நடந்து முடிந்த மாணிக்க பிள்ளையாரை கோவில் திருவிழா தொடர்பாக ஒருவரின் விமர்சனம்,சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட கருத்தை அப்படியே தருகிறோம்..உங்களின் கருத்துக்கள்,விமர்சனங்களை கீழே நீங்களே தெரிவிக்கலாம்.

அண்மையில் நடந்து முடிந்த பாரீஸ் பிள்ளையார் கோயில் திருவிழா ஒட்டிய தமிழர் தெருவிழா என ஒரு குறுப் செய்த,செயல்பட்ட பல விஷயங்கள் முகம் சுழிப்பவையாக அமைச்சிருந்தது…நம்மிடம் அனுமதியிருக்கு என்னும் நோக்கில் வெளியில் இருந்து கடைகள் போடக்கூடாது என்னும் கட்டளையும்,அவ்வாறு போடுபவர்கள் தங்களிடம் பணம் செலுத்த வேணும் என்னும் மிரட்டலும் சமூகமாக முன்னேற விடாது தனி நபர்கள் சுயலாபம்…

- Advertisement -

ஒரு கோயில் திருவிழா என்பதே ஊர் கூடி மகிழ்த்திருப்பதே ஆகும் அதனையும் விலைபேசும் அளவுக்கு பணம் மீதான ஆசை அதிகரிச்சு கிடக்கு…மக்கள் வாழ்விடத்தில் மேடையை போட்டு இரவு இரவாக பாட்டு,குடி,கும்மாளம் என அட்டூழியம் செய்ததன் விளைவு பல முறைப்பாடுகள் பாரீஸ் 10நிர்வாகத்துக்கு போயிருக்கு என்றார் விஷயம் தெரித்த வட்டார ஆள்…

கோயில் இருப்பது 18ஆம் நிர்வாகம் ரோட்டுக்கு அங்கால,தங்களுக்கு காசு கொடுக்காதவன் எல்லாம் ரோட்டுக்கு அந்த பக்கம் போ என சொல்லியிருக்குறார்கள்…அதிலும் உச்சமாக அன்னதானம் இதில் வைச்சு கொடுக்க வேணாம் எங்கள் சாப்பாட்டுக்கடைக்கு ஆட்கள் வரமாட்டீனம் என சோறு கொடுத்த நபர்கள் விரட்டப்பட்டார்கள்,சர்பத் கொடுக்க கூடாது எங்க கடை வியாபாரம் கெடுகிறது எனவும் சொல்லியிருக்குறார்கள்….

25 வருடம் மேலாக சுமூகமாக நடந்த தேர் அண்மைய இரண்டு ஆண்டுகள் மட்டும் ஒரு நிர்வாகம் என சங்கம் என கட்டுப்பாடுகள் விதிப்பதும்,தாங்கள் நினைப்பதைத்தான் செய்ய வேனும் என மல்லுக்கு நிற்பது எதிர்காலத்தில் ஒன்னும் இல்லாமல் போக வாய்ப்புக்கள் அதிகம்…ஒரு பக்கம் தென்னிந்திய மேடை பாடகர்கள் கூத்தாட்டம் போட,அடுத்த 100 மீற்றரில் ஈழ இசைக்குழு என அவர்கள் மேடை போட,உங்களுக்கு இங்க போட முடியாது அங்கால போய் போடுங்க என கலைச்சு விட்டு காலம் காலம் மேடை போட்ட இசைக்குழு பாலத்துக்கு கீழாக மேடை போட்டது துயரம்…

- Advertisement -

லாசப் வியாபரம் முடிச்சு போன ஒன்று பெரிதாக மக்கள் வருவதில்லை பிரச்சினை விலை அதிகம் கொரனாவுடன் கூட்டிய மரக்கறி விலைகள் கூட இன்னும் அப்படியே இறக்காமல் இருக்கு,அது போக பார்க்கிங் அறவேயில்லை அதன் காசும் அதிகம் இப்ப…பாரீஸ் புற நகரங்களில் கடைகள் அதிகமாக வந்து விட்டது அங்கு போட்டியாக விலைக்கழிவுகள் ஒவ்வெரு நாளும் போடப்படுகிறது,பார்க்கிங் இலவசம் ….

இவற்றை முதலில் நிவர்த்தி செய்து வியாபரம் பாராமல் எதோ கோயில் திருவிழா மூனு நாளில் கோடிகள் அள்ளிடலாம் என நினைப்பது முட்டாள்த்தனம்…தெருவ சோடனை செய்த காசு 18ஆயிரம் யூரோவாம் நாலு சாறி இந்த விலையா என ஆச்சரியப்படுறார் உள்ளக நிர்வாகி..

தென்னிந்திய கலைஞர்கள் வர,போக,தங்க என 10ஆயிரம் யூரோவாம் தண்ட செலவு என்றார் பொன்ஷர் கொடுத்தவர்…அத விட மினி பார் 18 கிட்ட திறத்து நடந்த,நாலு குறுப் சண்டையும் நடந்த தமிழர்கள் கொண்டாட்டம் மோதல் இல்லாமல் முடிச்சால் தான் ஆச்சரியம் பாருங்க….இனி அதே இடத்தில் அண்ணன் திலீபன் படத்த வைச்சு அழுவாங்க இதே கூத்தடிச்ச தமிழ் தேசிய விடிலடிச்சான் குஞ்சுகள்…இருப்பதை எல்லாம் அழிப்பது என்பதுதான் முதல் இலக்கா செய்திட்டு இருக்கு இந்த போக்கத்த கோஷ்டி.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Chargement des actualités de Capital.fr...